குருப்புகழ்

பெரியவா சரணம்
ஸ்ரீ சுவாமிநாத குருபரனை அனுஷப் பெருந்தகையாம் நம் ஸ்ரீசுவாமிநாத குருவைப் போற்றிப் பணிந்து குருப்புகழ் பாடி நமஸ்கரித்து, இகபரசுகமுடனாக ஆனந்த வாழ்வு வாழ்வோமே! கந்தற்கை வேலொத்த ஸ்ரீசரண தண்டத்தின் பேரொளி நம் வாழ்வில்ரெ அஞ்ஞான இருள் போக்கி ஞான ஒளி ஏற்றிடட்டும். ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...
#குருப்புகழ் " தந்தன தான தந்தன தான தந்தன தான ...... தனதான " விந்தது மூறி கண்டது மேகி கொண்டது கோடி ... … … … … யினிமேலோ கண்டது மூறி கசடது வாகி வெந்தது மாகி ... … … … … விடுவேனோ விண்டுவி டாம லுன்னருள் கூடி பண்பட ஞான ... … … … … வழிகாட்டி பண்பத னோடு பணிவது மாகி நின்பத மூற ... … … … … அருள்தாராய் ஒன்பது வாயி லொழுகுத லாகி விஞ்சிய தேது ... … … … … மறியாமல் மும்மல மோடி மூண்டத னாலே வந்தது நாச ... … … … … வினையாமே துஞ்சுறு வேயு வென்றிட வேண்டி குஞ்சித சாயை … … … … தருவாயே மஞ்சுள மாளு வண்தல மேவு சங்கர மோதி ... … … … … தொழுதேனே!
பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களாலே அழிவுறும் இப்பிறப்பெய்தி அஞ்ஞான இருளிலே தவியாய் தவிக்கும் எங்களுக்கு ஞான ஒளி காட்டி அன்பு பண்பு பாசம் நேசம் தர்மம் பரோபகாரம் போன்ற நல்லறங்களை உணர்வுக்ச்ளாக ஊட்டி தர்மவழியிலே நெறி தவறாமல் வாழவைத்து ஆனந்த நிலையை அருளுங்கள் மஹாப்ரபோ! உங்களுடையா பாதார விந்தங்களிலே சரண் புகுந்து உங்கள் அருளாலே உங்கள் தாள் பணிந்து வாழ்ந்து வாழ்விக்க வகை செய்யுங்கள் தீனதயாபரனே என அவருடைய பாதாரவிந்தங்களிலே மனதார சரண் புகுவோமே! குருவருள் குறையின்றி நிறைவோடு காக்கும். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.