Featured Posts

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணபுரம்


திவ்ய தேச திருத்தலம்

திருக்கண்ணபுரம்

சௌராஜப்பெருமாள் தேவியருடன்

திருக்கண்ணபுரம் கோவில் தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் திருக்கண்ணபுரமும் ஒன்று.

கோபுரமஹிமை: இந்த கோவிலில் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.

திருக்கண்ணபுரம் அருணோதயக்காட்சி

மூலவர்: இங்கு மூலவர் நீல மேகப்பெருமாள் என்றுஅழைக்கப்படுகிறார்.

சவுரிராஜப்பெருமாள் தாயாருடன்

பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளது போல அபய முத்திரையுடன் இல்லாமல் தானம் பெறும் முத்திரையுடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களை எல்லாம் தான் வாங்கிக்கொள்வதாக ஐதீகம்...வைகாசி மாதம் நடக்கும் பிரும்மோட்சவம் விழாவின் பொழுது அதி காலையில் சிவனாகவும் மாலையில் பிரும்மாவாகவும் இரவில் விஷ்ணுவாகவும் காட்சி தரும் மும்மூர்த்தி தரிசனம் இங்கு விசேஷமாக கருதப்படுகிறது.

விமானம்: உத்பலாவதக விமானம்.. கோவிலை ப்ரதக்ஷிணம் வரும் பொழுது கோபுரம் கண்ணில் படுவதில்லை என்பது அன்றைய கட்டிடக்கலைக்கு கட்டியம் கூறுவது போல உள்ளது..

கருடன்

திருவிழாக்கள்: வைகாசி மாசி மாதங்களில் பிரும்மோட்சவ உற்சவம் இங்கு விஷேஷமானவை. மாசிமாதம் பௌர்ணமியின் பொழுது கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஸ்தல வரலாறு: ஒரு முறை இந்த நாட்டு அரசன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பொழுது பெருமாளுக்கு போட்ட மாலையை பிரசாதமாக அரசனுக்கு கொடுத்தார் அர்ச்சகர். மாலையில் நீண்ட தலைமுடி இருந்ததை கண்ட அரசன் சினம் கொண்டு யாருடைய தலை முடி இது என்று கேட்க அர்ச்சகர் பெருமாளின் தலைமுடி என்று சொல்லிவிட்டார்.

அரசனிடம் இருந்து அன்று தப்பிக்க அப்படி சொல்லி விட்டார். அரசன் சொன்னான்" நாளையும் நான் வருவேன். அப்பொழுது பெருமாளுக்கு தலை முடி இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு சென்று விட்டான். அர்ச்சகர் அன்று இரவு முழுவதும் பெருமாளிடம் தன்னை காத்தருளுமாறு வேண்டினார்.. மறு நாள் அரசன் வந்தார். அப்பொழுது பார்த்தால் பெருமாளுக்கு தலை முடி இருந்ததாம். அன்றில் இருந்து இங்கு பெருமாள் சௌரிராஜ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

மங்களா சாசனம் : ஆண்டாள் திருமங்கை அழவார் குலசேகர அழவார் நம்மாழவார் ஆகியோர் இந்த பெருமாளை பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கோவில் குளத்தோடு கோபுர தரிசனம்

பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்கள்:

  1. லோகநாதப்பெருமாள் திருக்கண்ணங்குடி

  2. கஜேந்திர வரதப்பெருமாள் கபிஸ்தலம்

  3. நீலமேகப்பெருமாள் திருக்கண்ணபுரம்

  4. பக்தவத்சல பெருமாள் திருக்கண்ணமங்கை

  5. உலகளந்த பெருமாள் திருக்கோவிலூர்

பிரார்த்தனைகள்: தீர்வே கிடைக்காத நாள் பட்டபிரச்னைகள் நீண்ட நாள் உடல் கோளாறுகள் தள்ளிப்போகும் திருணம் குழந்தை இன்மை பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். முக்கியமாக கடன் தொலையில் இருந்து விடு பட இந்தப்பெருமாள் அனுக்கிரஹம் செய்வதாக நம்பிக்கை.

உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் திருக்கண்ணபுரத்திற்கு ஒரு முறை சென்று பாருங்கள். தரிசனம் முடிந்து வீடு திரும்பும் பொழுது இலகுவான மனதுடன் பிரச்சனைகள் அகன்று தெளிந்த மனதுடன் செல்வீர்கள்.

மஹாபெரியவா எபோதும் உங்களுக்கு துணை இருப்பார்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square