top of page
Featured Posts

மஹாபெரியவா சன்யாசம் வாங்கிய நாளும் இதே நாள் பிப்ரவரி பதிமூன்று 1907


மஹாபெரியவா சன்யாசம் வாங்கிய நாளும்

இதே நாள் பிப்ரவரி பதிமூன்று 1907

நானும் பிறந்தேன்!

பெற்றது என்ன? இழந்தது என்ன?

இழந்தது எத்தனையோ.

ஆனால் பெற்றது உங்களை எல்லாம்!!.

உங்கள் எல்லோருக்கும் நீங்கள் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்களில் சிலரது வாழ்த்துக்களுக்கு நான் நன்றி தெரிவிக்காமல் இருந்தால் அது வேலை பளு காரணமாக இருக்கலாம்.அவைகளை என் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனே எந்த நேரமாக இருந்தாலும் நான் என் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் எழுதி விடுகிறேன்..

மண்ணில் பிறந்தேன். பிறந்து இன்றுடன் அறுபத்தி மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பெற்றது என்ன? இழந்தது என்ன? எனக்கு தெரியவில்லை.

ஆனால் பெற்றதில் இரண்டு பொக்கிஷங்கள் என்றுமே என் நினைவிலும் மனதிலும் நிலைத்து நிற்கும்...பெற்ற இரண்டில் ஒன்று இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பரமேஸ்வரனே மஹாபெரியவா அவதாரம் எடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கிறேன் வா என்று அழைத்து கொடுத்த ஆன்மீக உறவு..

இரண்டு.அந்த இறை உறவு கொடுத்த ஆத்ம உறவுகளாகிய நீங்கள் எல்லோரும். சொந்தங்களையும் பந்தங்களையும் இழந்த எனக்கு எத்தனை தாய் தந்தையரையும் சகோதர சகோதரிகளையும் இந்த இணைய தளம் மூலமலக எனக்கு கொடுத்திருக்கிறார் மஹாபெரியவா.. உறவுகளின் பெயர்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நாளில் சொல்லி அழைக்க எத்தனை உறவுகள் எனக்கு. இதை விட எனக்கு வேறு என்ன பெரிய பரிசு வேண்டும்..

நான் மஹாபெரியவாளிடம் வேண்டுவதெல்லம் இதுதான். உங்கள் கொடையின் கீழ் உள்ள ஜீவாத்மாக்களாகிய எங்களுக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் மீதமிருக்கும் நாட்களில் கவலையில்லா பயமில்லா வாழ்க்கையை கொடு. இனி மேல் பிறவா வாரமும் கொடுத்து எங்களை உன் நிழலில் அழைத்துக்கொள். என்பதே என் அன்றாட பிரார்த்தனை.

நேற்றும் இன்றும் நான் மலைத்தே விட்டேன். எத்தனை புனித ஆத்மாக்கள் என்னை மனதார வாழ்த்துகின்றன. இதெல்லாம் கடையில் வாங்கும் சாமான்களா என்ன? புனித ஆத்மாக்கள் எல்லாம் புனிதத்தை தேடி அடைக்கலம் கேட்கும் நாளாகத்தான் எனக்கு தோன்றியது.

பலரது முகம் எனக்கு தெரியாது. முகவரி எனக்கு தெரியாது. ஆனால் கண்ணுக்கு தெரியும் மனித நேயம் மட்டும் என்னை வந்து அடைகிறது. இது எப்படி சாத்தியமாகிறது. மஹாபெரியவா அன்று என்னை அழைத்து கொடுத்த ஆசிர்வாதங்கள் இன்று உங்கள் உருவத்தில் என்னை வந்து சேருகின்றன..

என்னுடைய அறுபத்தி மூன்று பிறந்த நாட்களும் வருடம் தோறும் வழக்கம் போல் வரும் போகும்.. ஆனால் இந்த பிறந்த நாள் மட்டும் வந்த நாள் எப்படிப்பட்டது தெரியுமா.?. மஹாபெரியவா என்னை எல்லா வழிகளிலும் புனிதப்படுத்தினார். அதற்கு கட்டியம் கூறும் விதமாக இந்த பிறந்த நாளை பல பண்ணியங்களுடன் இணைத்தார். . ஆம் இன்று ஒரு புண்ணிய நாள்.

என்னுடைய இன்றைய பிறந்த நாளில் இன்னொரு புனிதத்தையும் தெரியப்படுத்த விரும்புகிறேன். மஹாபெரியவா சன்யாசம் வாங்கிய நாளும் என் பிறந்த நாளும் ஒன்றே..

என் பிறந்த நாள் பிப்ரவரி பதிமூன்று

மஹாபெரியவா சன்யாசம் வாங்கிய நாளும்

பிப்ரவரி பதிமூன்று 1907

பிறந்த நாள் என்பது தானே அமைவது.

அமைக்கப்படுவது இல்லை.இன்றைய புனிதம்

அன்றே கொடுக்கப்பட்டு விட்டது.

இன்று மஹாசிவராத்திரி. இன்று பிரதோஷம். இன்று நான் மட்டுமில்லை. புண்ணிய ஆத்மாக்களாகிய நீங்களும் என்னுடன். இந்த புதிய . என் சொந்தங்களும் பந்தங்களும் என் நெஞ்சிலும் எண்ணத்திலும் நிறைந்திருக்கும் நாள்.

இன்று நீங்கள் பார்க்கும் காயத்ரி ராஜகோபால் அன்று காற்றில் பறந்து கொண்டிருந்த ஒரு குப்பை காகிதம்.பறந்து கொண்டிருந்த குப்பை காகிதத்தை பிடித்து தலையெழுத்தை மாற்றி எழுதி அதில் இருந்த தேவையற்ற வார்த்தைகளை அழித்து உங்களிடம் கொடுத்தார். நீங்கள் மேலும் புனித வார்த்தைகளையும் வரிகளையும் எழுதி என்னை பதப்படுத்தி புனிதம் கெடாமல் பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கெல்லாம் வெறும் மூன்று வார்த்தையில் நன்றி என்று சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் இதே புனிதத்துடன் உங்களுடன் உறவாடும் உறவாக நான் பிறக்க வேண்டும்.

"மஹாபெரியவா சரணம்" என்று இரு பிரபஞ்ச வார்த்தைகளை சொல்லிக்கொண்டு நாம் எல்லோருமே ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தடம் பிறழாமல் எஞ்சிய நாட்களை வாழ்ந்து விட்டு மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தை அடைவோம் என்று உறுதி மொழி ஏற்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page