Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -043


என் வாழ்வில் மஹாபெரியவா -043

பிரதி வியாழன் தோறும்

நான் எழுதும் பதிவுகளை

உங்களை மனதில் நிறுத்தி

நொடிப்பொழுதும் அனுபவித்து எழுதுகிறேன்

நீங்கள் அனுபவித்து படிக்கிறீர்களா

எனக்கு சொல்லுங்களேன்

எல்லோருக்குமே வாழ்க்கையில் மாற்றம் என்பது நடக்கூடிய ஒன்றுதான்.அந்த மாற்றம் ஒரு நொடிப்பொழுதில் ஏற்படக்கூடியது. ஒருவரின் பேச்சினால் நமக்குள் மாற்றம் வரலாம். ஒரு சம்பவத்தை பார்க்கும் பொழுது மாற்றம் வரலாம். ஒரு புத்தகத்தை படிக்கும் நேரத்தில் நமக்குள் மாற்றம் வரலாம்..

ஆனால் ஒரு ஆத்மா ஆத்மார்த்தக மாற்றத்திற்கு முயன்று சமுதாயத்தின் ஏளன பேச்சுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி தோற்றுப்போகும் தருவாயில் குருவின் ஸ்தானத்தில் இருக்கும் ஏதோ ஒரு மனிதர் அழைத்து தோற்கும் தருவாயில் இருக்கும் ஆத்மாவை கை தூக்கி விடுவார். .

எனக்கும் அப்படித்தான் இந்த மாற்றம் நடந்தது. வாழ்க்கையிலும் தோற்று சமுதாயத்தையும் எதிர்க்க திராணி இல்லாமல் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என்று நினைத்த பொழுது உன் வாழ்கை இன்னும் முடியவில்லை. இனி மேல் தான் உன் வாழ்கை ஆரம்பிக்கிறது என்று எனக்குள் ஒரு குரல் ஒலிக்க குரலை இருகப்பற்றினேன். எனக்குள் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரர் இறைவன் பரமேஸ்வரன் என்று தெரிந்தது. என் வாழ்க்கை மாற ஆரம்பித்தது..

என் அனுபவத்தில் சொல்கிறேன். எப்பொழுது உங்கள் எண்ணங்கள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறக்கிறதோ அந்த எண்ணங்களுக்கு பிரபஞ்சத்தில் பயணம் செய்யக்கூடிய சக்தி வந்து விடுகிறது..

வானத்தில் பயணம் செய்யும் உங்கள் எண்ணங்கள் வானத்தில் சஞ்சாரத்தில் இருக்கும் பல சக்திகளின் எண்ணங்களோடு கை கோர்க்கும் பொழுது ஒரு சக்தி உங்களை ஆட்கொண்டு உங்களுக்குள் ஒரு மாற்றத்தை நொடிப்பொழுதில் கொடுத்து விடுகிறது..

இந்த பூலோகம் எப்படியோ அப்படி வானுலகம் என்று ஒன்று இருக்கிறது. எந்த ஒரு ஆத்மா எப்போதும் ஒரு குருவின் தேடலிலேயே இருக்கிறதோ அப்பொழுது சரியான ஒரு குரு நம்மை ஆட்கொண்டு விடுவார். அது இறவனாக கூட இருக்கலாம்.

இதை பற்றி இன்னும் போகப்போக எழுதுகிறேன். மஹாபெரியவாளின் அற்புதங்களை அனுபவிக்கும் அதே நேரத்தில் அற்புதத்திற்கு அப்பால் இருக்கும் செய்தியை உள் வாங்கி நாம் விண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டால் வாழ்க்கையில் எதுவும் சாத்தியமே.

ஒன்றை நினைவு கொள்ளுங்கள். நம் உடலால் தனியாக எதுவும் சாதிக்க முடியாது. உங்கள் ஆத்மாவை தனித்து இயங்க விடுங்கள். உங்களுக்காக உங்கள் ஆத்மா எல்லா இடத்திலும் பயணிக்கட்டும். ஒரு ஆத்மா ஒரு உடலை சார்ந்துதான் இயங்க முடியும். ஆத்மா தனித்து இயங்க முடியாது..

உங்கள் உடலை பயன்படுத்தி உங்கள் ஆத்மாவை பிரபஞ்சத்தில் பயணிக்க வையுங்கள்.. ஆத்மா உங்களுக்குள் இருந்து கொண்டே தன்னுடைய ஏக்கத்தை பிரபஞ்சத்தில் பயணிக்கவைக்கும்.. பிரபஞ்சத்தில் எந்த ஒரு சக்தியுடனும் எந்த நொடியிலும் உங்கள் ஆத்மா கைகோர்த்து விடும்..

எப்பொழுது உங்களுக்கு விண்ணுலக தொடர்பு கிடைத்து விட்டதோ அந்த நொடியே உங்களின் மண்ணுலக ஆசை காணாமல் போய் விடும்..எப்பொழுது உங்களுக்கு மண்ணுலகு ஆசை அற்றுப்போகிறதோ அந்த நொடியில் இருந்து உங்கள் உள்ளமும் உடலும் ஆத்மாவும் இறை நிலையை அடைந்து விடுகிறது.

இந்த ஆத்மாவின் பயணம் பற்றி வரும் வார அற்புதங்களில் இன்னும் தொடர்ந்து எழுதுகிறேன். இனி என் வாழ்வில் நடந்த மற்றஅற்புதங்களுக்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.

மஹாபெரியவா என்னுடைய சரீர சுத்தி பயிற்சியில் எனக்கு பிடித்த அறுபது வருட உணவு பழக்கங்களை ஒவ்வொன்றாக ஒரே இரவில் விட வைத்த அற்புதங்களை அனுபவித்து கொண்டிருக்கிரோம். இந்த வரிசையில் மஹாபெரியவா என்னை அடுத்து விட வைத்தது. எண்ணெய் மிளகாய்ப்பொடி.

சிறு வயதில் இருந்தே இட்லிக்கும் தோசைக்கும் எதுவும் எனக்கு வேண்டாம். நல்லண்ணெயும் எள்ளு மிளகாய் பொடியும் இருந்தால் போதும் அது எனக்கு உயிர்.

முதலில் என்னை ஒவ்வொரு பழக்கத்தில் , இருந்தும் மஹாபெரியவா விட வைக்கும் பொழுது நான் வலியை உணர்ந்தேன். ஆனால் போகப்போக மஹாபெரியவா என்னை ஒவொன்றாக விடச்சொல்லும் பொழுது எனக்கு அவ்வளவாக வலி தெரியவில்லை . அந்த நொடியில் வேண்டுமானால் சற்றே வலிக்கும்.. பிறகு அதே நாளில் சரி பெரியவா என்று சொல்லிவிட்டு விடச்சொன்னதை விட்டு நான் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

அன்று ஒரு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரம்..மஹாபெரியவாளின் "ஏண்டா " என்னும் குரல் கேட்டு விட்டது.வழக்கம்போல் சொல்லுங்கோ பெரியவா என்றேன். இனி சம்பாஷணை விடிவில் உங்களுக்கு தருகிறேன்.

பெரியவா : ஏண்டா உனக்கோ அறுபது வயதுக்கு மேல் ஆகி விட்டது.உனக்கு சர்க்கரை வேறே இருக்கு. உனக்கு எண்ணெய் பதார்த்தங்கள் வேண்டாமே. விட்டுட்டேன் என்றார்.

G.R.: எண்ணெயில் செஞ்சது எதுவும் கூடாதா பெரியவா என்றேன்.

பெரியவா நீ முதல்ல நிறைய சாப்பிடற எண்ணெய் மிளகாய்ப்பொடியை விட்டுடு. அது உனக்கு வேண்டாம்.

G.R: சரி பெரியவா இப்பவே விட்டுடறேன்.

பெரியவா என்னடா வழக்கமா என்கிட்டே தர்க்கம் பண்ணுவே.. இன்னிக்கு சரின்னுட்டாயே

G.R நீங்கள் எனக்கு அந்த சக்தியை கொடுத்தேள். நானும் சரி என்று விட்டுடறேன்.

எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்:

இந்த எண்ணெய் மிளகாய்ப்பொடியை விட்ட பிறகு எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மையிலேயே அற்புதம். என்னுள் புகுந்த இறை சக்தி ஒரு பெரு மூச்சு விடுவதை என்னால் உணர முடிந்தது.

எனக்கு முதலில் ஒரு வேலை செய்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். ஒருமணி நேரம் வேலை செய்தால் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து ஓய்வு எடுத்தபின் தான் மறுபடியும் வேலையே துவங்குவேன்.

ஆனால் எண்ணெய் மிளகாய் பொடியை விட்ட பின் நாளொன்றுக்கு பதினேழு மணி நேரம் மஹாபெரியவா கொடுத்த வேலைகளை செய்கிறேன்.காலையில் நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை என்னால் ஆரோக்கியமாக உழைக்க முடிகிறது.அதுவும் வேலை செய்ய வேண்டுமே என்றில்லை. ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வேலை செய்கிறேன்.

என் அனுபவத்தை எடுத்துக்கொண்டு நீங்களும் முயன்று பார்க்கலாமே.

மஹாபெரியவா உங்களுக்கு நேரில் வரவில்லையே என்று யோசிக்கிறீர்களா?.. பிரார்த்தனை செய்யுங்கள். மஹாபெரியவா உங்கள் வீட்டு கதவையும் தட்டுவார். .உங்கள் உள்ளக்கதவையும் தட்டுவார். இது சத்தியம்.

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்

கீதையிலே கண்ணன்

பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான்

பாரதத்தில் கண்ணன்

மஹாபெரியவாளும் கண்ணன் அவதாரம் தானே

குரலுக்கு வருவார் பார்வைக்கு தெரிவார்

அழையுங்கள் உங்கள் அருகிலேயே நிற்கிறார்

உங்கள் அழைப்புக்காக

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square