Featured Posts

இந்து மதம் ஒரு வாழும் முறை -013


இந்து மதம் ஒரு வாழும் முறை -013

விடியல் இல்லாத வாழ்க்கையா

நிம்மதியற்ற வாழ்க்கையா

தீர்வில்லாத பிரச்சனைகளா

எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு

அம்பாள் அவதாரம்

மஹாபெரியவா

இந்து மதம் ஒரு வாழும் முறை தொடர் எண் 012 இல் அன்னை அபாரமியின் தாடங்கம் செய்யும் உரிமையில் மடம் எவ்வளவு பெரிய கடனில் மூழ்கியது என்பதை பார்த்தோம். இன்றய பதிவில் அன்னை அபிராமி எப்படி சரபோஜி மன்னனுக்கு அறிவுரை சொல்லி மடத்தை மொத்த கடனில் இருந்து மீட்டு உண்மையான பக்திக்கு நான் இறங்குவேன் என்பதை நமக்கெல்லாம் சொல்லியிருக்கிறாள்.

இனி எப்படி அந்த அம்பாளின் கருணையால் அந்த கடன்கள் எல்லாம் தீர்ந்து கையில் ஐயாயிரம் பொற்காசுகள் தேவைக்கு அதிகமாக இருந்தது என்றால் கேட்கும் பொழுதே சிலிர்க்கிறது அல்லவா.

இந்த அற்புதத்தை இந்த வார மஹாபெரியவாளின் இறை சிந்தனையில் காண்போம். திருவானைக்காவலில் மடமே ஆழந்த சோகத்தில் மூழ்கியிருந்தது., இந்தசமயத்தில் மடத்தின் இளைய பீடாதிபதி ஆழ்ந்து சிந்தித்தார். எப்படியாவது இந்த மடத்தை கடனில் இருந்து விடுவித்து பழைய நிலைக்கு கொன்று வரவேண்டும் என்று முடிவு செய்தார்.

சரபோஜி மன்னர்

முடிவு செய்தபிறகு மூத்த மடாதிபதிக்கு தெரியாமல் இளைய மடாதிபதி தஞ்சையை அப்பொழுது ஆண்ட சரபோஜி மன்னரிடம் சென்று மடத்தின் நிலைமையை எடுத்து சொல்லி பணமும் பொருளும் பெற்று கடனை எல்லாம் செலுத்தி மடத்தை மீட்டெடுக்கவேண்டும் என்று முடிவு செய்து தஞ்சைக்கு கிளம்பினார்.

சரபோஜி மன்னரின் அரண்மனை வெளித்தோற்றம்

தஞ்சைக்கு சென்ற இளைய மடாதிபதி சரபோஜி மன்னரை சந்தித்து மடத்தின் கஷ்டங்களை எடுத்து சொல்லி பொன்னும் பொருளும் வேண்டினார். அத்தனையும் செவி மடுத்த மன்னன் இறுதியில் தன்னுடைய இயலாமையை எடுத்து சொல்லி தன்னால் உதவ முடியாத நிலைக்கு மிகவும் வருந்தினார். .இளையவரும் மிகுந்த ஏமாற்றத்துடன் திருவானைக்காவல் திரும்பினார்.தன்னுடைய ஏமாற்றத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனிமையில் இருந்தார்.

தினமும் மடத்தில் நடக்கும் அம்பாள் பூஜை கூட சரியான முறையில் செய்ய முடியவில்லை. இதை கவனித்த மூத்தவர் இளையவரிடம் கேட்கிறார். ஏன் உன்னால் பூஜையை கூட கவனத்துடன் செய்ய இயலவில்லை.உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்கவும் இளையவர் தன்னுடைய ஏமாற்றத்திற்கான காரணத்தை எடுத்து சொன்னார்.

அதற்கு மூத்தவர் இளையவருக்கு அறிவுரை சொன்னாராம்.”நாம் சன்யாசிகள். எந்த ஒரு ஏமாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்று போல பாவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்..கவலை படாதே. இந்த மடத்தை நாம் நடத்தவில்லை. அம்பாள் தான் நடத்துகிறாள். நடப்பது நடக்கட்டும் கவலையை விட்டு ஒழி.

கோவிலடி பெருமாள் அப்பகூடத்தான்

(இந்த கோவில் வைணவ ஸ்தலங்களில் ஒன்று)

நாம் இங்கிருந்து உடனே கும்பகோணம் சென்று விடலாம். அதுவும் தஞ்சையை தொடாமல் கோவிலடி வழியாக கும்பகோணம் சென்று விடலாம் என்று முடிவு செய்து திருவானைக்காவலில் இருந்து மடத்தை கும்பகோணம் நோக்கி பயணித்தார்கள்.. தஞ்சாவூர் மண்ணை மிதிப்பதே பாவம் என்று எண்ணினார்கள்.

மடம் பயணிக்கிறது என்றால் கேட்க வேண்டுமா. யானை ஒட்டகம் குதிரைகள் வண்டி மாடுகள் நூற்றுக்கணக்கில் ஆட்கள் சாமான்கள் என்று எல்லாவற்றோடும் ஏறக்குறைய ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் போல அல்லவா செல்லும்..அப்படி எல்லாவற்றோடும் மிகுந்த சோகத்தோடு பயணம் தொடங்கியது. இரண்டு மேனாக்களில் தனித்தனியாக இரண்டு மடாதிபதிகளும் வண்டிகள் விலங்குகள் புடை சூழ கும்பகோணம் பயணித்தார்கள்.

பயணம் கோவிலடியை நெருங்கிய பொது ஒரு பெரிய கும்பல் வந்து சுற்றி வளைத்தார்கள். இளையவர் மேனாவில் இருந்து எட்டிப்பார்த்து நீங்கள் எல்லாம் யார். எங்களை ஏன் வழி மறுக்கிறீர்கள்.நாங்கள் சன்யாசிகள். எங்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் பொண்ணும் பொருளும் ஒன்றுமில்லை என்று சொன்னார்.

அந்த கும்பலின் தலைவன் சொன்னான் “தாங்கள் சரபோஜி ராஜாவின் சேவகர்கள் என்றும் மன்னர் உங்களை எல்லாம் கைது செய்து அரண்மனைக்கு அழைத்து வர சொன்னார் என்றவுடன் மூத்தவர் சொன்னாராம்.

நாங்கள் உதவிக்கு வந்து உங்கள் மன்னரிடம் யாசித்தோம். எங்கள் கஷ்டங்களை கொஞ்சம் கூட செவிமடுக்காமல் உதவியும் செய்யாமல் இப்பொழுது எங்களை கைதும் செய்கிறீர்களே.. இது அந்த அம்பாளுக்கே அடுக்காது.

எல்லாம் அம்பாள் செயல் என்று சொல்லிக்கொண்டே "அழைத்து செல்லுங்கள் நாங்கள் உங்கள் மன்னரிடம் வருகிறோம் என்று சொல்லவே இந்த ஊர்வலம் தஞ்சையை நோக்கி பயணித்தது. இவர்ளை சுற்றி காவலாளிகள் கூடவே சென்றனர்

மடாதிபதிகளுக்கு அப்படி ஒரு சோகம். இருந்தாலும் மூத்த மடாதிபதி இளையவரிடம் சொன்னாராம் "நீ ஒன்னும் கவலை படவேண்டாம். எல்லாம் அம்பாள் பார்த்துப்பாள் என்று சொன்னாராம். இருவரும் அசதியில் கண் அயர்ந்து விட்டனராம். பயணம் தஞ்சையை நெருங்கும் பொழுது ஒரே மங்கள வாத்தியமும் வாசல்களில் மாக்கோலமும் வீதிகளில் தோரணங்களும் கட்டி இருந்தது.

இதைப்பார்த்த மடாதி பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. நம்மை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வரவேற்பு நடக்கிறது. ஒன்றும் புரியவில்லை. இருந்தும் இன்னும் சிறிது நேரத்தில் மன்னரிடம் சென்றால் உண்மை தெரிந்து விடப்போகிறது என்று மௌனமாகவே இருந்தனர்.

மடாதிபதிகள் அரண்மனையை அடைந்தனர். அரண்மனையை அடைந்தவுடன் மன்னரே இவர்களை எதிர்கொண்டு அழைத்தார், இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

மூத்தவர் மன்னரிடம் கேட்டார் "எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் இப்பொழுது உங்கள் கைதிகள். எங்களுக்கு ஏதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு.என்று கேட்கவும் மன்னர் பதில் அளிக்க ஆரம்பித்தார்.

"முதலில் நீங்கள் இருவரும் என்னை மன்னித்தருள வேண்டும். உங்கள் இளையவர் என்னிடம் அன்று உதவி கேட்டபோது நான் உதவ மறுத்து விட்டேன். ஆனால் அன்று மறுத்ததற்கு இன்று சந்தோஷப்படுகிறேன் என்றரர்.

மடாதிபதிகளுக்கு தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் என்று கேட்டவுடன் மன்னர் சொல்ல ஆரம்பிக்கிறார். “என்று நான் உங்களுக்கு உதவ மறுத்தேனோ அன்று இரவே என் கனவில் அம்பாள் வந்து காட்சி கொடுத்தாள். அப்பொழுது அம்பாள் என்னிடம் சொல்கிறாள்.

"என்னுடைய குழந்தைகள் உன்னிடம் உதவி கோரி வந்த பொழுது நீ மறுத்தாயே. உனக்கு ராஜா என்ற முறையில் இத்தனை செல்வங்கள் கொடுத்ததற்கு காரணமே என்னுடைய குழந்தைகளுக்கும் துன்பத்தில் இருப்பவர்களுக்கும் நீ உதவுவாய் என்பதற்காத்தான்.

என்னுடைய குழந்தைகளுக்கு உதவினால்தான் உன்னிடம் செல்வம் இருக்கும். இதை புரிஞ்சுக்கோ. உடனே என் குழந்தைகளான மடாதிபதிகளை அழைத்து அவர்களுக்கு தேவையான பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பு என்று அம்பாள் சொன்னாள்.

என்னை நீங்கள் இருவரும் மன்னிக்க வேண்டும். நான் கொடுக்கும் பொன்னையும் பொருளையும் ஏற்று கொள்ள வேண்டும். இறுதியில் இளைய மடாதிபதியயை யானை மேல் ஊர்வலமாக தஞ்சை மாநகரை சுற்றி அழைத்து வரவேண்டும் என்று தன்னுடைய ஆசையயை மன்னர் சொன்னார். அம்பாளே சொல்லிவிட்டால் பிறகென்ன. எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டார்கள்.

அன்னை அபிராமி

அம்பாள் அனுகிரஹத்தின் உச்சம்:

இளையவர் யானை மேல் ஏறுவதற்கு சற்று உயரத்தில் திணறிய பொழுது மன்னர் தன்னுடைய தோளை இளையவர் கால் வைத்து ஏறுவதற்கு கொடுத்தாராம்.அன்று சரபோஜி மன்னர் மூலமாக அம்பாள் மடத்தை மீட்டெடுத்தாள்

இந்த வரியை எழுதும்பொழுது என்னையும் அறியாமல் என் கண்கள் குளமாகி விட்டன.

.அம்பாளின் கருணைக்கு எல்லைய