பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-039 திருவெற்றியூர் ஜெயலட்சுமி மாமி

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-039
திருவெற்றியூர் ஜெயலட்சுமி மாமி
மஹாபெரியவா காலடி பட்டால்
மண்ணும் பொன்னாகும்
வறுமையே வறுமையாகும்
அமங்களம் மங்களமாகும்
ஜடம் உயிர் பெரும்
என்னதான் நடக்காது ஜகத்திலே
வானுலகமே மண்ணில் வாழும் போது.
இத்தனை நாளும் எத்தனை விதங்களில் எத்தனை கோணங்களில் எத்தனையோ பத்தர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை அனுபவித்திருக்கிறோம்.. அந்த வகையில் மேலும் ஒரு அற்புதம் உங்களுக்காக.. நானும் ஒவ்வொரு அற்புதங்களை உங்களுக்காக எழுதும் பொழுதும் இத்தனை நாளும் விடை கிடைக்காத என் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.
ஜெயலட்சுமி மாமியின் மஹாபெரியவா அற்புத அனுபவங்களை எழுதும் பொழுது இறைவன் யார்? அவன் எங்கே இருக்கிறான்? அவனை நம்முடைய ஸ்தூல கண்களால் காண முடியுமா? இறைவனுக்கு கோபம் வருமா? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைத்தது. அந்த விடை தான் ஒரே சொல்லிலில் அடங்கும் "மஹாபெரியவா".
ஜெயலட்சுமி மாமிக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இருந்தே மஹாபெரியவாளிடமும் மடத்து கைங்கர்ய மனுஷாளிடமும் பரிச்சயம் உண்டு. மாமி ஒன்றும் பெரிய பணக்கார வீட்டு பெண்ணோ மிராசுதார் குடும்பமோ இல்லை.
ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்த பெண். திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கும் தாயானாள் மாமி. மாமா ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். மாமாவுக்கும் ஆஹா ஓஹோ என்றசம்பளம் கிடையாது. இதில் மாமாவுக்கு கொஞ்சம் கடன் சுமை வேறு.
மாமாவிற்கும் மாமிக்கும் சிறு வயதில் இருந்தே மஹாபெரியவா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்லும் பழக்கம் இருந்தது. தரிசனம் காணும் பொருட்டு செல்லும் பொழுதெல்லாம் சீடை முறுக்கு காய் கறிகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள்.
மஹாபெரியவா எப்பொழுதும் மாமிக்கு சில உத்தரவுகளை கொடுப்பார். அந்த உத்தரவுகளை மறு பேச்சு பேசாமல் ஆகட்டும் பெரியவா பண்ணிடறேன் என்று சொல்லிவிடுவார். ஆனால் மாமிக்கு சொன்ன பிறகு தான் யோசனை வரும் பண வசதி இல்லாமல் எப்படி சமாளிக்க போகிறோம் என்று. ஆனால் ஊர் வந்து சேர்ந்த பிறகு பார்த்தால் மாமாவிற்கு காரணமே இல்லாமல் அலுவலகத்தில் இருந்து இரண்டு ஊதிய உயர்வு கொடுத்து விடுவார்கள்.
நான் அனுபவித்த ஒரு சில நிகழ்வுகளை
உங்களுக்கு இங்கு சமர்ப்பிக்கிறேன்.
ஒரு முறை மஹாபெரியவா சென்னைக்கு வந்த பொழுது ஒரு நாள் மாமியின் இல்லத்திற்கும் வருகிறேன். வந்து பூஜை செய்யப்போகிறேன் என்று மடத்து மேனேஜர் விஸ்வநாத ஐயரிடம் சொல்லி அனுப்பி விட்டார்.
அப்பொழுது மாமி கல்யாணம் ஆன ஒரு சிறிய பெண். மாமி மேனேஜரை “தான் அதற்கு என்னனென்ன செய்ய வேண்டும்” என்று கேட்க மானேஜர் சொல்கிறார் நீ பூர்ண கும்பம் வைத்து வரவேற்க வேண்டும் என்று.
மாமிக்கு பூர்ண கும்பம் என்றால் என்ன என்று கேட்க மானேஜர் அதை விளக்கமாக சொல்லிக்கொடுக்க மாமி ஒவ்வொன்றையும் அப்பொழுதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார். மாமி ஒரு வழியாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தாள்.
மஹாபெரியவா பூஜைக்காக தன்னுடைய வீட்டை முற்றிலும் ஒழித்து கொடுத்து விட்டார். மாமி தன் பக்கத்து வீட்டில் இரண்டு மூன்று நாட்களுக்கு தாங்கிக்கொண்டார்.
மஹாபெரியவாளின் யானை படை குதிரை படை ஒட்டக படைகள் பசு மாடுகள் மற்றும் பல மாட்டு வண்டிகள் எல்லாம் அணிவகுத்து மாமியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. மஹாபெரியவா அன்று மாலையே தன்னுடைய பூஜையை மாமியின் வீட்டில் ஆரம்பித்து விட்டார்.
மாமி மேலும் சொல்கிறார் கேளுங்கள்.
வீட்டிற்குள் வந்த மஹாபெரியவா நேராக சமையல் அறையில் சென்று கீழே துண்டை போட்டு படுத்து கொண்டார். அன்றில் இருந்து வீட்டில் எத்தனை பேர் எப்பொழுது வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் வந்தவர்களுக்கு உபச்சாரம் செய்யும் அளவிற்கு குடும்பத்தில் செல்வம் பெருகியது. மாமாவிற்கு ஒரே நேரத்தில் இரண்டு உத்தியோக உயர்வு வந்தது.
மஹாபெரியவா தன்னுடைய விரல்களால் சந்தனத்தை மேலே சுண்டி விடுவாராம் . அதனை சந்தன உருண்டைகளும் வீட்டின் மேலே சென்று ஒட்டிக்கொள்ளும். அந்த வீடே பல மாதங்களுக்கு சந்தன வாசனையால் குளித்தது.
எல்லாமே முடிந்தது. பூஜை முடிந்து செல்லும் பொழுது மஹாபெரியவா எந்த வீட்டில் தங்கினாரோ அந்த வீட்டிற்கு ஏதாவது சம்பாவனை செய்து விட்டு போவார்,
அன்று சம்பவானை செய்ய மடத்தில் எதுவும் இல்லை. மஹாபெரியவா கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் த்யானம் செய்தாராம்.ஆந்திராவில் இருந்து ஒரு பக்தர் மஹாபெரியவாளுக்காக இருபது மீட்டர் கதர் துணி கொண்டு வந்திருந்தார்.
மஹாபெரியவா அந்த இருபது மீட்டர் துணியையும் மாமியின் கணவரிடம் நீதான் கதர் ஆடை உடுத்திப்பியே. இந்த துணியில் சட்டை தைத்து போட்டுக்கோ.என்று கொடுத்து விட்டாராம். அன்றில் இருந்து மாமியின் வீட்டில் வஸ்திரங்களுக்கு கஷ்டம் என்பதே கிடையாது. நினைத்து நினைத்த மாத்திரத்தில் வந்து விடும்.
இந்த பதிவை முடிக்கும் பொழுது நான் அழுது விட்டேன்.மஹாபெரியவாளுக்கு என்ன ஒரு பரத்துவம் (பரத்துவம் என்றால் வார்த்தைகளில் அடங்காத ஒரு மேன்மை ) என்ன ஒரு வாத்சல்யம்(( வாத்சல்யம் என்றால் எல்லோரிடம்மும் எளிமையுடன் பழக கூடியவர் ) என்னஒரு எளிமை . அந்த ஒற்றை சொல்லுக்குள் எத்தனை விஷயங்கள்.
என் நினைவில் உதித்தவை:
நினைத்து பாருங்கள் இன்று கிருஷ்ண அவதாரத்தை பற்றி பேசி கிருஷ்ணரை வழிபடுகிறோமே. அப்பொழுது நம்மமுடைய நினைவில் ஒன்று வரும் என்ன தெரியுமா? கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் அவர் கூடவே அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ன புண்ணியம் செய்தவர்கள் என்று.
வரும் தலை முறையினர் மஹாபெரியவளை ஒரு இறைவனின் அவதாரம் என்ற உண்மையை உணர்ந்து எல்லோரும் வழி படும் பொழுது அவர்கள் நினைப்பார்கள் அல்லவா.
மஹாபெரியவா வாழ்ந்த காலத்தில் அவருடனேயே வாழ்ந்து அவரை நேரிலும் தரிசனம் செய்த ஆத்மாக்கள் எவ்வளவு புண்னனியம் செய்த ஆத்மாக்கள் என்று. நம்மை எல்லாம் தான் சொல்கிறேன். நான் இன்று எழுதுகிறேன் நீங்களும் படிக்கிறீர்கள். மஹாபெரியவா குரு பூஜை செய்கிறீர்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் நாம்.
காணொளியை காணுங்கள்
https://www.youtube.com/watch?v=c2AnG6dI6hQ&t=4s
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்