Featured Posts

மஹாபெரியவா குரு பூஜையும் தாய் மகன் பாசப்போராட்டமும்


மஹாபெரியவா குரு பூஜையும் தாய் மகன் பாசப்போராட்டமும்

எந்த ஒரு தாயும்

குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து

நொந்துதான் பெத்திருப்பாள்

நிச்சயம் தும்பி பெத்திருக்கமாட்டாள்

எத்தனை கோவில்கள்

இறை சக்தி எங்கெங்கு இருக்கிறதோ

அங்கெல்லாம் இட்ட அடி நோக

எடுத்த அடி கொப்பளிக்க அலைந்து திரிந்தாள்

தாய் அகிலாண்டேஸ்வரி

நான் கடந்த பல வருடங்களாக பிரதி பலனை எதிர்பார்க்காமல் வாழ்வில் துன்பப்படும் என்னுடைய சக ஆத்மாக்களுக்கு தீர்வு வேண்டி மஹாபெரியவாளிடம் அதிகாலை பிரும்ம முகூர்த்த நேரத்தில் நெஞ்சில் கை வைத்து கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்வது வழக்கம். உங்களுக்கும் இது தெரியும்

இது போல் என்னுடைய சக ஆத்மா விக்னேஷ் என்னும் வாலிபரின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன். அந்த பக்தரின் இன்னல் என்ன என்பதை உங்களுக்கு தெரிய படுத்த வேண்டும். அப்பொழுதான் இந்த மஹாபெரியவா குரு பூஜையின் ஆழம் உங்களுக்கு புரியும்.

இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர். நன்றாக படிக்கக்கூடிய இளைஞர். மென் பொருள் என்ஜினியர் படிப்பு படித்து கொண்டிருந்தார் இவருடைய கற்பனை பெயர் விக்னேஷ்.. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மன வளர்ச்சி குன்றிய குழந்தை போல ஆகி விட்டார்.

ஒரு குழந்தையை போல இந்த பக்தரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும். போகாத கோவில் இல்லை. பார்க்காத வைத்தியம் கிடையாது. இந்தியாவில் உள்ள மந்திரவாதிகளை எல்லாம் பார்த்தாகி விட்டது. எதிலும் பலன் கிடைக்க வில்லை.

இறுதியில் நம்முடைய இணைய தளத்தை பற்றி கேளிவிப்பட்டு குரு பூஜை அற்புதங்களை படித்து விட்டு என்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தார்கள். நான் அந்த இளைஞரை பார்த்து ஒரு புன் முறுவல் செய்தேன். பதிலுக்கு அந்த இளைஞனும் என் புன் சிரிப்புக்கு பதில் புன் சிரிப்பு கொடுத்தான்.

கூட வந்த பெற்றோர்களுக்கு அந்த இளைஞனின் பதில் சிரிப்பு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. ஏனென்றால் அது வரை நாம் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் இருக்காது.அவர்களுக்குள்ளும் எனக்குள்ளும் ஒரு மஹாபெரியவா நம்பிக்கை பிரவேசிப்பதை உணர்ந்தோம்.

நான் இருபது லக்ஷத்திற்கு மேல் ஜெபித்த காயத்ரி மாலையை அந்த இளைஞயனின் கையில் கொடுத்து பத்து நிமிடங்கள் வைத்து கொள்ளச்சொன்னேன். சிறிது நேரம் கழித்து அந்த வாலிபனை பேச வைக்க வேண்டும் என்று முடிவு செய்து நான் ஜெபிக்கும் காயத்திரி மாலையை அவன் கையிலேயே வைத்து கொள்ள சொல்லிவிட்டு நான் அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

உன்னுடைய அப்பா அம்மாவிற்கு வயசாகிறது. உன்னுடைய தங்கைக்கு கல்யாணம் நடக்க வேண்டும். இதெல்லாம் உன்னுடைய பொறுப்பு இல்லையா. நீ உன்னோட அப்பா அம்மா கிட்டே நான் உங்களை பாத்துக்கறேன் என்று சொல் என்றேன்.

சில நிமிடங்களுக்கு அந்தவாலிபன் என்னையே பார்த்து கொண்டிருந்தான். பதில் ஏதும் சொல்லவில்லை. நான் திரும்ப அவனிடம் சொன்னேன் "சொல்லு நான் உங்களை பார்த்துக்கறேன் என்று சொல்ல சொன்னேன்.

சிறிது மௌனத்திற்கு பிறகு அந்த வாலிபன் சொன்னான் " நான் பார்த்துக்கறேன். என்றான். வாலிபனின் பெற்றோர்களுக்கு இது மிகப்பெரிய அதிசயம். அவர்கள் விடை பெற்று செல்லும்பொழுது விக்னேஷ் எனக்கு கை கொடுத்து விட்டு சென்றான்.

நான் அவனிடம் கேட்டேன் "அடுத்த முறை வரும்பொழுது உன்னுடைய அப்பா அம்மாவிற்கு துணையாக நீ வருவாயா என்று கேட்டேன்.. அவனும் வருவேன் என்றான். விக்னேஷ் பேசும் பேச்சு நாம் பேசுவது போல இல்லை. ஒரு மழலை இல்லாத குழந்தை பேசினால் எப்படி இருக்கும் அது போல பேசினான்.அவர்கள் எல்லோரும் விடை பெற்று சென்றார்கள்.

அன்றிலிருந்து நாள் தவறாமல் அந்த வாலிபன் விக்னேஷிற்காக மஹாபெரியவாளிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்வேன்.

உங்களை மேலே அழைத்து செய்வதற்கு முன்னால் தாய்க்கும் மகனுக்கும் நிகழ்ந்த பாசப்போராட்டத்தை இங்கே சொல்லியாக வேண்டும்.

விக்னேஷின் அம்மாவும் அப்பாவும் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள்.முக்கியமாக தாய் அகிலாண்டேஸ்வரி பற்றிய பிள்ளை பாசத்தை இங்கே சொல்ல வேண்டும்.

தன்னுடைய வேலை நேரம் போக மகனை பற்றிய சிந்தனைதான். தாயார் அகிலாண்டேஸ்வரி அம்மாவால் இந்த கொடுமையை இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவேயில்லை.

பிறவியிலேயே இந்த நிலை என்றால் எந்த தாயுமே மனதளவில் தயாராகி விடுவாள். ஆனால் இந்த தாயின் மன நிலை ஏமாற்றத்தையும் தாண்டி.இருக்கும் நிலை. பெற்ற தாயின் வயிறு பற்றி எரிகிறது என்பார்களே. அந்த தாயை அகிலாண்டேஸ்வரி வடிவில் கண்டேன்.

ஒவ்வொரு சனி ஞாயிறு நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அகிலாண்டேஸ்வரி குடும்பத்தை ஏதாவது ஒரு கோயிலிலோ மருத்துவ மனையிலோ அல்லது ஒரு மந்திரவாதியிடமோ பார்க்கலாம்.

தாயிடம் ஒரு குழந்தையை இறைவன் கொடுத்தான் விளையாடுவதற்காக.. ஆனால் அந்த தாயின் வாழ்க்கையில் விதிதான் விளையாடியது. இப்படியே நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் சென்றன. வருடங்கள் உருண்டோடின.

ஆனால் விக்னேஷின் வாழ்க்கையில் மாற்றம் தெரியவில்லை. நானும் உருகி பிரார்த்தனை செய்தேன். அழுது பார்த்தேன். நான் மற்றவர்களுக்கு செய்யும் எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதில் கிடைத்தது விக்னேஷ் பிரார்த்தனை தவிர.

இந்த நிலையில் இந்த மாதம் பதினான்காம் தேதி புதன் கிழமை இரவு எனக்கு அகிலாண்டேஸ்வரி அம்மாவிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. அவர்கள் என்னிடம் பேசியதை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்.

"மாமா என்னுடைய மகன் விக்னேஷிற்கு இத்தனை நாளும் நான் குரு பூஜை செய்து கொண்டிருக்கிறேன்.ஏறக்குறைய ஐம்பத்தி நாலு வாரம் முடித்து விட்டேன். நாளைக்கு காலையில் உங்கள் பிரும்ம முகூர்த்த பிராத்தனையில் போது மஹாபெரியவாளிடம் கேட்டுவிடுங்கள் என்று சொன்னார்.

எனக்கு தோன்றியது எத்தனை நாள் தான் .முடிவு தெரியாமல் ஒரு பிரார்த்தனை செய்வது. மறு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் போது மஹாபெரியவாளிடம் கேட்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

மஹாபெரியவாளிடம் எல்லோருடைய பிராத்தனையும் முடிந்த பிறகு நான் கேட்கத்தொடங்கினேன்.

"பெரியவா இந்த விக்னேஷ் பையனுக்காக நானும் இத்தனை நாட்கள் பிரார்த்தனை செய்து விட்டேன். மற்றஎல்லோருக்கும் பிராத்தனைக்கு பதில்கொடுத்து விட்டிர்கள். ஆனால் இந்த விக்னேஷிற்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்க வில்லை பெரியவா.

அந்த மாமியிடம் நான் என்ன பதில் செய்வது பெரியவா. ஏதோ எனக்கே ஒரு ஏமாற்றம் வந்தது போல இற்கு பெரியவா. கொஞ்சம் தயவு செய்து பதில் சொல்லுங்கள் பெரியவா. என்று அமைதியாக கண்களில் கண்ணீருடன் நின்று விட்டேன்.

பெரியவா சொல்கிறார் இங்கே பாருடா அந்த ஆத்மா கர்மாவை கழிச்சுண்டு இருக்கு. எல்லா கர்மாவும் முடிஞ்சு அவன் நல்ல இடத்துக்கு போயிடுவான்.இனிமே அவனுக்கும் இந்த பூலோகத்திற்கும் சம்பந்தம் இல்லை.அவன் போற நேரம் வந்தாச்சு.

இனிமே அவனுக்கு பிராத்தனை செய்ய வேண்டாம். அந்த ஆத்மா ஒரு அண்ணனா பிள்ளையா இருந்ததுண்டு அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்வான். குடும்பத்தோட மொத்த கர்மாவையும் இவன் வாங்கிண்டு அனுபவிச்சு கழிச்சுட்டான்.

இப்போ அவா கிட்டே எதுவும் சொல்லிண்டு இருக்காதே. அவாளே உன்கிட்டே பேசும்பொழுது கேட்டுக்கோ. கர்மாவும் கழிஞ்சு கால மிருத்துவும் வந்தபிறகு பரமேஸ்வரனாகவே இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. இதை தெரிஞ்சுக்கோ என்றார்.

நானும் ஒரு சொல்ல முடியாத மன சங்கடத்துடன் கண்களில் கண்ணீருடன் விடை பெற்றேன். நான் எதிர்பார்த்தது அந்த வாலிபன் எல்லாவற்றையும் கழித்து மற்ற வாலிபர்களை போல் ஆகி விடுவான் என்று நினைத்தேன். இன்னும் ஒரு சில மாதங்களிலோ ஒரு ஆண்டிலோ விக்னேஷ் இயற்கை ஏய்தி விடுவான் என்று நினைத்தேன். இருந்தாலும் அவர்களே அழைக்கட்டும் என்று மௌனமாக இருந்தேன்.

மாலை மணி ஏழு:

அகிலாண்டேஸ்வரி அம்மாவிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. நான் பூஜை அறையில் பூஜையில் இருந்ததால் என்னால் அழைப்பை ஏற்க இயலவில்லை. பூஜை முடித்து என்னுடைய அறைக்கு வந்து என்னுடைய வழக்கமான அலுவல்களை செய்து கொண்டிருந்தேன்.

மணி இரவு எட்டு முப்பது.

மீண்டும் அகிலாண்டேஸ்வரி அழைப்பு. நான் நான்பேசும் மன நிலையில் இல்லாவிட்டாலும் பேசித்தானே ஆக வேண்டும். என்னிடம் பேசியது விக்னேஷின் தங்கை. சோகமே உருவான குரல். கூடவே அழுகையும் விசும்பலும்.நான் குரல் கொடுத்து விட்டு அழுகைக்கு காரணம் கேட்டேன்.

அவள் சொன்னாள்" மாமா விக்னேஷ் செத்து போய்ட்டான். எனக்கும் அதிர்ச்சியும் அ