Featured Posts

இந்து மதம் ஒரு வாழும் முறை -014 சரஸ்வதி பூஜை


இந்து மதம் ஒரு வாழும் முறை -014

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி தேவி

சரஸ்வதி பூஜையை புரட்டாசி மாதம் கொண்டாடுவார்கள்.இந்த காலத்திற்கு சரத் காலம் என்று சொல்லுவார்கள். இந்தியாவை பொறுத்த வரை வேறு வேறு மாநிலங்களில் வேறு வேறு சீதோஷ்ண நிலை இருக்கும்.

ஆனால் இந்த ஷரத் காலத்தில் மட்டும் காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமாரி வரை ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருக்கும்..இந்த கால கட்டத்தில் தான் நவராத்திரியும் வருகிறது.

ஒன்பது நாட்கள் இந்த சரஸ்வதி பூஜையை சக்தி உபாசனை செய்து கொண்டாடுகிறோம்..இந்த ஒன்பது நாட்களை ஒன்பது கோள்களோடு பொருத்தி சிந்திக்கப்படுகிறது.

இந்த கால கட்டத்தில் காஷ்மீரத்தில் ஒரே வெள்ளை கம்பளம் போல் பனி இருக்கும்..சரஸ்வதியும் வெண்மை நிறத்தில் தான் ஆடை உடுத்தி இருக்கிறாள். சரஸ்வதியின் சிரசில் பிறை நிலா உள்ளது. எப்படி பிறை நிலா வளர கூடியதோ அது போல கல்வியும் அறிவும் வளரக்கூடியது என்பதற்கு தான் இந்தப்பிறை நிலா இருக்கிறது.

சரஸ்வதியை போலவே கல்விக்கு இன்னொரு அதிபதி தக்ஷ்ணாமூர்த்தி. இவரும் வெண்மை நிறத்தில் ஆடை அணிந்திருப்பார். இவருக்கும் தலையில் பிறை நிலா இருக்கும்.

எல்லா நிறங்களிலும் இறுதியான நிறம் வெண்மை. வான வில்லில் கூட வெண்மைக்கும் கறுப்புக்கும் இடம் கிடையாது..தக்ஷ்ணாமூர்த்தியும் சரி நம்முடைய சரஸ்வதி தேவியும் சரி அவர்கள் கைகளில் ஸ்படிக மாலையை வைத்திருக்கிறார்கள். நம்முடைய மனம் தூய்மை பெற்று ஸ்படிகம் போல் தெளிவு பிறக்கிறதல்லவா இதை குறிக்கத்தான் அவர்கள் கைகளில் ஸ்படிக மாலை வைத்திருக்கிறார்கள்.

சரஸ்வதியின் கைகளில் ஏடுகள் வைத்திருப்பது நமக்கெல்லாம் தெரியும்.இதை மஹாபெரியவா எப்படி தன்னுடைய சிந்தனை நோக்கில் பார்க்கிறார் தெரியுமா.அந்த சரஸ்வதியே இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாள் என்று. இதில் இருந்து என்ன தெரிகிறது. நம்முடைய இறுதி நாள் வரை படித்து கொண்டே இருக்கவேண்டும் என்பதை நமக்கு புரிய வைக்கிறார்.

சரஸ்வதி தேவி

படிப்பு ஜென்மம் தொடரும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மஹாபெரியவா வலியுறுத்துகிறார்.இதைத்தான் சான்றோர்கள் இப்படி சொல்லுவார்கள் “கற்றது கை மண் அளவு கற்காதது உலகளவு என்று”

இந்த சரஸ்வதி பூஜையை பற்றி நவராத்திரி பண்டிகையின் போது இன்னும் சிந்திப்போம். அவற்றிலும் மஹாபெரியவா சிந்தனையை அனுபவிப்போம்..

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square