Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம் ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... #குருப்புகழ் ……… சந்தம் …….. தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தந்தனன … தானதனனா ………. பாடல் ……….. மங்கலமு கந்தருளு மெங்கதியு மிங்குறவு மெம்பதியு புங்கவனு …. மானதிருவே சுந்தரமு கம்பொழியு மன்புமிக வெந்தனிலு முய்யொளியு கந்தருளு …. வேதவிரதா சிந்தையிலு மெங்கினிலு முந்தனுரு கண்டிடவு மெந்திறமு முந்தனருள் …. கூட்டிடவுமே எந்தனக முந்தியுன தந்திபக லுந்தொழவு கந்தருளு மெந்திருப …. தாதியுனையே அந்தகனு மெந்தனிட வந்துவிடு மந்தபொழு துந்தநினை வுந்ததயரு …. ளாசியுடனே சந்தமிகு சிந்துபல செந்தமிழில் செய்திடவு முந்தனரு ளெந்தனிலு …. மேகிடவுமே இந்நிலமு முந்திவரு மெம்முறவு முந்தயவி லுங்கருணை யுந்தருளு … மாகபெறவே சந்ததமு நின்னருளி லுந்தனடி சேர்ந்தவடி யர்குறையு மங்கிடவு …. மாகவருளே குருவின் மஹிமையையும் குருபக்தியையும் நம் வரையிலும் கொணர்ந்து. சேர்த்துள்ளனர் நம் மூதாதையர். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதான கேள்வியே அறிந்த மொழிதனிலே அறிந்த ஞானம் கொண்டு அறிந்தபடியாக பாரதி தினமும் பாடி உங்கள் அனைவருடனுமாக போற்றி வருகிறேன். இப்பாடலில் எந்தனுடனாக குருபக்தி உணர்வு பெற்று ஒரு மனமேனும் ஆனந்தம் கொள்ளுமானால் அதுவே எனக்கு மஹாபாக்கியம். இந்த குருப்புகழ் பாமாலை என்றேனும் ஏதாவது ஒரு பக்தரின் மூலமாக புத்தக வடிவிலே கட்டாயம் வெளிவரும் என்ற நம்பிக்கை உண்டு. சில பல காலம் சென்றும் பக்தர்கள் இப்பாடல்களிலே மானம் லயித்து குருபக்தி செய்வாரேயாயின் எந்தன் பிறப்புக்கும் ஓர் அர்த்தம் இருக்கும். இதோ இங்கே புகைப்படத்தில் உள்ள, எனக்கு அந்த காலத்திலே ஐயனை அறிவித்த இருபெரும் நல்ல ஆன்மாக்களின் நேரசு செலவுக்கும் ஓர் பயனிருக்கும் என்பதேக எந்தன் ஏக்கம். நிறைவேறுமா? பெரியவா சித்தம் அடியேன் பாக்கியம். ஜெகத்குருவை ஜெகத்தின் க்ஷேமத்திற்கு போற்றித் தொழுவோம். அவர் அருள் நம்மைக் காக்கும். அனைவருக்கும் இனியதோர் நன்னாளாக அமைய வாழ்த்துக்கள். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square