Featured Posts

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம்.

சாதி, சமயம், மதம், இனம், மொழி, நிறம், தேசம் இப்படியாக எந்தவொரு வேறுபாடுகளும் இல்லாத ஒரு மஹாகுருவாக நம்மோடு வாழ்ந்து, நமக்கு நல்லபல அறநெறிகளைப் போதித்து, அறச்செயல்களைப் புரியவைத்து, இன்றும் நம்மோடு சூக்ஷமமாக இருந்து நம்மை வழிகாட்டுகின்ற கலியுகத் தெய்வமாம், கண்கண்ட பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீசரணாள், ஸ்ரீமஹாஸ்வாமியை அனுதினமும் போற்றி நம் அகத்திலே இருக்கும்படியான தீய, மாசுகளைப் போக்கிக் கொண்டு, நமக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமாக ப்ரார்த்தனை செய்து வருகின்றோமல்லவோ! அதோடு போதுமா, என்ன? அவர் கூறியபடியாக அறச் செயல்களையும் செய்யும் பாக்கியம் வேண்டுமல்லவோ! தர்ம கார்யங்களில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு நம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றோமே, அவ்வளவுக்கவ்வளவு சென்ற பிறப்பில் மட்டுமின்றி இப்பிறப்பிலும் நமக்குத் தெரியாமல் செய்த பாவங்கள் கூட நம்மை விட்டு அகன்று விடுமே! அதுமட்டுமின்றி நமக்கு புண்ணிய பலன்களைத் தந்து வாழ்விலே ஆனந்தமாக இருக்கச் செய்யுமன்றோ! வாருங்களேன்! இன்றைய தினம் சற்றே நிதானமாக ஸ்ரீசரணரை த்யானித்து, அவர்கூறிய அறச்செயல்களையும் செய்து, அனைவருக்காகவும் ப்ரார்த்திப்போமே!

#ஸ்ரீகுருதுதி ஐயனை வேண்டி ஐந்தகத்துதி: அகரமெய் ஞானமுனி ஆதியவன் வழிவந்தே அகரமெய் ஞானவொளி யருளூமோர் குருபரன் அகரமெய் ஞானத்து உதரவொலி மனதேற்றி அகரமெய் யுணர்ந்திங்கே தருமநெறி யொழுகுவோம்! மறைதுதி மனம்கொள்ள மாசுகள் நீங்கிடும் இறைதுதி என்றென்றும் இனியவை நல்கிடும் திரைவிதி மாற்றுமோர் தீர்க்கமாம் குருவருள் உரையதை எண்ணியே கருமமும் செய்குவோம்! அருமறை போற்றிடவும் ஆ’குலம் காத்திடவும் திருவுரை அளித்ததோர் மா’தவம் போற்றியே குருவலம் கொள்மனம் திருவினை புரிவோர்க் திருவிறை அருள்தரும் சங்கரம் போற்றுவோம்! இருமையும் அளித்திடும் சசிசேகர சங்கரனார் அருமையும் அறிந்துஅவர் சேவடியிற் பணிவோரும் வருமையும் நீங்கியே வளமுடன் வாழ்வராம் பெரு’மை’யும் கொண்டுகுரு பொற்பதம் பூசிப்போம்! அறவாழி யாகியெமக்கு உறவாகி நின்ற திரைவாழ வருளசெகத் குருவாக வந்தனமே இறவாவர மருள்தரவே திருவான சங்கரனை திரைவழ செபித்திங்கே திருப்பாதம் சரண்புகுவோம்! பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீ மஹாபெரியவா அபயம்! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square