குருப்புகழ்

பெரியவா சரணம் புத்திர பாக்கிய ப்ரார்த்தனைக்கு பலிதம் வேண்டும் குருப்புகழ். அனைத்து தோஷங்களும் நீங்கி, புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி, நேற்றைய தினம் ஓர் குருப்புகழ் எழுதிடப் பணித்தாரன்றோ நம் ஈஸ்வரன். இன்றைக்கு பக்தர் ஒருவர் மூலமாக சத்ய ப்ரார்த்தனா பத்திரமாக, புத்ர பாக்கியம் வேண்டுவோர்தம் பிரார்த்தனை பலிதமாக வேண்டுவதாக ஒரு குருப்புகழை எழுதிடப் ப்ஃணிக்கின்றாரே! சர்வேஸ்வரனின் கருணையே தனி தானே! இதனை அடியேனுக்கு பெங்களூரூவிலுருந்து தொலைபேசியில் கேட்டவருடைய பெயரே சந்திரசேகரன் என்பதாம். சங்கரா! சாக்ஷாத் அந்த ஈசபரமேஸ்வரனே தக்ஷிணாமூர்த்தியாக, பட்டாரகனாக அவதரித்து, காலடி க்ஷேத்திரத்திலே ஆதிசங்கரனாக அவதரித்து மனிதம் விளங்கச் செய்ததோடு, மாசிலா மணியாக, காஞ்சிப் பொக்கிஷமாக, காஞ்சி கண்டெடுத்த கருணாமூர்த்தியாக, ஸ்ரீமஹாஸ்வாமிகளாகவும் அவதாரம் செய்து ஒரு நூறு வருஷங்கள் நம்மோடிருந்து நமக்கு நல்லறங்களைக் காட்டி, நம்மிலே இன்றளவிலும் இறைபக்தி, பரோபகாரம், மனித நேயம் இன்னபிற நல்ல அறங்களை விளங்கச் செய்துள்ளாரன்றோ! அந்த பரமேஸ்வர ஸ்வரூபத்திடம், பரமாத்மா ஸ்வரூபத்திடம், பரப்ரஹ்ம ஸ்வரூபத்திடம் இன்றைய தினம், உலகிலே மிகமிகச் சிறந்த செல்வமன குழந்தைச் செல்வம் வேண்டுவோருக்கும் வரமருள வேண்டி இந்த குருப்புகழைப் பாடி போற்றி வேண்டுவோமே! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர #குருப்புகழ் பரந்த வுலகிதும் ... ... ... ... ... சிறப்பேக விளங்கு காஞ்சியி... ... ... ... ... னொளியாக சிறந்த நிறைமதி ... ... ... ... ... குருவாக பிறந்த சிவகுரு ... ... ... ... ... பதம்நாடி மணந்த வனிதையு ... ... ... ... ... மகிழ்பேண சுகந்த குலமதுந் ... ... ... ... ... தழைத்தோங்க பணிந்த அடியவர்க் ... ... ... ... ... கருள்வாயே சுரந்த வரமருட் ... ... ... ... ... சங்கரனே மஹா சிவஸ்வரூபமான அந்த சுவாமிநாதனான குமரக் கடவுளிடம் எம்பிரான் அருணகிரியார் “உறவுகொள் மடவர்க............. ளுறவாமோ, உனதிரு வடிவியினி........... யருள்வாயே” என பாடியருளினார்கள். அடியவனோ, நம் சுவாமிநாதக் கடவுளான ஸ்ரீசரணாளிடம் குலம் தழைக்க மக்கட்செல்வம் எனும் வரம் தருவாயே என அனைத்து உறவுகளின் சார்பிலேயும் வேண்டுகிறேன். சேகரன் என்பது தமிழிலே சிறந்தவன் என்றும், சந்திரனை நிறைமதி எனவும் பெரியோர்கள் தமிழிலே பதஞ்சொல்வதற்கேற்ப இங்கே “ஸ்ரீ சந்திர சேகர குருவாக” என்பதனை “சிறந்த நிறைமதி குருவாக” எனும் பதத்திலே அழைத்து மகிழ்கின்றேன். பொதுவாக பூர்வ ஜென்ம பாப சாபங்களாலேயே புத்திர பாக்கியம் இல்லாமற்போக வாய்ப்பு என ஜோதிஷம் சொல்வதனை அறிவோம். சர்ப தோஷம், பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், சகோதர தோஷம், மாதுல தோஷம், பிராம்மணா தோஷம், பத்தினி தோஷம், மந்திர தோஷம், பிரேத தோஷம் இன்னபிற எல்லாவகை தோஷங்களுமே குருவின் திருவடியிலே சரண்புகுவோர்க்கு சகல பாபங்களும் தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பதான பெரியோர்கள் வாக்கிற்கேற்ப நாம் அனைவரும் சர்வேஸ்வரனான மஹாபிரபு, சர்வக்ஞன், கருணாமூர்த்தியான ஸ்ரீசரணாளிடம் சரண்புகுந்து வரம் கேட்போமே! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்