திவ்ய தேச திருத்தலம் ஒப்பிலியப்பன் கோவில்
திவ்ய தேச திருத்தலம் ஒப்பிலியப்பன் கோவில்

மூலவர் உப்பிலியப்பன்
ஒப்பிலியப்பன் கோவில் திருவிண்ணகர் என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து ஏழு கிலோமிட்டர் தூரத்தில் உள்ளது.
மூலவர்: உப்பிலியப்பன்
தாயார்: பூமா தேவி நாச்சியார்

உப்பிலியப்பன் பூமா தேவி
பெயர்க்காரணம்: :திரு விண்ணகர் என்பது புராண பெயர். திரு விண்ணகர் அப்பன் ஒப்பிலா அப்பன் என்பதால் ஒப்பில்லா அப்பன் என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இதுவே ஒப்பிலியப்பன் என்று மாறிற்று..
பூமாதேவியை திருமால் மணந்துகொண்டு தாயார் உப்பு இல்லாமல் சமைத்த உணவை கூட ரசித்து ருசித்து சாப்பிட்டதால் இந்த பெருமாளுக்கு உப்பு இல்லா அப்பன் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் உப்பிலியப்பன் என்று மருவிற்று.. இன்றும் இந்த கோவிலில் விநியோகம் செய்யப்படும் பிரசாதங்கள் உப்பு இல்லாமல்தான் சமைக்கப்படுகிறது..

உப்பிலியப்பன் கோவில் குளம்
ஒரு முறை இங்கு மார்க்கண்டேய மகரிஷி கடும் தவம் புரிந்து பூமா தேவியை தனக்கு குழந்தையாக பிறக்கவேண்டும் என்றும் திருமால் தனக்கு மாப்பிள்ளையாகவும் வர வேண்டும் என்று வேண்டினர்.

உப்பிலியப்பன் கோவில் யானை
வேண்டுதலுக்கு இறங்கி அங்கிருந்ததுளசி வனத்தில் பூமா தேவி தாயார் அழகான சிறு குழந்தையாக மார்க்கண்டேய மஹரிஷியின் கண்களில் பட ரிஷி எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். ரிஷியின் மகள் பருவம் எய்தியவுடன் திருமால் ஒரு வயோதிக உருவத்தில் மார்க்கண்டேய மஹரிஷியின் வீட்டிற்கு வந்து திருமணத்திற்கு பெண் கேட்கிறார். எவ்வளவு எடுத்து சொல்லியும் பிடிவாதமாக நிற்கிறார்.தன்னுடைய பெண்ணுக்கு உப்பு போட்டு சமைக்க கூட தெரியாது என்று சொல்லியும் திருமால் பிடிவாதமாக நிற்கிறார்.
என்ன முயன்றும் மார்க்கண்டேய மகரிஷி திருமணத்திற்கு சம்மதிப்பதாக தெரியவில்லை. திருமால் செய்வதறியாது கண்களை மூடி த்யானம் செய்ததால் ஒப்பிலியப்பன் தோன்றி மார்க்கண்டேய மரிஷியின் பிரார்த்தனைகளை எடுத்து சொல்லி உன் பிராத்தனை நிறைவேறி விட்டது என்றார். பிறகு இந்தஸ்தலத்திலேயே திருமணமும் முடிந்தது.. இதன் காரணமாகவும் இந்தப்பெருமாளுக்கு உப்பிலியப்பன் என்று பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.

உப்பிலியப்பன் கோவில் கோபுரம்
பிரார்த்தனைகள்: :ஒரு புரிதல் இல்லாமல் பிரித்த கணவன் மனைவி இருவரும் இங்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக மாறிவிடுவார்கள். உறவுகளில் விரிசல் கடன் தொல்லை நாள் பட்ட நோய்கள் நீங்கவும் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவும் மன அமைதி கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்..
திருப்பதி பெருமாளுக்கே அண்ணனாக இந்த பெருமாள் விளங்குவதால் இங்கு வேண்டிக்கொண்டால் திருப்பதியில் வேண்டிக்கொண்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்...உங்கள் பிரார்த்தைகள் நிறைவேறட்டும். வாழ்வில் அமைதி நிலைக்கட்டும்.செல்வம் பெருகி வளமும் பெருகட்டும்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்