Featured Posts

இந்து மதம் ஒரு வாழும் முறை -008


இந்து மதம் ஒரு வாழும் முறை -008

ஜீவாத்மா யார்? பராமதா யார்?

நாம் வழிபடும் பரமாத்மா

எங்கோ இல்லை

நாம் தான் பரமாத்மா

நாம் இதை உணரவில்லை.

உணரும் வரை ஜீவாத்மா

உணர்ந்து விட்டால் நாமே பரமாத்மா.

மகாபெரியவா ஒரு அழகான கதை மூலம் நமக்கு கற்றுக்கொடுக்கிறார் வாருங்கள் எப்படி என்பதை கற்போம்.. வாருங்கள் உங்களை கதைக்கு அழைத்து செல்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா தன்னுடைய நாட்டை நல்ல முறையில் ஆண்டு வந்தான்.மக்களுக்கும் ராஜாவிற்கும் அப்படியொரு பாசப்பிணைப்பு. மொத்தத்தில் அவனுடையநாட்டில் தர்மம் தழைத்தது. பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். மனைவி இளவரசரை நன்றாக வளர்த்து வந்தாள்.

இந்த சமயத்தில் அண்டை நாட்டு மன்னன் தன்னுடைய நாட்டை விரிவு படுத்த எண்ணி எல்லா அண்டை நாட்டுடனும் போர் புரிந்து பல நாடுகளை கைப்பற்றினான், ஆனால் நம்முடைய தர்மவான் ராஜா போர் புரிவதில் திறமைசாலி. அவனை தோற்கடிக்கவே முடியவில்லை.

ஒரு சமயத்தில் அண்டை நாட்டு ராஜா போர் புரிவதில் உள்ள சட்ட திட்டங்களை எல்லாம் மீறி இரவில் வந்து போர் புரிந்து நாட்டை கைப்பற்றி விட்டான். தன்னுடைய நாடு கைப்பற்றப்பட்டது என்பதை தெரிந்து தன்னுடைய மனைவியையும் மகனையும் ஒரு குதிரை மீது உட்காரவைத்து காட்டிற்குள் அனுப்பிவிட்டான்.

பிறகு தானும் ஒரு குதிரையில் ஏறி காட்டிற்குள் சென்றான்.ஆனால் எப்படியோ அண்டை நாட்டு ராஜா தன்னுடைய படைகளை அனுப்பி தர்மவான் ராஜாவை கொன்று விடுகிறான்.

ராஜாவின் மனைவி தன்னுடைய மகனை அந்த காட்டில் ஒரு வேடுவச்சியிடம் கொடுத்து விட்டு இறந்து விடுகிறாள். நாட்கள் பழக்கழிந்தன. வருடங்கள் உருண்டோடின. குழந்தையாக இருந்த இளவரசன் இன்று ஒரு வாலிபனாக வளர்ந்து வேட்டையாடுவதில் சிறந்து விளங்கினான்.

தர்மவானான ராஜாவின் மந்திரிக்கு தன்னுடைய இளவரசர் ஒரு வேடுவச்சி வீட்டில் வளர்கிறார் என்று தெரிந்து விட்டது. மந்திரி அந்த வேடுவச்சி வீட்டிற்கு சென்று உண்மையை கூறி இளவரசரை தன்னுடன் அனுப்புமாறு கேட்கிறார். அந்த வேடுவச்சி சம்மதிக்கிறாள்.

ஆனால் இளவரசர் தன்னுடைய தாயை பிரிய மறுக்கிறார். ஆனால் அந்த வேடுவச்சியோ உண்மையை கூறி அவருக்கு நாட்டை மீட்டு மக்களை காக்கும் கடமை இருக்கிறது என்று சொல்கிறாள். வேடுவனான இளவரசர் மந்திரியுடன் செல்கிறார்.

தன்னுடைய இளவரசர் இத்தனை நாளும் வேட்டைக்காரனாக இருந்தும் இளவரசர் என்று சொன்னதுமே அதிகாரங்கள் கையில் வந்ததுமே தனக்கென்று ஒரு மிடுக்கு வந்து விட்டது..ஒரு தேர்ந்த இளவரசை போல நடந்து கொள்கிறான். அவன் ஒரு இளவரசர் என்று மந்திரி சொல்லாத வரை அவன் ஒரு வேட்டை காரனாக தான் இருந்தான், ஆனால் தான் ஒரு ராஜா என்று தெரிந்ததுமே அவன் ஒரு ராஜாவுக்கு உரிய அத்தனை குணங்களையும் பெற்றான்.

இந்த கதையில் ராஜாவாக வேண்டியவன் வேடுவனாக இருந்தான் அவன் ராஜா என்று தெரியாதவரையில். ராஜா என்று தெரிந்ததுமே அவன் ராஜாவிற்கு உடைய அத்தனை நடை உடை பாவனைகள் உயரியசிந்தனைகள் எல்லாம் பெற்றான். இத்தனை நாளும் அந்த ராஜா அந்த வேடுவனுக்குள்ளே தான் இருந்தான். அந்த வேடுவனுக்கு அவன் ஒரு ராஜா என்று புரிய வைக்க ஒரு மந்திரி இருந்தான். புரிந்தது.

இப்பொழுது ராஜாவின் இடத்திலே பரமாத்மாவையும் வேடுவன் இடத்திலே ஜீவாதாமாவையும் வையுங்கள். நாமே பரமாத்மா என்று நமக்கு புரிய வைக்க மந்திரி வேண்டாம்.. ஒரு குரு இருந்தால் போதுமே.. நம்முடைய உயரிய சிந்தனைகள் பராமவாத்மாவுக்கு உடைய அத்தனை கல்யாண குணங்களும் நமக்கு வந்து விடாதா.

உண்மையில் ஒவ்வொரு ஜீவாதாமாவும் ஒரு பரமாத்மாதான்.நாமும் பரமாத்மாதான் என்று நமக்கு புரிய வைக்க ஓர் குரு தேவை. கண்ணனுக்கு தெரியும் மஹாபெரியவாளை பற்றுவோம். நாமும் ஒரு பரமாத்மாதான் என்பதை உணவோம். நல்ல இறை வாழ்க்கை வாழுவோம்.

பரமாத்மாவுக்கு உருவம் கிடையாது நிறம் கிடையாது ஆண் பெண் பாலினம் கிடையாது. பரமாத்மா என்ற வார்த்தை குணங்களால் ஆனது நல்ல சிந்தனையால் ஆனது. நல்ல குணங்களையும் சிந்தனைகளையும் கொண்டவர்கள் யாருமே பரமாத்மா தான் இது தெரியாத வரை நாம் எல்லோரும் ஜீவாத்மாக்களே.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square