Featured Posts

திவ்ய தேச திருத்தலம் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள்  கோவில்


திவ்ய தேச திருத்தலம்

கும்பகோணம்

சாரங்கபாணி பெருமாள் கோவில்

தம்பதி சமேதராய் சாரங்கபாணி பெருமாள்

இந்த கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. .நூற்றி எட்டு வைணவ ஸ்தலங்களில் ஸ்ரீரங்கம் திருப்பதிக்கு அடுத்தாற்போல் இந்த திவ்ய தேசம் போற்றப்படுகிறது. இந்தக்கோவில் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த பூமியாக கருதப்படுகிறது.. இந்த கோவிலில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார்.

திருவரங்கனின் புகழை கூறும் பஞ்ச ரங்க ஸ்தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் நடுப்பகுதி ஒரு தேரின் அமைப்பை கொண்டுள்ளது.தேரின் சக்கரங்களும் யானைகளும் குதிரைகளும் கல்லால் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை கொண்டது

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இங்குள்ள கோபுரத்தில் நாட்டியத்தின் நூற்றி எட்டு கர்ண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

சாரங்கபாணி என்பதற்கு பெயர் காரணம்.

சாரங்கம் என்றால் திருமாலின் வில் என்று அர்த்தம்..பாணி என்றால் கரத்தில் ஏந்தியவன் என்று அர்த்தம். சாரங்கம் என்னும் வில்லை கையில் ஏந்தியவன் சாரங்கபாணி.

இந்தக்கோவிலின் முன் மண்டபத்தில் தெற்கு சுவரில் காணப்படும் கல் வெட்டு ஆயிரத்து முன்னூற்று எண்பத்தைந்தாம் (1385) வருடத்தில் கல்லலால் செதுக்கப்பட்டுள்ளது..இந்த கல்வெட்டில் விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது என்று எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் தான் முதல்முதலாக கும்பகோணம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

மூலவர்: சாரங்கபாணி என்னும் அரவமுதன்..

உத்ஸவர்: பஞ்ச ஆயுதங்களுடன் வலது திருக்கையில் அபயமளிக்கும் முத்திரையுடன் தரிசனம் தருகிறார்..

தாயார்: கோமளவல்லி தாயார்.

திருவிழாக்கள்: இங்கு சித்திரை தேர் விஷேஷம்.

தீர்த்தம்:ஹேமவல்லி புஷ்காரணி, காவேரி , அரசலாறு

பழமை: இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தையது.

ஸ்தல சிறப்பு: இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால் தாயாரை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு தாயாரை சேவித்தபிறகே பெருமாளை சேவிப்பது வழக்கம்.கோவில் வடிவமும் அந்தமாதிரி தான் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் சன்னதிக்கு சென்றுவிட்டுதான் பெருமாள் சன்னதிக்கு செல்ல வேண்டும்..

கோவில்களை தன்னுள்ளே கொண்டுள்ள கும்பகோணத்தில் ரம்யமான சூழ்நிலையில் கோவில் அமைந்துள்ளது இந்த சாரங்கபாணி கோவில். .கருவறைக்கு முன்பாக இருக்கும் சந்தான கிருஷ்ணனிடம் வேண்டினால் வேண்டியது கிடைக்கும். பிரார்த்தனைகளும் நினைவேறும்.

உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் இங்கு தாயார் பெருமாளை வேண்டிக்கொண்டால் வேண்டியது கை கூடும்.

உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறி அமைதியும் வளமும் கொண்ட வாழ்க்கை வாழ பெருமாளும் தாயாரும் உங்களுக்கு அனுக்கிரஹம் செய்யட்டும். நானும் மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

கும்பகோணம் மஹாமஹ குளம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square