Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-23 பாகம் -1 ராமானுஜம் குமுத வள்ளி


குருவே சரணம் குரு பாதமே சரணம்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-23 பாகம் -1

ராமானுஜம் குமுத வள்ளி

வாழ்க்கையின் போக்கு திசை மாறும் பொழுது

நம் மனம் கலக்கமடைகிறது

குருவின் கிருபையால் வாழ்க்கை சரியான திசையில்

செல்லும் பொழுது மனம்

தெளிந்த நீரோடை போல ஆகிவிடுகிறது.

அந்த குருதான் பரமேஸ்வர அவதாரம்

மஹாபெரியவா

இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. உடலையும் உள்ளத்தையும் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் நம்மை வந்து தாக்கும் கலியின் விகாரங்கள் ஒருபுறம் கர்ம பலன்களின் தாக்கம் மற்றொருபுறம்.

நாம் பிரச்னையை வரவழைத்துக்கொள்ளாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் நம்மை வந்து தாக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது. எப்படி சமாளிப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் எல்லா நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஒரு சவாலாகவே அமைந்து விடுகிறது.

அதுவும் இளமையும் உடலில் தெம்பு இருக்குமேயானால் கொஞ்சம் சமாளிக்கலாம். ஆனால் அறுபது வயதுக்கு பிறகு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியம் குறைந்தே இருக்கும். அந்த சமயத்தில் யாருடைய துணையோடு நாம் பிரச்சனைகளுக்கு ஈடு கொடுத்து வாழ முடியும். இப்படிப்பட்ட ஒரு சிறிய குடும்பம் தான் தங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வேண்டி என்னை நாடினார்கள்.நான் என்ன செய்யமுடியும். எனக்கு தெரிந்த ஒரே பரம்பொருள் மஹாபெரியவா தான்.

இனி இவர்களது குடும்பத்தை பற்றி சில வரிகள்

அழகிய கடற்கரை. காற்றுக்கு பஞ்சமா என்ன. காலையிலும் மாலையிலும் நடை பயிலும் வயதான குழந்தைகள் வந்து போகும் இடம். இளம் காதலர்கள் இந்த உலகமே தங்களுக்காக படைக்க பட்டிருக்கிறது என்ற நினைப்பில் பட்டாம்பூச்சி கனவுகளோடும் மத்தாப்பு கற்பனைகளோடும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும் கொண்டு ஒரு யுகத்தை கூட ஒரு விநாடியாக அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.

தங்களுடைய பெற்றோர்களின் கனவுகளை நீர்குமிழியாக்கிவிட்டு தங்களுடைய கனவுகளை கடல் அலைகளுக்கு இரையாக கொடுத்து விட்டு நாளை என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் இல்லாமல் இன்று மட்டுமே நிஜம் என்ற கற்பனையில் ஒவ்வொரு வினாடியையும் கழித்து கொண்டிருக்கும் இடம் அது.

இந்த கடற்கரைக்கு அருகில் தங்களுடைய தாத்தா பாட்டிகள் அன்று இடம் வாங்கி கட்டிய வீடுகள். விசாலமான வீடு. கடல் காற்றுக்கு பஞ்சமே இல்லை.முன்னோர்கள் கட்டிய வீடுகள் அல்லவா? வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் லக்ஷ்மிகரமாக இருக்கிறது. அவர்களின் மனதை போலவே வீடும் பெரியதாக இருக்கிறது. இன்று அந்த இடத்தில இடம் வாங்க வேண்டுமென்றால் காணும் கடலையே அடமானம் வைத்தாலும் முடியாதே.

இந்த மாதிரி ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் தான் நம்முடைய இந்த வார மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த தம்பதிகள் தங்களுடைய பெற்றோர்கள் கட்டிய வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்..

இந்த அற்புதத்தின் கற்பனை பெயரைக்கொண்ட உண்மை நாயகன் ராமானுஜம் தன்னுடைய மனைவி குமுதவல்லியுடன் வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள். ராமானுஜம் ஒரு விமான போக்குவரத்துக்கு நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருக்கிறார். மனைவி குமுதவல்லி ஒரு திறமையுள்ள இல்லத்தரசி.

இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள். மூத்த பெண் M.B.A. படிப்பை முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இந்த பெண்ணுக்கு திருமணம் முடிக்க வரன் பார்க்கும் படலம் ஆரம்பித்து விட்டது.

வாழ்க்கை என்றாலே அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருப்பதுதானே. ராமானுஜம் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில மாதங்களே இருந்தசமயத்தில் தன்னுடைய வலது காலில் கீழ்ப்பகுதியில் ஒரு புண் வந்து ஆறாமலேயே இருந்தது.

அதனால் இவர் வேலைக்கு செல்ல முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் காண்பித்தும் பலன் இல்லை. நாளைடைவில் அந்த புண் இருந்த இடத்தில் ஒரு ஓட்டை விழுந்து விட்டது. கவனமாக குளிக்க வேண்டும். காலுறை அணிய முடியாது. படி ஏறக்கூடாது. சர்க்கரையை ஏற விடக்கூடாது.

இந்த சமயத்தில் இவருடைய நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய விருப்பமிருந்தால் ராமானுஜம் விண்ணப்பிக்கலாம். .ஆனால் கால் புண் ஆறியிருக்க வேண்டும்.இதற்கு ஒரு மருத்துவர் சான்றிதழ் வழங்க வேண்டும். என்ற நிபந்தனையும் இருந்தது.

இவருடைய நிலைமை எப்படி இருந்தது தெரியுமா? இரு பெண்களுக்கு திருமணம் முடித்தாக வேண்டும். இரண்டாவது பெண் படிப்பை முடித்தாக வேண்டும். இருவர் திருமணத்திற்கு பிறகு தானும் தன்னுடைய மனைவி குமுதவல்லியும் இறுதி நாட்களை கழித்தாக வேண்டும்.இதற்காக ராமானுஜம் ஒரு சில வருடங்களாவது வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.

இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் ராமானுஜத்தின் மூத்த மகளுக்கு ஒரு நல்ல வரன் வந்தது. மணமகன் ஐரோப்பிய நாடுகளில் டாக்டர் பட்டத்திற்கு படித்து கொண்டிருக்கிறார். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.நல்ல வரன். நல்ல பையன். நல்ல குடும்பம். ரமனுஜத்திற்கு இந்த இடத்தை பேசி முடித்து விட வேண்டும் என்ற எண்ணம். இந்த சமயத்தில் தான் ராமானுஜமும் குமுதவல்லியும் யோசிக்க ஆரம்பித்தனர்.

ராமானுஜத்திற்கு கால் சரியாக வேண்டும். தன்னுடைய வருங்கால மருமகனுக்கு வேலை கிடைத்தால்தான் தன்னுடைய பெண்ணுக்கு அந்த நாட்டிற்கு செல்ல விசா கிடைக்கும்.

நல்லதும் கெட்டதும் கலந்ததுதானே வாழ்க்கை. நல்லது நடந்தால் கடவுள் அருளால் நடத்தி விடலாம். ஆனால் கெட்டது என்றால் இறைவனை நாடுவதும் மஹான்களை நடுவதும் இயற்கைதானே.

அப்படி ஒரு மகனை தேடிக்கொண்டிருக்கும் பொழுது நம்முடைய மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த ஒருவர் இவருடைய வீட்டிற்கு அருகாமையில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் மஹாபெரியவா குரு பூஜையை பற்றி கேள்விப்பட்டு என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள்.

என்னை நேரில் தொடர்பு கொண்டு நான் மேலே கூறிய அணைத்தையும் என்னிடம் சொன்னார்கள்.அவர்கள் என்னிடம் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ராமானுஜம் அவர்களின் மூன்று பிரார்த்தனைகளை கீழே கொடுக்கின்றேன்.

பிரார்த்தனை -1

  • ராமானுஜம் அவர்களின் கால் புண் மூடிக்கொள்ள வேண்டும்.

  • புண் முழுவதுமாக ஆறி மருத்துவர் சான்றிதழ் வழங்க வேண்டும்.

  • தன்னுடைய நிறுவனம் மீண்டும் தன்னை பணியில் அமர்த்த வேண்டும்.

பிரார்த்தனை -2

தன்னுடைய வருங்கால மருமகனுக்கு படித்துக்கொண்டிருக்கும் நாட்டிலேயே வேலை கிடைக்க வேண்டும்.

பிரார்த்தனை -3

தன்னுடைய மூத்த மகளுக்கு விசா கிடைத்து திருமணம் நடக்க வேண்டும்.

அவர்கள் என்னை சந்தித்த மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் ராமானுஜம் குடும்பத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தேன்.

"பெரியவா இன்னிக்கு உங்களிடம் ராமானுஜம் என்பவரது பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். என் முதல் பிரார்த்தனை பெரியவா ராமானுஜம் அவர்களுக்கு காலில் ஒரு புண் ஆறாமல் ஓட்டையாகி விட்டது. இதனால் அவரால் ஷூ போட்டுக்கொள்ள முடியவில்லை.சரியாக குளிக்கமுடியவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த புண் இருக்கிறது. இதனால் ராமானுஜம் வேலைக்கு செல்ல முடியவில்லை.

இவர் அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறார் . இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இப்பொழுதுதான் பெரிய பெண்ணுக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.முதலில் இவருடைய கால் புண்ணுக்கு வேண்டிக்கொள்கிறேன் பெரியவா.

இந்த குடும்ப தலைவர் ராமானுஜம் அவர்களுக்கு உங்கள் அனுகிரஹத்தால் ஒரு வருடமாக மூடிக்கொள்ளாத ஆறாத புண் ஆற வேண்டும். மருத்துவர் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இவருடைய நிர்வாகம் இவரை மேலும் வேலை நீடிப்பு கொடுத்து வேலைக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். என்று என் பிரார்த்தனையை முடித்தேன்.

முதல் நாள் எனக்கு பதில் கிடைக்கவில்லை.இரண்டாவது நாளும் என் பிரார்த்தனைக்கு பதில் கிடைக்க வில்லை. மூன்றாவது நாள்தான் என் பிரார்த்தனைக்கு பதில் கிடைத்தது. மஹாபெரியவா கொடுத்த பதில்

"அவாளை ஒன்பது வார குரு பூஜை பண்ணச்சொல்லு. எல்லாம் சரியா போய்டும் என்று சொன்னார். நானு மற்றவர்கள் பிரார்த்தனையை முடித்து கொண்டு என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையை முடித்தேன்.

மறு நாள் காலை எனக்கு ராமானுஜம் அவர்களின் மனைவி குமுதவல்லி தொலை பேசியில் தொடர்பு கொண்டு மஹாபெரியவாளின் பதிலை பற்றி என்னிடம் கேட்டார் . நானும் மஹாபெரியவா சொன்னதையெல்லாம் சொல்லிவிட்டு ஒன்பது வார மஹாபெரியவா குரு பூஜையை பற்றி சொல்லிவிட்டு பூஜை செய்யும் முறையை மின் அஞ்சல் மூலம் அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களும் நன்றி சொல்லிவிட்டு அந்த வாரமே பூஜை ஆரம்பித்து விடுவதாக சொன்னார்.

அந்த வாரம் பூஜையை ஆரம்பித்து நல்ல படியாக செய்து விட்டு மறு நாள் வெள்ளிக்கிழமை மருத்துவரிடம் செல்லும் நாள். மஹாபெரியவாளை சேவித்து விட்டு வெள்ளிக்கிழமை காலை மருத்துவரிடம் சென்றார்கள். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு மருத்துவர் அழைக்கவும் இவர்கள் மருத்துவர் அறைக்கு சென்றனர்.

பரிசோதனைகள் ஆரம்பித்தன. பரிசோதனை முடிவில் மருத்துவர் ராமானுஜத்திடம் சொல்லுகிறார். இது என்ன அற்புதம் என்று எனக்கு புரியவில்லை. ஒரு வருடமாக மூடிக்கொள்ளாத புண் ஆறாமலும் இருந்தது. இப்பொழுது ஆறிக்கொண்டும் வருகிறது. விரைவில் மூடிக்கொள்ளும் அறிகுறியும் தெரிகிறது. நீங்கள் வேறு யாராவது மருத்துவரிடம் காண்பித்து வேறு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா.? என்று கேட்டார் மருத்துவர்.

இவர்களும் இல்லை என்று பதிலளித்து தங்கள் செய்யும் மஹாபெரியவா குரு பூஜையை பற்றி சொல்லி இருக்கிறார்கள். அந்த சக்தி தான் உங்கள் ஆறாத புண் ஆறுவதற்கு காரணம். நிச்சயம் இந்த புண் மூடி விடும் என்று சொல்லி மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து அனுப்பினார். மொத்த கூப்பிடும்பத்திற்கே சந்தோஷம். இருக்காதா பின்னே.

ஆறுவதற்கு வாய்ப்பே இல்லாத புண் மூடிக்கொள்ள வாய்ப்பே இல்லாத புண் எப்படி ஆற ஆரம்பித்தது. எப்படி சதை வளர்ந்து மூடிக்கொள்ள ஆரம்பித்தது. மருத்துவர் இவர்களை இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வருமாறு சொல்லி அனுப்பினார். இன்னும் வேலையில் சேருவதற்கு சான்றிதழ் வாங்க வேண்டுமே. பாதி கிணறு தாண்டி விட்டார்கள்,

மேலும் இரண்டு வார பூஜையை முடித்து கொண்டார்கள். நானும் அவர்களுக்கு தொலை பேசி வாயிலாக நிலைமையை தெரிந்து கொள்ள அழைத்தேன். அப்பொழுது அவர்கள் என்னிடம் கேட்டது. மாமா நாளைக்கு டாக்டரை பார்க்கப்போகிறோம். எல்லாம் சரியாகி விடுமா என்று கவலையுடன் என்னிடம் கேட்டார்கள். நானும் அவர்களிடம் சொன்னேன்.

"ஒரு வருடமாக ஆறாத புண் எப்படி ஆற ஆரம்பிக்கும். அதுவும் சதை வளர ஆரம்பித்து விட்டது சென்ற முறை கூட பரிசோதனையில் கூட ஆறும் அறிகுறியே இல்லையே. மஹாபெரியவா குரு பூஜை ஒரே வாரம் தான் முடித்திருந்தீர்கள். அதுவும் முடித்த மறு நாளே மருத்துவரே ஆச்சரியப்படும் அளவிற்கு ஆறிக்கொண்டு வருகிறதே.. நம்பிக்கையுடன் இருங்கள் மஹாபெரியவா உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார் என்று சொன்னேன்.

அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.நாளைக்கு வெள்ளிக்கிழமை டாக்டரிடம் சென்று காண்பிக்க வேண்டும் நீங்கள் கொஞ்சம் வேண்டிக்கொள்ளுங்கள் மாமா என்றார். நானும் சரியென்று தொலை பேசியை துண்டிந்தேன்.மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த நேரத்தில் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா ராமானுஜத்திற்கு புண் அறிக்கொண்டும் வருகிறது. சதை வளர்ந்து மூடிகொண்டும்வருகிறது. நான் செய்யும் பிரார்த்தனைகளுக்கு இப்படி அனுக்கிரஹம் பன்னறேளே பெரியவா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு பெரியவா என்றேன்.

பெரியவா: ஆமாண்டா மத்தவா பிரச்சனைகளுக்கு உன்னுடைய பிரச்சனைகளுக்கு வேண்டிக்கிற மாதிரி வேண்டிக்கிறே. அவாளுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் அந்த தீர்வு உனக்கே கிடைத்த போல சந்தோஷப்படறே. ஒரு குழந்தை பிராத்தனை பண்ணறாப்லே கள்ளம் கபடம் இல்லாம பிரார்த்தனை பண்ணறே. அதான் உன் பிரார்த்தனைக்கு பதில் தரேன்.

உன்னோட நல்ல குணத்துக்கு நான் உனக்கு ஏதாவது அனுக்கிரஹம் பண்ணறேன் நீ ஏதாவது கேளு என்றார்.

நானும் கேட்டேன் பெரியவா நான் எவ்வளவு பேருக்கு வேணும்னாலும் பிரார்த்தனை பண்ணனும் . நான் செய்யும் பிரார்த்தனை பலிக்க வேண்டும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய உடம்பில் தெம்பு கொடுங்கள் பெரியவா என்றேன்.

நான் நீ கேட்டது அத்தனையும் கொடுத்துண்டு இருக்கேனே. வேற என்ன வேணும் கேளு என்றார். நானும் கேட்டேன்.என் உயிர் எப்பொழுது பிரிய வேண்டும் தெரியுமா பெரியவா. என்றேன்

பெரியவாளும் எப்படிடா என்றார்.

நானும் சொன்னேன் என் உயிர் பிரியும் பொழுது கூட நான் யாருடைய கஷ்டத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்க வேண்டும். என் கடைசி பிரார்த்தனை நான் பக்தரிடம் சொல்லா விட்டாலும் நான்செய்த பிரார்த்தனை பலிக்க வேண்டும். இந்த பாகியத்தை எனக்கு கொடுங்கள் பெரியவா என்றேன்.

உனக்கு அனுக்கிரஹம் பண்ணிட்டேன்டா சந்தோஷமா என்றார். நானும் சந்தோஷம் பெரியவாஎன்று சொல்லிவிட்டு என்னுடைய மற்றோருக்கான பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டேன்.

மறு நாள் வெள்ளிக்கிழமை இரண்டு வாரங்களுக்கு பிறகு டாக்டரை பார்க்கப்போகிறார்கள் ராமானுஜமும் அவர் குடும்பமும். சிறிது காத்திருந்தபிறகு டாக்டர் அறைக்கு சென்றனர். இந்த முறை எல்லா பரிசோதனைகளும் முடிந்தவுடன் மருத்துவர் மேலும் ஆச்சரியப்பட்டார்.

புண் முழுழுவதுமாக மூடி விட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை என்று மருத்துவர் சொன்னார். எனினும் தகுதி சான்றிதழ் வழங்க இன்னொரு தலைமை மருத்துவர் வர வேண்டும். அதற்குள் புண் முழுவதுமாக மூடி நீங்கள் எல்லோரையும் போல படி ஏறலாம். நடக்கலாம் இனி கவலை வேண்டாம் என்றார். எல்லோரும் சந்தோஷமாக கோவிலுக்கு சென்று விட்டு தங்கள் இல்லத்திற்கு திரும்பினார்கள்.

எனக்கும் தொலை பேசியில் விவரங்களை சொல்லிவிட்டு பின்னர் அடுத்த வாரம் அழைப்பதாக சொன்னார்கள். இதுவரை ராமானுஜம் வீட்டில் ஆறு வார பூஜை முடித்திருந்தார்கள்.

இன்னும் மீதி உள்ள மூன்று வார பூஜையும் ராமானுஜத்தின் கால் புண்ணின் முன்னேற்றமும் இவரை இவரது நிறுவனம் மீண்டும் வேலைக்கு அமர்த்தியதா இதற்கு இடையில் ராமானுஜத்தின் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை எப்படி மஹாபெரியவா தீர்த்து வைத்தார் என்பதை என்பதை அடுத்தவாரம் அனுபவிப்போம்.

நல்லதும் கெட்டதும் தானே கலந்து தானே வாழ்க்கை

நல்லவைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்

கெட்டவைகளை கண்டால் மனம் துவண்டு விடுகின்றோமே

ஒரு குரு உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் குடியிருந்தால்

எப்பொழுதும் மகிழ்ச்சிதானே அழையுங்கள் மஹாபெரியவாளை

குரு பூஜை அற்புதங்கள் உங்கள் இல்லத்திலும் நிகழட்டும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square