Featured Posts

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம்

அருட்காமாக்ஷித் திருத்தலத்தே மேவியருளாசி நல்கும் நம் கலியுக வரதனாம், கண்கண்ட தெய்வம், விழுப்புரத்தேயுதித்த வேதவிழுப்பொருள், எண்குணத்தோன், ஏகம்பத் தலத்தீசன், ஆசார்ய தெய்வமாம் ஸ்ரீமஹாஸ்வாமியின் இந்த தரிசனத்தைக் கண்டதுமே மனம் ஒருவித உற்சாகத்துடனாக, அதேசமயம், “கதி நீயே கருணாகரா” என அவருடைய பொற்கமலப் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தது எனக்கு மட்டுமா என்ன? இந்தத் தரிசனத்தைக் காணுறும் ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் அப்படித் தானே இருக்கும்! சங்கரா! வேண்டுவதும் வேண்டாததும் யாமறியோம் வேதத்தேவா! நீயே கதி! நின் சரணங்களே எமக்கு நிழல்! காப்பாய் கருணாகரா! உள்ளிழுத்த உயிர்மூச்சு வெளிவருமா? மீண்டும் உட்புகுந்து எம் வாழ்வுப் பயணத்தைச் செவ்வுற ஆக்கிடுமா? எல்லாம் உன் செயலன்றி வேறேது, பராபரா!

ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… #ஸ்ரீகுருதுதி #ஐந்தகத்துதிமாலை அந்தமிலாப் பெருமையதும் பங்கமிலா பெருவாழ்வும் தங்குதடை யேதுமிலா சந்ததமும் பெறவேண்டி அஞ்சுகத்தாள் ஆண்டருளும் கச்சிநகர் மேவியஎம் பஞ்சரத்தார் போற்றித்தொழ சேயோனாய் வாய்த்தவனே! பூதலத்தோர் தமையியக்கும் புவனமொளிர் புங்கவனே! முதுஞான பண்டிதனே! மும்மலமும் ஒழிப்பவனே! சூதுபகை வாதனையும் மேதுமிலா நிலைதனிலே ஆதவனாய் அருள்பொழியும் சசிசேகர சங்கரனே! தண்டகரம் கொண்டவனே! பரம்பொருளே! பரமேசா! அண்டமிதும் போற்றிவரும் அதிசயமாம் அழகேசா! கண்டுவுனை யாம்துதிக்க கனியருளும் பொழிந்தெம்மை விண்டிடாத படியாக வாழ்விப்பாய் விமலமுதே! பந்தமென யெமக்கெனவே பரமிதிலே தோன்றியவா! எந்தனுயிர் உடைமையெலாம் ஈந்தவனாம் இறையவனின் அந்தமாதி யேதுமிலாப் பெருமானே! பேரிறைவா! சிந்தையிலே வந்துதினம் தெளிவுதனைத் தந்தருளே! சந்ததமுந் தந்துயெமைக் காத்தருளும் தளிரொளியே! குந்தகமா யிருக்குமகங் காரந்தனைக் களைத்தெமக்கு முந்தைவினை தாமறுத்து முத்திதனை அருள்வதற்கு! இந்தவித முனையடைய முதுஞானம் தந்தருளே!

சாதி, சமயம், மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் தாண்டி அன்பும் பண்பும் அறமாண்பும் மட்டுமே மானுடம் காக்கும் மகாவழியென புவியோர்க்குச் சொல்லியருளியதோடு வாழ்ந்தும் காட்டி வழிசொன்ன ஆடும் நாதனின் அவதாரீ! தேசம் முழுவதும் நடையாய் நடந்து பக்தர்கள் இருக்கும் இடம் தேடிவந்து அருட்பொழுந்த அப்பனே! அம்மையப்பனே! ஆருண்டு எமக்கு நின் சரணாரவிந்தத் தூளியைத் தவிர! ஏறமர்க்கொடியோனாம் எந்தை ஈசனின் மனிதாவதாரீ! காப்பாய் கருணாகரானந்தா! என அவருடைய பாதாரவிந்தங்களைத் தொழுது அனைவருக்குமான பிரார்த்தனையைச் செய்து இன்றைய பொழுதிலும் எம் உறவுகள் யாவருடனுமாக ஆசார்யத் தெய்வத்தைத் துதித்த திருப்தியுடன் எல்லோரையும் வணங்குகிறேன்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square