மஹாபெரியவா இன்று மாலை எனக்கு கொடுத்த பிறந்த நாள் பரிசு

மஹாபெரியவா இன்று மாலை எனக்கு
கொடுத்த பிறந்த நாள் பரிசு
கடந்த மூன்று வருடங்களாக மஹாபெரியவா எனக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க தவறியது இல்லை. இன்று காலை நான் மஹாபெரியவாளிடம் பிறந்த நாள் பரிசு கேட்டேன்.. உனக்குத்தான் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பரிசை கொடுத்திருக்கேனே என்றார். என்ன பெரியவா அது என்றேன்.
மஹாபெரியவா சொல்கிறார் "நான் சன்யாசம் வாங்கிய நாளும் நீ பிறந்த நாளும் ஒன்றே இது உனக்கு தெரியுமா என்றார். நான் அழுதே விட்டேன்.
இன்று நடப்பது அன்றே எப்படி அமையும் பெரியவா என்றேன்.
இந்த பிரபஞ்சம் எப்பொழுதுமே பல நூறு வருஷ விஷயங்களை முன் கூட்டியே செய்து விடும். இப்பொழுது உனக்கு நடக்கிற மாதிரி என்றார்.
உடனே நான் இதை எல்லோருக்கும் சொல்லி விட வேண்டும் என்று மஹாபெரியவா சுய சரிதையை புரட்டினேன். என்ன ஆச்சரியம். நான் பிறந்தநாளும் மஹாபெரியவா சன்யாசம் வாங்கிய நாளும் ஒன்றே.நான் சொன்னேன் இது போதும் பெரியவா எனக்கு இதற்கு மேல் என்ன வேணும் என்றேன்.
மஹாபெரியாவா சொல்கிறார் "நீ பிறந்த நாள் பரிசுன்னு கேட்டுட்டே கொடுக்கறேன் என்றார். சரியாக மணி ஆறு காஞ்சி மடத்தில் இருந்து எனக்கு பொன்னாடையும் அதிஷ்டான பிரசாதமும் என்னை வந்து சேர்ந்தது.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்