Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-037


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-037

பிரதி புதன் கிழமை தோறும்

தம்புடு ஸ்வாமிகள்

ஒவ்வொரு வாரமும் "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா" தொடரில் பக்தர்களின் வாழ்வில் நடந்த மஹாபெரியவா அற்புதங்களை சமர்ப்பித்து வந்தேன். இந்த வாரம் மஹாபெரியவளுடனேயே இருந்து வாழ்ந்த சன்யாசி தம்புடு ஸ்வாமிகள் அவரை பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்.

தம்புடு ஸ்வாமிகளுக்கு என்பது வயதுக்குமேல் ஆகியிருக்கும். காஞ்சி மடத்திற்கு சென்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். மஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு பின் புறம் இருக்கும் ஒரு அறையில் எந்த நேரமும் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருப்பார். யாராவது பக்தர்கள் அதிஷ்டானத்தை ப்ரதக்ஷிணம் செய்யம் பொழுது தம்புடு ஸ்வாமிகளை நமஸ்கரிக்க சென்றால் போ போ என்று துரத்துவார். இந்த அனுபவம் உங்களில் பலருக்கு ஏற்பட்டு இருக்கும்.

இவருக்கு தம்புடு என்று பெயர் வரக்காரணம் காஞ்சி மடத்தில் அண்ணன் தம்பி இருவர் இருந்தனர். தம்புடு ஸ்வாமிகள் தம்பி ஆனதால் இவரை தம்பி ஸ்வாமிகள் என்று அழைக்க ஆரம்பித்து தம்புடு ஸ்வாமிகள் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இப்பொழுது ஜீவாத்மாவாக நம்மிடையே இருந்தாலும் இந்த பூமியின் சம்பந்தமே வேண்டாம் என்று ஜீவன் முகத்தராகவே வாழ்ந்து வருபவர். இவரை தரிசனம் செய்தாலே நமக்கு பிரபஞ்ச சக்தி அனுக்கிரஹம் செய்யும். இந்தஒரு காரணத்திற்காகவே இந்த தொடரில் தம்புடு ஸ்வாமிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

ஓர் ஜீவன் முகத்தரை சேவிப்பது அவ்வளவு விசேஷம். உங்களுக்கு மஹாபெரியவாளும் அனுக்கிரஹம் செய்வார். தம்புடு ஸ்வாமிகள் சென்ற வருடன் ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி முக்தி அடைந்தார் என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி மூலம் சாமிகளை தரிசனம் காணுங்கள்

https://www.youtube.com/watch?v=FjiYACs5A-g

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square