Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-20 உதய நிலா – கண்ணன்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-20

உதய நிலா – கண்ணன்

எட்டு கால் பூச்சியால் கூட

தொட முடியாத உயரத்தை

ரெண்டு கால்களின் உதவியால்

நீ தொட முடியும்

மஹாபெரியவா அனுக்கிரஹம் இருந்தால் உதய நிலா -கண்ணன் ஒரு வாழும் உதாரணம்

சென்ற வாரம் உதய நிலா கண்ணன் தம்பதியினர் மஹாபெரியவா அனுகிரஹத்தால் அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கு ஒவொன்றாக பதில் கிடைத்தது. அவர்களே வியந்து போய் காஞ்சி சென்று மஹாபெரியவா அதிஷ்டானத்தை ப்ரதக்ஷிணம் செய்ய முடிவெடுத்தார்கள். பிறகு குழந்தைகளுடன் காஞ்சிபுரம் சென்றார்கள் கண்ணன் நிலா தம்பதியினர். குழந்தைகளுடன் காஞ்சி சென்று மஹாபெரியவா அதிஷ்டானம் முன் உட்கார்ந்து நெக்குருக மஹாபெரியவாளுக்கு நன்றி சொன்னார்கள்.

அங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் இவர்கள் கண்களில் கண்ணீருடன் த்யானம் செய்து கொண்டிருப்பதை பார்த்து எவ்வளவு அழகான குடும்பம். இரண்டு குழந்தைகளுடன் மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தார்கள்.

இப்படி ஒரு சந்தோஷமான நாளை அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்ததே கிடையாது.

அவர்களுடைய திருமணமான முதல் நாள் கூட இவ்வளவு சந்தோஷமாக இருந்ததில்லை. தரிசனம் முடிந்து காஞ்சி ஸ்ரீ மடத்தில் பிரசாதங்களை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினர்.

குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும்

விஸ்தாரமான வீட்டிற்கு குடி புக வேண்டும்

நிலாவின் பிரார்த்தனைகளில் இரண்டு பிரார்த்தனைகள் நிறைவேறி விட்டன. இன்னும் இரண்டு பிரார்த்தனைகள் பாக்கி உள்ளது.அவைகள் குழந்தைகள் நன்றா படிக்க வேண்டும். வேறு ஒரு விஸ்தாரமான வீட்டிற்கு மாற வேண்டும். மேலே இருக்கும் பிரார்த்தனைகளுக்கு மஹாபெரியவா எப்படி பதில் கொடுத்தார் என்பதை பார்ப்போம்.

குழந்தைகள் சரியாக படிக்கவில்லையென்றால் ஒன்று குழந்தைகள் மக்கு குழந்தைகளாக இருக்கலாம், அல்லது வீட்டின் சூழ்நிலை சரியாக இல்லாமல் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அவ்வப்பொழுது சண்டையாக இருந்தால் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செல்லாது. இதனால் மதிப்பெண்கள் குறையலாம்.

நிலாவின் குழந்தைகள் இதில் இரண்டாவது ரகம். வீட்டில் மது அருந்திவிட்டு வரும் அப்பா. இதை கண்டிக்கும் அம்மா. இதனால் இருவருக்கும் சண்டை. அக்கம்பக்கத்தார் எல்லாம் வந்து விலக்கி விடும் அளவிற்கு சண்டை. இதை பார்த்து பயந்து போன குழந்தைகள். அந்த பிஞ்சு மனதிற்குள் படிப்பு குடி கொள்வதற்கு பதிலாக பயம் குடி கொண்டு விட்டது. நல்ல புத்திசாலி குழந்தைகள்.

வீட்டு சூழ்நிலையால் பிஞ்சிலேயே கருகிப்போன குழந்தைகள். .நல்லவேளை மஹாபெரியவா குரு பூஜையால் இவர்கள் வீட்டில் இரண்டு வாரத்தில் நல்ல சூழ்நிலை மாற்றம். பொறுப்பான அப்பா அன்பான அம்மா. இந்த சூழ்நிலை நிலாவின் குழந்தைகளுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தது. நன்றாக படிக்கவும் ஆரம்பித்தார்கள்.

ஆறாவது வார குரு பூஜை:

இந்தசமயத்தில் நிலா தன்னுடைய ஆறாவது வார மஹாபெரியவா குரு பூஜையை ஆரம்பித்தாள். அன்றும் கணவர் சகிதமாக பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்கள். இந்த முறை ஒரு மாற்றம். குழந்தைகளும் பூஜையில் கலந்து கொண்டனர். நான்கு பேரும் குடும்ப சகிதமாக பூஜை செய்தார்கள்.

இந்த முறை நிலாவிற்கு ஒரு முக்கியமான பிராத்தனை இருந்தது . பூஜை முடிந்து எல்லோரும் அவரவர்கள் வேலையை கவனிக்க சென்றார்கள்.எப்பொழுதுமே நிலா தான் மட்டும்தானியாக உட்காந்து மஹாபெரியவாளிடம் வேண்டுவாள்.

அன்றைக்கும் அப்படிதான். நிலாவின் குழந்தைகளுக்கு பள்ளியில் பீஸ் கட்டவேண்டும். கையில் பணம் இல்லை என்னசெய்வது. இந்தசமயத்தில் நிலா நினைத்தாள் பள்ளிக்கு பணம் கட்ட முடியவில்லை என்று கணவன் கண்ணனிடம் சொன்னால் வேதாளம் அந்த கவலையில் முருங்கை மரம் ஏறி விட்டால் என்ன செய்வது என்ற பயம். ஆகவே கணவர் கண்ணனிடம் எதுவும் சொல்லவில்லை.

கண்ணன் வேலைக்கு சென்றவுடன் குழந்தைகள் இருவரும் நிலாவிடம் ஸ்கூல் பீஸ் கட்டவேண்டும் என்று சொன்னார்கள். நிலா நானே இன்றைக்கு ஸ்கூலுக்கு வந்து பீஸ் காட்டுகிறேன் என்று சொன்னாள். குழந்தைகளும் சந்தோஷமாக பள்ளிக்கு சென்றனர்.

எல்லோரும் அவரவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். நிலாமட்டும் மஹாபெரியவாளிடம் மண்டியிட்டு பேச தொடங்கினாள். சாமி எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுத்தீர்கள். குடிகார கணவனை ராமச்சந்திர மூர்த்தியாக மாற்றினீர்கள். இன்றைக்கு என் குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டவேண்டும்.என்னிடம் நூறு ரூபாய் தான் இருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை.

எனக்கு அப்பா அம்மா எல்லாம் நீங்கள்தான் சாமி. எனக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் சாமி. இன்று என் குழந்தைகளிடம் ஸ்கூலுக்கு வந்து பீஸ் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டேன். எதாவது செய்யுங்கள் சாமி என்று கண்ணை மூடிக்கொண்டே வேண்டினாள். வேண்டிக்கொண்டு கண்ணை திறந்தாள்.

என்ன ஆச்சர்யம். மஹாபெரியவா சிரசில் இருந்து (சிரஸ் என்றல் தலை என்று அர்த்தம்) ஒரு வில்வ இல்லை கீழே விழுந்தது. இதை எழுதும் பொழுது என் உணர்வு எப்படி இருந்தது தெரியுமா. நாம் நேரில் பேசினால் மஹாபெரியவா எப்படி பதில் தருவாரா அப்படி இருந்தது. ஏன் வேண்டும் பொழுது மட்டும் வில்வ இலை விழ வேண்டும். மற்ற நேரங்களில் விழக்கூடாதா. இதுதான் மஹாபெரியவா கண்ணுக்கு தெரியாமல் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது . இதற்கு மேல் என்ன சான்று வேண்டும்.

நிலா மன நிம்மதியுடன் நினைத்தாள் சாமி கொடுத்து விட்டார் என்று.. பணம் எப்பொழுது எப்படி வரும் என்று தெரியவில்லை. ஆனால் வருவது சர்வ நிச்சயம். இப்படி நினைத்துக்கொண்டே இருக்கும் பொழுது வாசலில் நிலா என்று ஒரு அழைக்கும் குரல்.

நிலா சென்று வெளியில்பார்த்தாள். மருத்துவர் வீட்டின் பணிப்பெண் நிலாவை அழைத்துவர மருத்துவர் அழைப்பதாக சொன்னாள். நிலாவும் என்னபிரச்னையோ ஒன்னும் தெரியவில்லையே என்று அவசரமாக அவர்கள் வீட்டிற்கு சென்றாள். அங்கே ஊஞ்சலில் மருத்துவர் அமர்ந்து அன்றைய செய்தி தாளை படித்து கொண்டிருந்தார்.

நிலாவை பார்த்ததும் மருத்துவர் வாம்மா, கண்ணன் எங்கள் வீட்டிற்கு கார் ஓட்டுனராக வருவதில் உனக்கு சந்தோஷம்தானே என்று கேட்டார். நிலாவும், எங்கள்குடும்பத்திற்கே சந்தோஷம் ஐயா என்றாள். மருத்துவர் தொடர்ந்து கேட்கிறார்.

உனக்கு எத்தனை குழந்தைகள். நிலா சொல்கிறாள் இரண்டு குழந்தைகள் ஐயா இருவரும் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். மூத்தவன் பையன் அவன் ஒன்றாவது படிக்கிறான்.இளையவள் அதே பள்ளியில் L.K.G படிக்கிறாள் என்று சொல்லி முடித்தாள்.

மருத்துவர் சொல்கிறார். நானும் என் மனைவியும் ஒரு முடிவு செய்திருக்கிறோம். உன்னுடைய குழந்தைகளின் படிப்பு செலவை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.உனக்கு எப்பொழுதெல்லாம் ஸ்கூலுக்கு பணம் கட்டவேண்டுமோ அப்பொழுது என்னிடம் சொல்லு. நாங்கள் உனக்கு பணம் கொடுக்கிறோம் என்று சொன்னார்.

சொன்னதுதான் தாமதம் நிலா சொன்னாள். இன்னிக்கு கூட குழந்தைகள் இருவருக்கும் ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும்.என்ன செய்வது என்று சாமீ தாத்தாவை வேண்டி கொண்டு இருந்தேன்.அனுக்கிரஹம் செய்து விட்டார் உங்கள் வடிவில் என்றாள்.

மருத்துவர் கேட்டார் பணம் எவ்வளவு கட்டவேண்டும் என்று. நிலா இவ்வளவு கட்ட வேண்டும் என்று சொன்னாள். உடனே மருத்துவர் பணத்தை ஒரு கவரில் போட்டு நிலவிடம் கொடுத்தார். நிலாவும் மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை மஹாபெரியவா காலடியில் வைத்து நமஸ்கரித்தாள்.

நிலாவிற்கு நன்றிக்கடனாக அழுவதைத்தவிர எதுவும் தெரியாது.அழுதாள் ஓர் ஒரு மணி நேரம் மஹாபெரியவா முகத்தை பார்த்துக்கொண்டே அழுதாள்.

பின்னர் முகம் கழுவி பள்ளிக்கு கிளம்பினாள். குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு கொஞ்சம் தின் பண்டங்கள் வாங்கிக்கொண்டு சென்றாள். பள்ளியில் பீஸ் கட்டிவிட்டு சாப்பிடுவதற்கு வாங்கிக்கொண்டு போன தின் பண்டங்களை கொடுத்தாள்.

குழந்தைகளுக்கு இது கொஞ்சம் வித்யாசமாக படவே அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.. இனிமேல் நீங்கள் நன்றாக படித்தால் அம்மாவும் அப்பாவும் உங்களுக்கு வேண்டியது எல்லமே செய்வோம் என்றாள்.

குழந்தைகளை பார்த்து சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தாள் நிலா.மாதாந்திர தேர்வில் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று நிலாவுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுத்தனர். குழந்தைகள் படிப்புக்கும் மஹாபெரியவா அனுகிரகம்செய்து விட்டார்.அடுத்து ஒரு வசதியான வீட்டிற்கு குடி போக வேண்டும். கடைசி அற்புதத்தை அனுபவிப்போம்.

பெரிய வீடு அற்புதம்:

நிலா வழக்கம் போல ஒன்பதாவது வார பூஜை முடித்து மஹாபெரியவாளிடம் தன்னுடைய பெரிய வீடு ஆசையை சமர்ப்பித்தாள். சந்தேகமென்ன மஹாபெரியவா நிச்சயம் அனுக்கிரஹம் செய்து விடுவார்.

சொல்லிவைத்தாற்போல் நிலா வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக நிலாவிற்கு தகவல்கிடைத்தது.நிலா கண்ணனுடன் சென்று பார்த்தாள். வீடு பிடித்து போய் விட்டது. தன்னிடம் இருந்த பணத்தை முன் பணமாக கொடுத்து விட்டு மீதி தொகையை தற்போது குடியிருக்கும் வீட்டுக்காரரிடம் பெற்று கொடுத்து விடலாம் என்று நினைத்தாள்.

எப்பொழுதுமே வாழ்க்கையில் நாம் ஒன்று நினைப்போம் இறைவன் ஒன்று நினைப்பான். நிலாவிற்கு இப்பொழுதான் தெரிந்தது தற்பொழுது குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரன் ஒரு மோசமான பேர்விழி என்று. அவனுடைய பழக்கமே யாருக்கும் முன் பணத்தை கொடுத்ததாக சரித்திரமில்லை .முன் பணத்தை மறந்து விட வேண்டியதுதான் என்று எல்லோரும்சொன்னார்கள்.

நிலாவிற்கு தெரிந்த ஒரே ஆபத் பாந்தவன் மஹாபெரியவா தான். மஹாபெரியவா முன் மண்டியிட்டு அழுதாள். பிறகு மஹாபெரியவாளை தியானம் பண்ணிக்கொண்டே தன்னுடைய வீட்டுக்கு சொந்தக்காரரிடம் சென்று பேசினாள்.

வீட்டுக்கு சொந்தக்காரர் ஒரு இரண்டு நாள் அவகாசம் கேட்டார். நிலாவும் தன்னுடைய நிலையை எடுத்துச்சொல்லி விட்டு வந்தாள். என்ன ஆச்சரியம் இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு சொந்தக்காரர் தானே வந்து அட்வான்ஸ் தொகையை நிலாவிடம் திருப்பி கொடுத்தார்.

நிலாவிற்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. நன்றி சொல்லிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டாள் நிலா. பணத்தை மஹாபெரியவா காலடியில் வைத்து பிறகு கணவர் கண்ணன் வந்தவுடன் அவரையும் அழைத்து கொண்டு புதிய வீட்டிற்கு சென்று மீதி அட்வான்ஸ் தொகையை கொடுத்து விட்டு அந்த வாரமே புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தார்கள்.

குழந்தைகளுக்கு ஒரு தனி அறையும் நிலா கண்ணனுக்கு தனி அறையும் கிடைத்தது. ஒன்பது வார பூஜையில் திக்கு தெரியாமல் இருந்த குடுமபத்திற்கு ஒரு திசையை காட்டி இதுதான் வாழ்க்கை என்று காண்பித்து கூடவே இருந்து கொண்டு இன்றும் வழி நடத்துகிறார் மஹாபெரியவா.

எனக்கு ஒன்றுதான் சொல்லத்தோன்றுகிறது.மஹாபெரியவா நம் கண்ணுக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால் நாம் வேண்டுவதற்கு சரியான நேரத்தில் நல்ல பதிலை கொடுத்து நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பதை மறுக்க முடியுமா.

இதற்கு என்ன தேவை? நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கையும் உருகும்பக்தியும்போதுமே. நாம் அழைத்தால் மஹாபெரியவா இதோ வந்து விட்டேன் என்று அபயக்கரம் நீட்டுகிறாரே.அனுபவபூர்வமாக எத்தனை உதய நிலாக்களை பார்க்கிறோம் எத்தனை ஸ்வர்ணமால்யாக்களை பார்க்கிறோம் எத்தனையோ விஷ்ணு மாயாக்களை பாக்கிறோம். இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது.

மற்றவர்கள் அனுபவங்களில் இருந்து பாடம் கற்போம்

மஹாபெரியவா சம்பந்தத்துடன் வாழும் வழியை கற்போம்

வாழ்க்கையில் பட்டது போதும்

வாழும் முறையை கற்போம்

இறுதியில் சிவமாக போவோம்

சவமாக போக வேண்டாம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square