top of page
Featured Posts

பெரியவா பார்வையில்-004


கிருஷ்ண தேவராயர்

விருபாக்ஷ கோவில் ஹம்பி கர்நாடக மாநிலம்

பெரியவா பார்வையில்-007

பெரியவா பார்வையில் மஹான்கள்

வித்யாரண்யர்

மஹான்களுக்கு மனமிரங்கிய மஹாலக்ஷ்மி என்ற தலைப்பில் மஹாபெரியவா இரண்டு மஹான்களை பற்றி பேசுகிறார்.. பெரியவாளின் பார்வையில் மஹான்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சன்யாசிகள் யார் மஹான்கள் யார் என்பதை பற்றி மஹாபெரியவா சொல்வதை கேட்போம்.

பற்றை துறந்து சுயநலத்தை அறுத்து வாழ்பவர்கள் சன்யாசிகள். உலக விஷயங்களில் இருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக்கொண்டு மற்றவர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு செயல் புரிபவர்கள் சன்யாசி என்ற நிலையையும் தாண்டி மஹான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பற்றை துறந்து சுயநலத்தை அறுத்து பொதுநலனை போஷித்து வாழ்பவர்கள் மஹான்கள்..

இப்படிப்பட்ட மஹான்களில் இருவரை மஹாபெரியவா தேர்ந்தெடுத்து சொல்கிறார். அவர்களில் ஒருவர் விஜயநகர சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்த வித்யாரண்யர் இன்னொருவர் வேதாந்த தேசிகர். முதலில் வித்யாரண்யர் பற்றி மஹாபெரியவா என்னசொல்கிறார் என்று பார்ப்போம்.

ஆரண்யம் என்றால் காடு வித்யா என்றால் வித்தை. காடுகளை போல தன்னிடம் வித்தைகள் மண்டிக்கிடந்ததால் இவருக்கு வித்யாரண்யர் என்று பெயர். இந்த பெயர் காரணப்பெயர். வித்யாரண்யர் விஜயநகர சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தவர்.

இந்த விதாரண்யர் சன்யாசம் வாங்காத நிலையில் மனசுக்குள் அப்படியொரு ஆசை. துன்பத்தில் இருப்பவர்களை மீட்க வேண்டும். இல்லதவர்களுக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து வாழ வைக்க வேண்டும்.என்பது போல நிறைய ஆசை.

ஆனால் வித்யாரண்யரிடம் ஆசை மட்டுமே இருக்கிறது. கையில் இருப்பது ஏழ்மை ஒன்றுதான். அந்த ஏழ்மையிலும் கூட மற்றவர்களுக்கு பொருள் உதவி செய்யவேண்டும் என்ற தணியாத தாகம் மட்டும் இருந்தது.

ஒரு நாள் முடிவு செய்தார். கடும் தவம் செய்து மஹாலக்ஷ்மியை தரிசனம் செய்து தன்னுடைய ஆசைகளை எல்லாம் சொல்லி நிரம்ப பொன்னும் பொருளும் கிடைக்க வரம் பெற்று தன்னுடைய ஆசையை நிறைவேற்றி கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தார்.. கடும் தவம் புரிந்தார். இவருடைய தவ வலிமையை கண்டு மகிழ்ந்து போய் மஹாலக்ஷ்மி தரிசனம் கொடுத்து என்ன வேண்டும் என்று கேள் என்றாள்.

வித்யாரண்யரும் தன்னுடைய ஆசைகள் அனைத்தையும் கூறி தனக்கு பொன்னும் பொருளும் வேண்டும் என்று கேட்டார்..இதை கேட்ட மஹாலக்ஷ்மி சிரித்தாள். வித்யாரண்யர் சிரிப்புக்கு காரணம் கேட்க

மஹாலக்ஷ்மி சொல்கிறாள் "உன்னுடைய இந்த பிறப்பில் உனக்கு விதிக்கப்பட்டது ஏழ்மை மட்டுமே. எனவே உனக்கு என்னால் பொன்னும் பொருளும் இந்த பிறவியில் தர இயலாது. வேண்டுமானால் அடுத்த பிறவியில் நிச்சயம் உனக்கு பொன்னும் பொருளும் தருகிறேன் என்று சொன்னாள். என்று சொல்லி மறைந்தாள்.

வித்யாரண்யற்கு மிகப்பெரிய ஏமாற்றம்.இவ்வளவு கடும் தவம் புரிந்து மஹாலட்சுமியை தரிசனம் செய்தும் பயனில்லாமல் போய் விட்டதே என்று மிகவும் வருந்தினார்.

பிறகு முடிவு செய்தார். தான் சன்யாசம் வாங்கி கொண்டால் அது அடுத்த பிறவிக்கு சமமாகும்.அப்பொழுது மீண்டும் தவம் செய்து மஹாலக்ஷ்மியிடம் வரம் பெற்று விடலாம் என்று முடிவ செய்தார்.

மஹாபெரியவா இங்கு ஒரு விஷயத்தை சொல்லுகிறார். சன்யாசம் என்றால் அடுத்த பிறவி என்பதற்கு ஆதி சங்கரரின் வாழ்க்கையில் இருந்து ஒரு உதாரணத்தை கையாளுகிறார்.

ஒரு நாள் ஆதி சங்கரர் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது ஆதி சங்கரரை ஒரு முதலை வாயினால் கவ்வி இழுக்கிறது. இதை பார்த்த சங்கரரின் தயார் கத்தி கூச்சலிடுகிறாள்.

உடனே ஆதி சங்கரர் தன்னுடைய தாயாரிடம் சொல்லுகிறார். அம்மா நான் சொல்வதை கேள் என்னை நீ சன்யாசத்திற்கு கொடுத்து விடுவதாக சம்மதித்து விடு. எனக்கு இந்த பிறவியில் முதலை விழுங்கி தான் என் ஜென்மம் முடிய வேண்டும் என்பது விதி..எப்பொழுது நீ என்னுடைய சன்யாசத்திற்கு ஒப்புக்கொள்கிறாயோ அந்த நிமிடமே முதலை என்னை விட்டுவிடும்.நானும் பிழைத்து விடுவேன் என்கிறார்.

எப்படியும் தன்னுடைய மகன் உயிருடன் இருந்தால் போதும் என்று நினைத்து சன்யாசத்திற்கு சம்மதிக்கிறாள்.. அடுத்த நிமிடம் முதலை சங்கரனை விட்டுவிட்டது. இதை பிரமாணமாக வைத்து சன்யாசம் என்றால் அது அடுத்த பிறவிக்கு சமம் என்று சொல்கிறார்.

இப்பொழுது வித்யாரண்யர் சன்யாசத்திற்கு வருவோம். வித்யாரண்யர் தவத்திற்கு இறங்கி மஹாலக்ஷ்மி காட்சி தருகிறாள். இந்த முறை வித்யாரண்யர் தான் சன்யாசம் வாங்கி விட்டதால் இது உன்னுடைய கூற்றுப்படி அடுத்த பிறவி.. இப்பொழுது எனக்கு பொன்னும் பொருளும் கொடுக்க தடை ஏதும் இல்லையே என்று வாதிடுகிறார். மீண்டும் மஹாலக்ஷ்மி சிரிக்கிறாள்.

வித்யாரண்யர் சிரிப்புக்கு காரணம் கேட்க மஹாலக்ஷ்மி சொல்லுகிறாள்." “வித்யாரண்யறே சன்யாசம் என்றாலே உலக பற்றை விட்டு விடுவதுதானே.. பிறகு எங்கிருந்து வந்தது இந்தப்பொண்ணும் பொருளும் என்று கேட்க அப்பொழுதுதான் வித்யாரண்யருக்கு தன்னுடைய தவறு புரிகிறது,.

இருந்தாலும் தான் சொல்லியபடி பொன்னையும் பொருளையும் கொடுத்து விட்டு மறைந்து போனாள். பொன்னும் பொருளும் கிடைத்தும் தன்னால் அந்த பொன்னையும் பொருளையும் தொட முடியாது. ஏனென்றால் தான் ஒரு சன்யாசி. இந்த இடத்தில் வித்யாரண்யர் ஒரு காரியத்தை செய்தார்.

இவர் காட்டிலே தவம் செய்து கொண்டிருந்தபொழுது இரண்டு ஆட்டு இடையர்கள் மிகவும் கவனமாக ஆடுமாடுகளை மேய்ப்பது மட்டுமில்லாமல் அங்கு தவம் செய்யும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் அவர்கள் தவம் கலையாதவாறு பார்த்துக்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் மிகவும் மரியாதையாகவும் பவ்யத்துடனும் நடந்து கொண்டார்கள்.

வித்யாரண்யர் அவர்களை அழைத்து பொன்னையும்பொருளையும் அவர்களிடம் கொடுத்து ஒரு அருள் சாம்ராஜ்யத்தை நிறுவ சொன்னார்.. அவர்களும் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள். சாம்ராஜ்யத்திற்கு பெயர் விஜயநகர சாம்ராஜ்யம்.இந்த ஆட்டு இடையர்கள்தான் ஹரிஹர புக்கர்கள்.

இன்று நாம் காணக்கூடிய விஜய நகர சாம்ராஜ்ய கோவில்கள் அனைத்தும் கட்டப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்த ஆட்டு இடையர்கள். நம்முடைய பாரம்பரியம் மிக்க சரித்திர புகழுடன் மட்மல்லாமல் புராணங்களில் இடம் பெற்றுள்ள கோவில்களையும் அன்று இருந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் முகமதியர்கள் படையெடுப்பில் இருந்து காப்பாற்றி கொடுத்தனர். இதில் இன்று நாம் வழிபாடும் ஸ்ரீரங்கம் கோவிலும் ஒன்று

மஹாபெரியவா பார்வையில் சன்யாசி என்றால் அவனுக்கு வேண்டுமானால் பற்று இல்லாமல் இருக்கலாம்.ஆனால் மற்றவர்கள் நன்றாக இருக்க அவன் பொன்னையும் பொருளையும் நாடுவதில் தவறு என்ன இருக்கிறது என்று வாதிடுகிறார்..

அடுத்த பதிவில் வேதாந்த தேசிகர் பற்றிய மஹானை பற்றி மஹாபெரியவா என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page