Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-038


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-038

பிரதி புதன் கிழமை தோறும்

ஸ்ரீ மதுரை நாராயண ஐயர்

மஹாபெரியவா யார் தெரியுமா

இந்த எல்லையில்லா பிரபஞ்சமே

மஹாபெரியவா தான்

மாமாவிற்கு மஹாபெரியவாளிடம் நல்ல பரிச்சயம் உண்டு. வயது தொன்னூரை எட்டப்போகிறது. மாமா சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் ஒரு முத்துக்கள்.. நான் கேட்ட வரையில் ஒரு மூன்று முத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மீதி முத்துக்களை எடுக்க நீங்கள் கடலில் மூழ்கித்தான் ஆக வேண்டும்.

முதல் முத்து.

நம் எல்லோருமே நம்முடைய மஹாபெரியவா ஆதி சங்கர பகவத் பாதாள் அவதாரம் என்று சொல்கிறோம். இதற்கு என்ன பிரமாணம் என்ற கேள்விக்கு மாமா சொல்லும் திஷ்டாந்தம் என்னை வியக்க வைத்தது..

ஆதி சங்கர பகவத் பாதாள் அவதரித்த காலத்தில் பௌத்த மதமும் ஜைன மதமும் வளர்ந்து கொண்டிருந்தது. இந்து மதத்திற்கு ஒரு சோதனையான காலம் அது. அப்பொழுது ஆதி சங்கர பகவத் பாதாள் அவதரித்து இந்து மதத்தை மேலோங்கி எழச்செய்தார்.

அதே போல் வேதம் மிகவும் ஷீணமாக போன காலத்தில் மஹாபெரியவா அவதரித்து வேதத்தை உத்தராணம் செய்தார். இந்தியா முழுவதையும் நடந்தே வந்து மறைந்துகொண்டிருந்த வேதத்தை மீண்டும் தழைக்க செய்தார். இப்பொழுது தெரிகிறதா? மஹாபெரியவா அதி சங்கர பகவத் பாதாள் என்பது

இரண்டாவது முத்து :

பிரும்மம் என்றால் எங்கும் எதிலும் வியாபித்து இருக்கக்கூடிய ஒரு வஸ்து. கண்ணுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொன்றிலும் அந்த பிரும்மத்தை உணரலாம் நாம் உணரலாம். மஹாபெரியவா ஒரு பிரும்ம ஸ்வரூபம் என்பதற்கு ஒரு சான்று. என்னவென்று கேளுங்கள்.

மஹாபெரியவா தன்னுடைய பன்னிரெண்டாவது வnயதில் சன்யாசம் வாங்கிக்கொண்டார். உலகஞானம் வருவதற்கு முன்னே சன்யாசி ஆகி விட்டார். அந்த சிறு பிராயத்தில் இருந்தே வெளி உலகை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆன்மீகமும் அப்பொழுதான் கற்றுக்கொண்டிருந்தார். அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை.

இந்த நிலையில் பல்லவரத்திற்கு அருகில் உள்ள இந்திய விமானப்படையின் விமானதளமும் அலுவலகமும் உள்ளது. இந்த விமான தளத்தின் தலைமை அலுவலர் மஹாபெரியவளிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்தார். அது என்ன தெரியுமா. "பெரியவாளுடைய காலடி விமானத்தில் பட வேண்டும். பெரியவா விமானத்திற்குள் காலடி எடுத்து வைத்து வர வேண்டும் என்றார். மஹாபெரியவாளும் சரி நான் வருகிறேன் போகலாம் வா என்று சொல்லி விமானத்திற்குள் ஏறினார்.

விமானத்தில் எல்லா இடங்களையும் பாகங்களையும் பற்றி சொல்லிக்கொண்டே வந்தார் தலைமை அலுவலர்.. ஒரு இடத்தில் வந்தவுடன் இது என்ன என்று கேட்டார் மஹாபெரியவா... அதற்கு அந்த தலைமை அலுவலர் பதில் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.

மஹாபெரியவாளும் திரும்ப எதுவும் பேசாமல் இருந்து விட்டார். எல்லாவற்றையும் பார்த்து விட்டு மடத்திற்கு வந்து விட்டார். அந்த தலைமை அலுவலர் மட்டும் மஹாபெரியவாளை இரவில் தனியாக தரிசனம் செய்ய வேண்டும் என்று அனுமதி வாங்கி இருந்தார்,

அதன்படி இரவு தலைமை அலுவலர் தரிசனத்திற்கு வந்தார். அப்பொழுது மஹாபெரியவா தான் விமானத்தில் ஒரு இடத்தை பற்றி கேட்டவுடன் மௌனமாக இருந்தாரே அந்தஇடத்தின் செயல் பாட்டை மஹாபெரியவா சொல்கிறார்.

அந்த இடம் விமானத்தில் இருந்து ஆபத்து காலங்களில் வெளியேறும் வழிதானே என்று கேட்கிறார்.. அந்த தலைமை அலுவலர் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அந்த வழி மிகவும் பரம ரகசியம். விமான ஒட்டிக்கும் விமானப்படை தலைமைக்கு மட்டுமே தெரிந்தரகசியம். எப்படி மஹாபெரியவாளுக்கு தெரிந்தது.

அவர் எந்த விமான கல்லூரியில் சேர்ந்து படித்தார். பிரும்மத்தின் ஒரு அங்கம் தானே. மஹாபெரியவா.. அந்த பிரும்ம ஸ்வரூபத்திற்கு தெரியமால் இருக்குமா. இதுவே போதுமே மஹாபெரியவா மஹாபெரியவா ஒரு பிரும்மம் என்பதற்கு,

மூன்றாவது முத்து :

வேதங்களிலும் மற்ற ப்ராமணமான நூலகளிலும் எழுதி இருக்கும் வாக்கியம் என்ன தெரியுமா. ஒரு பிரும்ம ஞானிக்கு மதம் பிடித்த யானை கூட கட்டுப்படும் என்பது தான். இதற்கும் ஒரு நிகழ்வை நாராயண ஐயர் மாமா சொல்கிறார் கேளுங்கள்.

ஒரு முறை திருவிடை மருதூரில் ஆதி சங்கரர் ஜெயந்தி நடந்து கொண்டிருந்தது..நகரில் ஊர்வலமாக ஒட்டகங்கள் குதிரைகள் காளை மாடுகள் மற்றும் யானைகள் அன்றாடம்ஊர்வலத்தில் பங்கேற்பது வழக்கம்.

ஒரு நாள் ஆதி சங்கரர் படத்தை அம்பாரியில் வைத்து யானை மேல்ஏற்ற வேண்டும். அந்த சமயத்தில் பிரஹலாதன் என்ற யானைக்கு மதம் பிடித்து விட்டது.யாராலும் யானையை கட்டுப்படுத்த முடியவில்லை. செய்தி மஹாபெரியவாளை எட்டுகிறது.

மஹாபெரியவாளும் பிரகலாதனை தனக்கு முன் கொண்டு வந்து நிறுத்த சொல்கிறார். ப்ரஹலாதனும் வந்தான். தன்னுடைய அறையில் இருந்து தண்டத்துடன் மஹாபெரியவா வெளியில் வந்தார். அதுவரை யாரும் அடக்கமுடியால் மதம் பிடித்த யானை என்னவெல்லாம் செய்யுமோ அவைகளை செய்து கொண்டிருந்தது.

மஹாபெரியவா யானைக்கு முன் வந்து நின்றவுடன் யானை பெட்டி பாம்பாக நின்றது. மஹாபெரியவா ஒரு பத்து நிமிடங்கள் யானையையே பார்த்துக்கொண்டிருந்தார். யானையும் மஹாபெரியவாளை பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு அமைதியானவுடன் மஹாபெரியவா அந்த பிரஹலாதன் என்ற யானையை கூட்டிச்சென்று ஊர்வலத்தில் கலந்து கொள்ள செய்தார்.

இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா. அந்த ப்ரபஞ்சத்து பிரும்ம ஸ்வரூபமே நம்முடன் வாழ்ந்து நமக்கு வேண்டியதை எல்லாம் செய்து நூறு ஆண்டுகள் காவியிலேயே வாழ்ந்து கற்பூர தீபமாக சித்தி அடைந்து விட்டார் என்பது.

பிரும்ம ஞானி யார் தெரியுமா

மஹாபெரியவா தான்

இன்னுமா தெரியவில்லை

https://www.youtube.com/watch?v=2NwSAbLvncM&t=1463s

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square