பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-040

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-040
பிரதி புதன் கிழமை தோறும்
ராஜாராமன் மாமா
ராஜாராமன் மாமா எமலோகத்தின் கதவை தட்டி விட்டு மஹாபெரியவா அனுகிரஹத்தால் உயிருடன் பிழைத்து வந்து திருமணமும் செய்து கொண்டு இன்றும் மஹாபெரியவாளை தியானித்து கொண்டிருக்கும் ஆத்மாக்களில் ஒருவர்.
மாமாவின் பள்ளி நாட்களில் இருந்தே மாமாவின் தந்தையார் விடுமுறைக்கு காஞ்சி மடத்திற்கு வந்து குழந்தைகளை விடுமுறையை கழிக்க கொண்டு வந்து விட்டுவிடும் பழக்கம் இருந்தது.
விடுமுறையை கழிக்கும் நாட்களில் மஹாபெரியாளிடம் விளையாடுவதும் கோபித்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள். .மஹாபெரியவாளும் இவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடுவாராம்.
இவரது தந்தை சிறு வயதில் மஹாபெரியவா நகர் வலம் வரும்பொழுது ஊர்வலத்தில் வந்த ஒட்டகங்களை எல்லா வேடிக்கை பார்த்துக்கொண்டே ஊர்வலத்துடன் பல மைல்கள் நடந்து சென்ற களைப்பினால் தெருவில் போட்டிருந்த சுமை தாங்கி கல்லில் படுத்து உறங்கி விட்டாராம்..
மாமா நன்றாக தூங்கிக்கொண்டிருக்க மஹாபெரியவா மாமாவின் தலை மாட்டில் வந்து அமர்ந்து கொண்டு மாமாவை எழுப்பி நீ என்னுடன் வந்து விடு என்று சொல்ல மறு பேச்சு பேசாமல் மாமா மஹாபெரியவாளுடன் ஊர்வலத்துடன் கலந்து விட்டார். அன்றில் இருந்து மாமாவின் இறுதி நாட்கள் வரை மஹாபெரியவாளுடன் வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்து விட்டார். ராஜாராம் மாமாவின் தந்தை
மாமாவின் தந்தை ஒரு ஆச்சார சீலர். .தான் சமைத்து தான் சாப்பிடுவாராம். வெளியில் சாப்பிடும் பழக்கம் கிடையாது.
ராஜாராம் மாமாவின் வாழ்க்கையில் மஹாபெரியவாளை மையமாக வைத்து நடந்த நிகழ்வுகள் ஏராளம். அவைகளில் இருந்து ஒரு செய்தியை மட்டும் உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன். மற்ற அற்புதங்களை நீங்கள் இந்தக்காணொளியை பார்த்து அனுபவித்து கொள்ளுங்கள்.
என்னை கவர்ந்த அற்புகம்:
மாமா படிப்பை முடித்து ஒரு தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் டெல்லியில் வேலைக்கு சேர்ந்தார். மாமா அப்பொழுதான் முதல் முறையாக டெல்லிக்கு செல்கிறார்.
ஒரு நாள் மாமாவின் வங்கியில் ஒரு வாடிக்கையாளர் ஒரு கோபமான பேச்சு வார்த்தையில் ஈடு பட்டாராம் அவரை சமாதானம் செய்ய எள்ளளவு முயன்றும் அங்கு யாராலும் முடியவில்லை. இறுதியில் ராஜாராமன் மாமா தலையிட்டு சமதானப்படுத்திவிட்டு வந்தாராம்.
சிறிது நேரத்தில் மாமாவும் மாமாவின் மேலாளர்கள் சிலரும் ஒரு காரில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தனராம் . அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய கார் எதிரில் வந்து மாமா சென்ற காரில் மோதி காரில் இருந்த எல்லோரையும் தூக்கி வெளியில் எரிந்து விட்டது. ஆனால் மாமாவின் சட்டை மட்டும் அந்த காரின் பும்பரில் மாட்டிக்கொண்டு இருநூறு அடி தூரம் இழுத்து கொண்டு சென்று விட்டது.
மாமாவின் கை கால் முதுகுப்பகுதி எல்லாம் தோல் வழன்று போய் எலும்பு வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டது. மருத்துவர்கள் எழுபத்தி இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு தான் எதுவுமே சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.
மாமாவை பொறுத்த வரை தன்னுடைய இறுதி சுவாசம் வந்து விட்டதை நன்றாகவே உணர்ந்தார்.தன்னுடைய சில ஆயுள் பாதுகாப்பு தொகை எவ்வளவு. தன்னுடைய கடன்கள் எவ்வளவு.என்று மரண வாக்கு மூலம் கொடுக்க ஆரம்பித்து விட்டாராம்.
அந்த சமயத்தில் ஒரு வயதானவர் மாமாவின் அருகில் வந்து காஞ்சி மடத்தின் பிரசாதம் என்று சொல்லி மாமாவின் நெற்றியில் விபூதியை இட்டு விட்டு மீதி பிரசாதத்தை மாமாவின் சட்டை பையில் வைத்து போனாராம்.
வந்த வயதானவர் யார் ஏதற்கு வந்தார். அனுப்பியவர் யார் என்று ஒரு விவரமும் தெரியவில்லை. ஆனால் மாமா எம லோகத்தின் கதவை தட்டி விட்டு திரும்பவும் இந்த பூலோகத்திற்கு வந்து விட்டார்.
அங்கு வந்த பெரியவா ஏதோ ஒரு பெரியவரா இல்லை நம்முடைய மஹாபெரியவளா. ஆச்சரியமாக இருக்கிறதா? இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. மாமாவிற்கு பிரசாதத்தை இட்டு விட்டு மாமாவை சாவின் சாவின் விளிம்பில் இருந்து மீட்டு வந்த அற்புதம் கூறும் செய்தி என்ன.
மஹாபெரியவா எம ,லோகத்திற்கே சென்று போனஉயிரை மீட்டு வரும் சக்தியும் உண்டு என்பது புரிகிறதா. மேலும் அற்புதங்களை தெரிந்துகொள்ள இந்த காணொளியை காலம் கடத்தாது பாருங்கள். மஹாபெரியவாளின் விஸ்வருப தரிசனத்தை காணுங்கள்.
https://www.youtube.com/watch?v=h-hVVA-UbSM
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்