top of page
Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-19 உதய நிலா – கண்ணன்


மஹாபெரியவா சரணம்

மஹாபெரியவா குரு பூஜை ற்புதங்கள்-19

உதய நிலா – கண்ணன்

நேற்று வரை எப்படி வாழ்ந்தாய் என்பதைவிட

இந்த நொடியில் இருந்து எப்படி வாழ்கிறாய்

என்பதுதான் முக்கியம்

மஹாபெரியவளுக்கு ஒன்றுதான் தேவை

நீ ஒழுக்கத்துடன் வாழ்கிறாயா

கேட்டதையும் கொடுப்பார்

கேட்காததையும் கொடுப்பார்.

கலியுக கண்ணன் மஹாபெரியவா

சென்ற வாரம் வரை பரம விரோதியாக இருந்த நிலாவும் கண்ணனும் மலரும் மனமும் போல போல ஒரு நெருக்கமான சிறந்த தம்பதிகளாக மாறினார்கள்.சாராய நெடியம் சிகரெட் வாடையும் வீசிய வீட்டில் இப்பொழுது சந்தானம் விபூதி மனமும் மஹாபெரியவாளின் ஸ்லோகங்களும் கேட்க ஆரம்பித்து விட்டது.

காலை எழுந்தவுடன் இவர்களின் சண்டையை பார்த்தே பயந்து நடுங்கிய குழந்தைகளுக்கு இப்பொழுது சங்கர கோஷமும் சர்க்கரை பொங்கலும் சாமி தாத்தா (மஹாபெரியவாளைத்தான் அப்படி அழைக்கிறார்கள் ) வழிபாடும் மன நிம்மதியும் படிப்பின் மேல் ஒரு ஈடுபாட்டையும் கொடுத்தது.

வீட்டில் உள்ள எல்லோர் மனதிலும் ஒரு அமைதி குடிகொண்டது. அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். இது எப்படி சாத்தியம். ஒரு சில நாட்களில் நடந்த இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்.

குடித்து விட்டு ஆடிக்கொண்டே வீட்டிற்கு வரும் கண்ணன் மாலையில் மல்லிகை பூவும் வீட்டிற்கு வேண்டியகாய்கறிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிவரும் ஒரு நல்ல தகப்பன்கவும் நிலாவிற்கு நல்ல கணவனாகவும் மாறிய அதிசிய மாற்றம் என்று. அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். இந்த சொல்ல முடியாத மாற்றத்திற்க்கு என்ன காரணம் என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.

வழக்கமாக காலையில் பத்து மணிக்கு எழுந்து முகம் கழுவி டீ கடையில் குடித்து விட்டு ஆடிக்கொண்டே வீடு சென்று சேரும் கண்ணனை பார்த்தவர்களுக்கு இது ஒரு அதிசயம் தான். காலை எட்டு மணிக்கெல்லாம் நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு வேலைக்கு செல்லும் கண்ணனுக்கு ஏதோ ஆகி விட்டது என்று பேசிக்கொண்டார்கள் அக்கம்பக்கத்தார். ஒருவன் திருந்த முயற்சிக்கும் பொழுது அதை சமுதாயம் ஏற்றுகொள்ள மறுக்கும். இதுதானே நாம் அன்றாடம் காணும் சமுதாயம்.

இந்த சமயத்தில்தான் மஹாபெரியவா அற்பதம் உள்ளே நுழைகிறது.

இந்த சமயத்தில் நிலாவின் வீட்டிற்கு எதிர்ப்புறம் இருக்கும் பெரிய வீட்டிற்கு புதியதாக ஒரு மருத்துவர் குடும்பம் குடி வந்துள்ளது. பார்த்தாலே அவர்கள் பெரும் பணக்காரர்கள் என்று தெரிந்தது.

அவர்கள் ஒரு நல்ல கார் ஓட்டுனரை வேலைக்கு அமர்த்த தேடிக்கொண்டிருந்தார்கள் .இந்த சமயத்தில் கண்ணன் காலையில் எட்டு மணிக்கெல்லாம் வேலைக்கு செல்வதும் இரவில் நல்ல நிலையில் வீட்டிற்கு வருவதையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

கண்ணனுடைய பெயர் கூட அவர்களுக்கு தெரியாது. ஒரு நாள் காலையில் கண்ணன் வேலைக்கு செல்லும் பொழுது அந்த மருத்துவர் கண்ணனை அழைத்து பேசினார். சம்பளம் எவ்வளவு தெரியமா. இப்பொழுது வாங்குவதை விட இரு மடங்கு. ஞாயிறு அன்று விடுமுறை.

கண்ணனுக்கு தன காதுகளை நம்பவே முடியவில்லை.கடந்த நான்கு வாரங்களாக தன்னை சுற்றி நடப்பது எல்லாமே ஒரே அதிசயமாக இருக்கிறது. அப்பொழுதுதான் மஹாபெரியவா என்னும் என்னும் பிரபஞ்ச பெயருக்கு அவ்வளவு ஒரு சக்தியா.

கண்ணன் ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்டு தன்னுடைய மனைவியிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்றார். மருத்துவரும் சரி மனைவியிடம் கலந்து பேசிவிட்டு எனக்கு நாளை சொல்லுங்கள் என்றார்.

மருத்துவரும் அவர் மனைவியும் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.நம்மடைய மகளை பத்திரமாக அழைத்து சென்று வீட்டிற்கு திரும்ப கூட்டி வருவதற்க்கு ஒரு குடும்பஸ்தனான கண்ணனை விட்டால் நல்ல ஓட்டுநர் கிடைக்க மாட்டார் என்று பேசிக்கொண்டார்கள்.

இருவரும் கண்ணனின் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். மருத்துவர் தம்பதிகளுக்கு ஒரே மகள். மருத்தவம் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். அவர் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு மாலையில் திரும்ப வீட்டிர்க்கு திரும்ப கூடி வர வேண்டும். மற்ற சமயங்களில் மருத்துவரையும் அவர் மனைவியையும் எங்காவது செல்ல வேண்டுமென்றால் அழைத்து செல்ல வேண்டும்.

இதே சமயத்தில் கண்ணன் தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவி நிலாவிடம் நடந்தது அனைத்தையும் சொன்னார். சொல்லும்பொழுதே கண்ணனின் கண்களில் கண்ணீர் குளமாக தேங்கி நின்றது. நிலாவிற்க்கும் தன்னுடைய காதுகளை நம்ப முடியவில்லை.

நான்கு வார மஹாபெரியவா பூஜையில் இப்படி ஒரு மாற்றமா. யாருக்கு அமையும் இப்படி ஒரு வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டார்கள். இருவரும் ஒன்றை செய்தார்கள். மஹாபெரியவா முன் வந்து மண்டியிட்டார்கள்.

அப்பொழுது நிலா கண்ணனிடம் சொல்கிறாள். ஏங்க இந்த வாரம் ஞாயிற்று கிழமை குழந்தைகளை அழைத்து கொண்டு காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவா அதிஷ்டானத்திற்க்கு சென்று சாமி தாத்தாவை சேவித்து விட்டு வரலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

கண்ணன் சொல்கிறான்.என்னிடம் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லையே என்கிறான். அதை பற்றியெல்லாம் கவலை படாதீர்கள். என்னிக்கு மஹாபெரியவா பூஜையை ஆரம்பிதோம்மோ அன்றே என்னுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வருகிறேன் என்று வேண்டிக்கொண்டு தினமும் நீங்கள் கொடுக்கும் பணத்தில் வயிற்றை கட்டி வாய கட்டி ஒரு ஐநூறு ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். கவலை படாதீர்கள். வரும் ஞாயிறன்று காஞ்சி சென்று சாமி தாத்தாவை தரிசித்து வரலாம் என்று முடிவு செய்தார்கள்.

கண்ணனுக்கு ஒரே சந்தோஷம் . நிலா கண்ணனிடம் சொன்னாள் யோசிக்காமல் அவர்களிடம் வேலைக்கு சேருவதாக சொல்லுங்கள் என்றாள்.அப்படியே ஞாயிறன்று காஞ்சிபுரம் சென்று சாமி தாத்தாவை தரிசனம் செய்த் விட்டு வருகிறோம் என்றும் சொல்லுங்கள் என்றாள்.

அதற்குள் நிலா ஐநூறு ரூபாயில் நான்கு பேர் காஞ்சி சென்று வெளியில் சாப்பிட்டுவிட்டு வர முடியமா என்று சந்தேகப்பட்டாள். பணம் போத வில்லையென்றால் என்ன செய்வது. தான் வேறு கண்ணனிடம் தன்னிடம் பணம் இருப்பதாக சொல்லி விட்டோமே என்று கவலையாக இருந்தாள். உடனே மஹாபெரியவாளிடம் சென்று மண்டியிட்டு வேண்டிக்கொண்டாள்.

இதே சமயத்தில் கண்ணன் மருத்துவர் வீட்டிற்கு சென்று தான் வேலைக்கு சேருவதாகவும் வரும் ஞாயிறன்று காஞ்சிபுரம் சென்று பெரியவாளை தரிசித்து வருவதாகவும் சொன்னார். மருத்துவர் தன்னுடைய மனைவியை அழைத்து கண்ணன் வேலையில் சேரும் விஷயத்தை சொல்லிவிட்டு கண்ணன் காஞ்சிபுரம் செல்லும் விவரத்தையும் சொன்னார்.

உடனே மருத்துவருடைய மனைவி சொன்னார். கண்ணனிடம் ஒரு ஆயிரம் ரூபாய் செலவுக்கு கொடுத்து விடுங்கள்.சம்பளத்தில் கழிக்க வேண்டாம் அவர்கள் குடும்பத்துடன் மஹாபெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரட்டும் என்றார். மருத்துவரும் ஆயிரம் ரூபாயை கண்ணனிடம் கொடுத்தார்.கண்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றார்..

அப்பொழுது நிலா சற்று கவலையுடன் இருந்ததை பார்த்த கண்ணன் உனக்கு என்ன பிரச்சனை. ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டார் கண்ணா. அதற்கு நிலா இல்லீங்க என் கையில் ஐநூறு ரூபாய்தான் இருக்கிறது. போதுமா தெரியாவுயில்லை என்றாள். சாமி தாத்தா கிட்டே இப்போதான் வேண்டிகிட்டேன் என்றாள்.

உடனே கண்ணன் மருத்துவர் கொடுத்த ஆயிரம் ரூபாயை மனைவி நிலாவிடம் கொடுத்தார். நிலாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுபடியும் மஹாபெரியவாமுன் மண்டியிட்டு அழுதாள்.

கேட்டதும் கொடுத்தவன் பாரதத்தில் கண்ணன்

கலிகாலத்தில் கேட்டதும் கொடுப்பவர்

கலியுக கண்ணன் மஹாபெரியவா.

நிலாவின் பிரார்த்தனைகள் சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொன்றாக நிறைவேறி கொண்டிருப்பதை கவனித்தீர்களா. கணவரின் குடிப்பழக்கம் ஒழிந்தது. குடும்பத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் ஒரு பெரிய வீட்டிற்கும் குழந்தைகளின் படிப்பிற்கும் எப்படி அருள்பலித்தார் என்பதை பார்ப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page