ஸ்ரீகுருதுதி

“துயர் கடிதல்”
அருட்திரு பாம்பன் ஸ்வாமிகள் திருமுருகனின் புகழ் பாடி பக்தர்களுக்கு அருள்பெற்றுத் தரவேண்டி அழகுமுகத் தமிழ்கடவுளாம் குமரகுருபரனின் வாகனமாகிய மயிலை நோக்கி, உம் தலைவனை எமைக் காக்கும் பொருட்டு அழைத்து வா என பாடிய “பகை கடிதல்” எனும் விருத்தத்துதியினை எழுதியருளினார்கள். அவ்வழிபோலே நம் ஸ்ரீஸ்வாமிநாத குருபரனான ஸ்ரீசரணரை ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவாளை போற்றிய குருப்புகழையே, அந்த ஓசையை ஒலியெழுத்தோசைதனையே அழைத்து எம்பெருமானை எம் குருபரனை எமைக் காக்கவேண்டி அழைத்து வா என வினவுகிற ஒரு குருத்துதியை குருகானத்தை இன்றைய தினம் அவர் அருளாலே அவருடைய கருணாகடாக்ஷத்தினைப் பெறவல்லதொரு பாமாலையாக பகிர்கின்றேன்! இந்தத் துதியானது ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் அருளிய “பகை கடிதல்” எனும் துதியினுடைய சந்தத்திலேயே ஸ்ரீமஹாஸ்வாமிகளைப் போற்றி எழுதியதாகும். பகை கடிய அவர் பாடினார்; துயர் கடிய அடியேனுக்கு பாடிட அவரே அருள்வாராக!
#ஸ்ரீகுருதுதி #துயர்_கடிதல் சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்! திருவளார் சுடருருவே சிவைபத மமருருவே அருமறை எனுந்தருவே யறவர்கள் முதலுருவே இருளக ரொளியுருவே எனநினை வெனதொழவே குருபரன் சங்கரனை கொணர்தியெம் குருப்புகழே! 1 மறைபுக ழுடையுருவே மறையது விளங்கிடவே நிறைவென வருதிருவே புயமொடு அருளுருவே குறையறு மிகையுருவே என நினை வெனதொழவே நிறைகுரு சங்கரனை கொணர்தியெம் குருப்புகழே! 2
இடர்களு மலிந்தெனையே நசித்திடு நிலையிதிலே அடர்படு துயர்களையு வளர்சடை பதியெனவே தடமுறை துணையுருவே என நினை வெனதொழவே குருபரன் சங்கரனை கொணர்தியெம் குருப்புகழே! 3 நவமணி யணிமார்பன் திருவொளி படருருவே பவமுடை வினையகல அருள்புரி குருவுருவே
சிவமிதி நிறைவருளே என நினை வெனதொழவே தவமுனி சங்கரனை கொணர்தியெம் குருப்புகழே! 4 அழகுறு மதிமுகனே அறவர்கள் பணிவிறையே மழவுரு வுடையவனே மதியொளி பெரியவனே இழவில குருபரனே எனநினை வெனதொழவே வழுவில குருபரனை கொணர்தியெம் குருப்புகழே!
5 இணையறு குருவுருவே குருசசி சேகரனே துணையென வருவுருவே தூயுறு தேசிகனே மனமுடை மா’தவனே எனநினை வெனதொழவே குணமுறு சங்கரனை கொணர்தியெம் குருப்புகழே!
6 எளியவ ரிறையெனவே எமக்கென வருவுறவே வளிதுயர் அகன்றிடவே திறமருள் தவவுருவே வெளிநிறை மெய்பொருளே எனநினை வெனதொழவே தளிரருட் சங்கரனை கொணர்தியெம் குருப்புகழே! 7 குலபதி ஏகனவன் செகத்குரு வுருவினிலே இலகிடும் தவமணியே நலமருட் தலகுருவே கலகல கலவெனமா கருணையு முறுதிருவே வளமுறை சங்கரனை கொணர்தியெம் குருப்புகழே!
8 இகலறு சிவகுருவே வெனநினை வெனதொழவே சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே தகதக தகவெனவே நடையுறு பதியெனவே உமைபதி யுருகுருவை கொணர்தியெம் குருப்புகழே!
9 கருணைபெய் கனமுகிலாய் அருள்பொழி மதியொளியே அருணைய னரனெனவே யகநினை வெனதொழவே தருவென வருள்நிதியாம் தவத்தல முறைபவனை குருபல ரமர்வழியை கொணர்தியெம் குருப்புகழே!
10 எல்லாம் வல்ல மஹாபிரபுவான ஸ்ரீசரணருடைய அனுக்ரஹத்திலே இப்பாவினைக் கொண்டு துதிப்போர்க்கெல்லாம் துயர்கள் நீங்கப்பெற்று ஆனந்தம் நிறைய ஆத்மார்த்தமாக பிரார்த்தித்துக் கொண்டு பகிர்கின்றேன். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்