Featured Posts

Thrilling Experience


கோ மாதா பூஜையின் பொழுது அந்த மஹாலக்ஷ்மியே தன் சார்பாக அனுப்பிய கோ மாதா

சாணு புத்திரனின் குரல் பாற்கடலையும் எட்டிவிட்டதோ

உணர்வுகள்

(From the desk of GR)

நம்முடைய இந்து மதம் ஒன்றுதான் பசுவை வேத காலத்தில் இருந்தே இறைவனுக்கு இணையாக பார்க்கிறது. பார்ப்பது மட்டுமல்ல அன்றிலிருந்து இன்று வரை நம்முடைய முன்னோர்களும் நமது பெற்றோர்களும் இந்தக்கருத்தை சொல்லி சொல்லி தான் நம்மை வளர்த்திருக்கிறார்கள்.

நாமும் பசுவை அப்படித்தானே பார்க்கிறோம். பசு மஹாலக்ஷ்மி இணையானவள்..ஒரு தாய்க்கு சமம் ஆனவள்.எனக்கு தெரிந்து பசு ஒன்றுதான் மனிதர்களைப்போலவே போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை உடையது. பசு தான் பிறந்து வளர்ந்த ஒரு வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் மனிதர்களை போலவே கண்ணீர் விட்டு அழும். இந்த காட்சியை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம்.

எந்த ஒரு மிருகம் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மைகளை கொண்டிருக்கிறதோ அந்த மிருக வதை ஒரு கொலை குற்றத்திற்கு சமம். அது மட்டுமல்ல. ஜென்மாந்திரத்து பாவம் நம்மை சூழுந்து கொள்ளும்.இந்தப்பாவாம் நம்முடைய குழந்தைகள் மேலும் வடியும்..

இதை படித்து விட்டு பசுவின் உணர்வுகளை மதிப்போம்.சாணு புத்திரன் குரலுக்கு செவி மடுத்து அவர் குரலுக்கும் கரங்களுக்கும் வலு சேர்ப்போம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

.

என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்

******

சத்யம் சத்யம் சங்கர சாந்நித்யம் பெரியவா சரணம். January 22, 2017

இன்றைய தினம் ஸ்ரீசரண ப்ரார்த்தனை ஆனந்தத்தைத் தந்தது. ஆம். கோ மாதாக்கள் காக்கப்பட வேண்டும். நாட்டு மாடுகளைக் கொன்று குவிக்கும் கொலைகளங்கள் முற்றிலுமாக அகற்றப் பட நாம் அனைவருமாக கோ மாதாவை ப்ரார்த்திப்போம் என்று அனைவரிடமும் நேற்றைய தினம் வேண்டிக் கொண்டதைப் படித்திருப்பீர்கள். இன்று காலையில் நங்கை நல்லூரில் ரமணிஸ் ஹாலில் உள்ள ஸ்ரீமஹாஸ்வாமிகள் சன்னிதானம் சென்று வலம்புரி சமர்ப்பித்து, நாளைய அனுஷ பூஜையின் போது ஸ்ரீமஹாபெரியவாளுக்குச் சார்த்த வேண்டி, தில்லை நடராஜர் சன்னதியிலிருந்து கிடைக்கப் பெற்ற குஞ்சிதபாத பிரசாதத்தையும் ஸ்லோக புஸ்தகங்கள் மற்றும் குஞ்சிதசங்கரனின் படங்களையும் திரு மகேஷிடம் கொடுத்து, ப்ரத்யேக பிரார்த்தனை செய்யச் சென்றிருந்தோம். அவ்வேளையில் பூஜை ஆரம்பித்த பொழுதிலே எங்கிருந்தோ வந்த ஒரு பசுவும் எங்களுடனாக சன்னதி முன்பாக வந்து நின்றததை கண்களில் நீர்ப்பணிக்க தரிசித்தோம். நாம் செய்ய மேற்கொண்ட பிரார்த்தனையை நமக்கு ஞாபகப்படுத்தியதோடு பசுவும் நம்மோடு இணைந்து ப்ரார்த்திக்கின்ற பொழுதிலே ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ளும் பாக்கியமன்றோ கிடைத்தது. இம்மக்களுக்காக எந்தன் குருதியை ரத்தத்தைப் பாலாகத் திரித்து காலம் முழுக்கத் தருகின்றேனே, இவர்கள் என்னை பூசிக்காவிட்டாலும் பரவாயில்லை; எம் இனத்தைக் கொன்று குவித்து பாபமல்லவோ செய்கின்றார்கள், மஹாப்ரபோ. இவர்கள் யாவரும் இனியும் பாபம் செய்யாமல் இருக்க இவர்களுக்கு தயை காட்டுங்கோ பெரியவா என கோமாதாவே ப்ரார்த்திக்க வந்தாளோ! நாளை கோமாதாவை ப்ரார்த்திப்போம் என்ற இந்த பதரின் தர்ம சிந்தனை பலிக்கவேண்டி அவளே அந்த இடம் தேடி வந்தனளோ! சங்கரா. உங்கள் பிரசாதத்தை அவளுக்குத் தந்து அவளையும் பூசிக்க எங்களுக்கு கருணை புரிந்தீர்களே... சாஷ்டாங்க நமஸ்காரம் ப்ரபோ என வேண்டிக் கொண்டோம். அதுமட்டுமா, திருவெண்காட்டுக்கு பெரியவா விக்ரஹத்துடனாகச் சென்ற ஸ்ரீசரண பாதுகையை தரிசிக்கும் பாக்கியத்தோடு ரமணி ஹாலிலிருந்து ஸ்ரீசரண விக்ரஹத்தை கைகளில் ஏந்தி வீதிவலமாக பாதுகை வந்த இடத்திற்குச் செல்லும் பாக்கியமும் அல்லவோ கிடைக்கப் பெற்றோம். ஆனந்தம் சங்கரா! ஸ்ரீசரானாளின் ரதயாத்திரையிலே திருவெண்காட்டுக்குச் செல்லும் பாக்கியமில்லையே என ஏங்கியவனுக்கு இப்படியொரு கருணை புரிந்தீர்களே சங்கரா. அதுமட்டுமன்றி சென்னை நங்கைநல்லூரில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு அருகில் உள்ள ரமணீஸ் ஹாலில் உள்ள ஸ்ரீசரணாள் சன்னிதானத்த்ஜிலும் மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று சஹஸ்ரகாயத்திரி ஜபம் நடைபெறப் போவதாகவும் அறிந்தபோது மனம் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லையே. ஸ்ரீகுருகடாக்ஷத்திலே நாட்டு மாடுகள் இனம் காக்கப் படட்டும். கோ மாதாக்கள் குறைவின்றி அருளட்டும். பசு வதை ஒழியட்டும். பாங்கோடு பண்பாடும் கலாச்சாரமும் பண்படட்டும். வயலும் வயல் விளங்க உழைக்கும் உழவர் பெருமக்களும் வஅழ்வாங்கு வாழட்டும். ஆனந்த மழைவளம் பெருகட்டும். எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை என்றபடி வாழ்வு விளங்கிச் சிறக்கட்டும்.

பி.கு. இன்று வந்தது நாட்டுப்பசுவா அல்லது கலப்பினப் பசுவா என்பதை விடவும் அதிகம் மனம் எண்ணி மகிழக் காரணம், வந்தது ஒரு தாய்ப்பசு என்பதே. பசு வதை என்பது நாட்டு மாடுகளை மட்டும் கொல்லுதல் கூடாது என்பதல்ல. எந்தப் பசுவினையுமே கொன்று குவிப்பது என்பது ஆகாத செயல் என்பதை ஆரிந்தொழுகுவோமே.

ஒற்றுமை ஓங்கட்டும். ஒவ்வாமை விலகட்டும். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்