Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-25 பாகம் -III ராமானுஜம் குமுத வள்ளி


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-25 பாகம் -III

ராமானுஜம் குமுத வள்ளி

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில்

அடுத்த கட்ட பயணம்

குருவின் கடாக்ஷமும் இருந்து விட்டால்

வாழ்க்கை பல கட்டங்களையும்

மங்களகரமாக தாண்டும்

மஹாபெரியவா பக்த கோடிகளே நாம் இதுவரை ராமானுஜம் குடும்பத்தாரின் முதல் இரு பிரார்தனைகளான ராமானுஜத்தின் கால் புண் ஆறவேண்டும். பிறகு தகுதி சான்றிதழ் பெற்று வேலை நீட்டிப்புடன் வேலையில் சேரவேண்டும் என்னும் பிரார்த்தனைகளை மஹாபெரியவா எப்படி தன்னுடைய இறை அற்புத்ததால் நிகழ்த்தி காட்டினார் என்பதை கண்டு அதிசியத்தோம்.

ஒரு வருடமாக ஒரு நல்ல தீர்வு கிடைக்காமல் மஹாபெரியவாளின் குரு பூஜை முதல் வாரத்திலேயே தீர்வுக்குண்டான நம்பிக்கையை கொடுத்து ஒன்பதாவது வாரத்தில் கால் புண் ஆறி வேலையிலும் சேர்ந்து தன்னுடைய அலுவலக இருக்கையில் இருந்தபடியே என்னை அழைத்து மஹாபெரியவாளுக்கு ராமானுஜம் தன்னுடைய நன்றியை தெரிவித்தார் என்பதை அனுபவித்தோம்.

இந்த நிலையில் ராமானுஜம் தன்னுடைய வருங்கால மருமகனுக்கு தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் வெளி நாட்டிலேயே வேலை கிடைத்து திருமணம் முடிந்து தன்னுடைய மகளுக்கு திருமணமும் முடிந்து வெளி நாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ வேண்டும் என்று பிரார்த்தனை.

இந்த ஒன்பது வார பூஜைக்குள் ஒவ்வொன்றாக நடந்து முடிந்தது. நான் அதை உங்களுக்கு ஒவ்வொன்றாக பிரித்து சமர்பித்தேன். இந்த பிரார்த்தனை ராமானுஜம் குடுக்கும்பத்தாரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரார்த்தனையாகும்

தன் பெண்ணக்கு பார்த்திருக்கும் பையன் வெளி நாட்டில் படித்து கொண்டிருக்கிறார் அவர் படிப்பை முடித்து அந்த நாட்டிலேயே வேலைக்கிடைத்தால் பிறகு தன்னுடைய பெண்ணுக்கு விசா கிடைத்து திருமணமும் முடித்து விடலாம். இது நல்ல படியாக நடந்து முடிய வேண்டும் என்பது ராமானுஜம் குடும்பத்தினரின் முன்றாவது பிரார்த்தனை. இந்த இரண்டு பிரார்த்தனைகளையும் தொகுத்து உங்களுக்கு இந்த பதிவில் சமர்ப்பிக்கிறேன்.

மருமகனின் வேலையும் மூத்த மகளின் திருமணமும்

எந்த ஒரு பெற்றோருக்கும் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு நல்லவனின் கையில் பிடித்து கொடுத்து திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும். பிறகு பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக தங்கள் வாழ் நாளை கழிக்க வேண்டும் என்பது தானே என்றுமே எதார்த்தம். ராமானுஜம் தம்பதியினர் மட்டும் விதி விலக்கா என்ன. இவர்களின் ஆசையும் நியாயம் தானே.

சொந்தங்களில் சொல்லிவைத்து மற்றவர்கள் திருமணத்தில் விசாரித்து ஒரு நல்ல வரனை தேர்ந்தெடுத்தார்கள். பையன் வெளிநாட்டில் ஒரு ஆராய்ச்சி மாணவனாக படித்துக்கொண்டிருக்கிறார். நல்ல படியாக தன்னுடைய ஆராய்ச்சியை முடித்து வேலையும் கிடைத்து அந்த நாட்டின் குடியுரிமையும் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல பழக்கவழக்கங்களை கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தின் பின்ணனியை கொண்ட வாலிபர்.

இவரே தன்னுடைய மூத்த மகளுக்கு சரியான பொருத்தம் என்று முடிவு செய்து காத்திருந்தனர் ராமானுஜம் தம்பதியினர். இந்த சமயத்தில் தான் அவர்கள் மஹாபெரியவாளின் குரு பூஜையை பற்றி கேள்விப்பட்டு என்னை அணுகி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி பூஜையை செய்ய தொடங்கினார்கள்.

முதல் வார பூஜை :

முதல் வாரத்திலேயே இவர்களின் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது. பெண்ணை பெற்றவர்கள் என்ற முறையில் ராமானுஜம் தம்பதியினர் பையனின் பெற்றோர்களை அணுகி தங்களுடைய அபிப்ராயத்தை தெரிவித்தார்கள்.

பையன் இன்றும் ஒரு படிக்கும் மாணவனாகவே இருக்கும் பக்க்ஷத்தில் திருமணம் சாத்தியப்படுமா என்று நினைத்தார்கள் பையனின் பெற்றோர்கள். எது எப்படியிருந்தாலும் மனது ஒத்துபோய் விட்டால் எல்லாமே இரண்டாம் பக்க்ஷம் ஆகி விடுகிறது.

மஹாபெரியவாளிடம் அடுத்த நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் இந்த வரன் நல்ல படியாக முடிய வேண்டிக்கொள்ள சொன்னார்கள்.நானும் சரியென்று அடுத்த நாள் காலையில் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா இன்று ராமானுஜம் தம்பதியினர் பையன் வீட்டிற்கு சம்பந்தம் பேச போகிறார்கள். இந்தசம்பந்தம் நல்ல படியாக முடிந்து இரு வீட்டாரும் திருமணத்தை நடத்தி முடித்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

மஹாபெரியவா என்னிடம்கேட்கிறார்.

ஏண்டா என்னமோ உங்காத்து கல்யாணம் போல இவ்வளவு மெனக்கெடரையே. உனக்கு அவ்வளவு சந்தோஷமா என்றுகேட்கிறார்”.

நான் சொல்கிறேன். “எனக்கு ஒரே பையன் பெரியவா. பெண் குழந்தையில்லை.எனக்கு ஒரு பெண் இருந்தால் இப்பொழுது அவளுக்கும் திருமணம் பேச வேண்டிய நேரம். ராமானுஜம் தம்பதியினரின் பெண்ணை என் பெண்ணாய் நினைத்து உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.அதுதான் எனக்கு இவ்வளவு சந்தோஷம் என்றேன். உன் மனசுக்கு எல்லாமே நன்னா நடக்கும். நான் ஆசீர்வாதம் பண்ணிட்டேன். உனக்கு சந்தோஷம்தானே என்றார்.

இரண்டாவது வாரம் : இந்த இரண்டாவது வார பூஜையையை வியாழக்கிழமை முடித்து மறு நாள் வெள்ளிக்கிழமை ராமானுஜம் தம்பதியினர் பையன் வீட்டிற்கு சம்பந்தம் பேசப்போகிறார்கள். இவர்கள் வெளிக்கிழமை சம்பந்தம் பேசப்போவது எனக்கு முன்பே தெரிந்ததால் நானும் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டேன்.

எனக்கு சனிக்கிழமை காலையில் ஒரு தொலைபேசி வருகிறது. மறுமுனையில் ராமானுஜம் மனைவி குமுதவல்லி. தொலை பேசியில் அவர்கள் சொன்னது

"மாமா பேச்சு வார்த்தை நன்றாக முடிந்தது. இன்னும் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் என் பெண்ணுக்கு வரப்போகும் கணவன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.அதற்கு வேண்டிக்கொள்ளுங்கள் மாமா" என்று சொன்னார்கள்.

மூன்றாவது வாரம் : இந்த வாரமும் மஹாபெரியவா குரு பூஜை நன்றாவே முடிந்தது. ராமானுஜம் வீட்டில் கல்யாணம் களை கட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும். மஹாபெரியவா குரு பூஜை தங்களை கை விடாது என்ற அசாத்திய நம்பிக்கையில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. என்னுடைய பிரார்த்தனையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

நான்காவது வார பூஜை: இந்த வாரமும் மஹாபெரியவா குரு பூஜை நன்றாகவே நடந்தது. ராமானுஜம் அவர்களின் மனைவி மட்டும் எனக்கு தொலை பேசியில் அழைத்து "மாமா பையனுக்கு எப்படியாவது வேலை கிடைத்து என் பெண்ணுக்கும் விசா கிடைக்க வேண்டும். நீங்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் மாமா என்று சொன்னாள் நானும் சரியென்று சொல்லி மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

ஐந்து முதல் ஏழாவது வார பூஜை வரை:

இந்த மூன்று வாரங்களும் நல்லபடியாகவே சென்றன. ஆனால் ராமானுஜத்தின் மனைவி குமுதவல்லி மட்டும் பயமும் குழப்பமும் கலந்த மனசுடன் தான் இருந்தாள். எந்த முன்னேற்றமும் கண்ணுக்கு தெரியவில்லை. மிகவும் குழம்பி இருந்தாள்.

ராமானுஜம் அவர்களும் மஹாபெரியவா அனுகிரஹத்தால் வேலையில் சேர்ந்து விட்டார். இரண்டு வருடம் வேலை நீட்டிப்பும் கிடைத்தாகி விட்டது. ஒரு சந்தோஷம் வந்தால் அந்தசந்தோஷம் ஒரு வாரத்திற்கு கூட நீடிப்பத்தில்லை. பெண்ணின் நிச்சயதார்த்தம் முடிந்ததாக வேண்டும்.ஏழாவது வாரம் வரை இழுபறி நிலையில் தான் எல்லாமே இருந்தது.

எட்டாவது வார பூஜை:

இந்த வார பூஜையை முடித்து விட்டு குமுதவல்லி என்னை தொலை பேசியில் அழைத்து பின்வருமாறு சொன்னாள்:

"மாமா எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கு. இந்த வரனை நம்பி வேறு வரனை கூட பார்க்கவில்லை. எங்களுக்கு பையனின் வீட்டில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.கொஞ்சம் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னாள்.

நானும் சரி மாமி நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்றேன். பிறகு வெள்ளிக்கிழமை காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா ராமானுஜம் ஆத்து பெண்ணுக்கு கல்யாணம் இன்னும் நிச்சயம் ஆகவில்லை. நீங்கள் நினைத்தால் நொடிப்பொழுதில் இதை சரி செய்ய முடியாதா பெரியவா. வருடக்கணக்கில் ஆறாத கால் புண்ணை ஆற வைத்தேன். கேட்டுக்கொண்டபடி இரண்டு வருட வேலை நீடிப்பு வாங்கி கொடுத்தேள்.

இப்போ இந்த பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி கல்யாணம் நடக்க வேண்டும்பெரியவா. அவாளுக்கு கல்யாணத்திற்கு இன்னும் ஒரு பெண் இருக்கிறாள்.இந்த பெண்ணுக்கு கல்யாணம் முடிந்தால்தான் அடுத்த பெண்ணுக்கு வரன் பார்க்க முடியும். இந்த வாரத்தில் ஒரு நல்ல நம்பிக்கை வரக்கூடிய ஒரு முன்னேற்றத்திற்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டேன்.

சனிக்கிழமை காலை எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு. அழைத்தவர் ராமானுஜம்.

அவர் சொன்ன செய்தி.

"மாமா பையன் வீட்டில் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. பையன் வேலை விஷயமாக ஒரு நேர்காணலுக்கு போய்விட்டு வந்ததாகவும் இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவாக வரும் என்று நம்பிக்கை இருப்பதாக சொன்னார். சோர்ந்து போய் இருந்த மனங்கள் மீண்டும் சுறுசுறுப்பு அடைந்தன. வீடும் கல்யாண கோலம் பூண்டது

.

ஒன்பதாவது வார பூஜை:

இந்த வாரம் பூஜையை நன்றாகவே முடித்தார்கள். நானும் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

“பெரியவா போன வாரம் ராமானுஜம் குடும்பத்திற்கு நம்பிக்கை வருமாறு ஒரு முன்னேற்ற செய்தி கிடைக்க அனுக்கிரஹம் செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டேன். நீங்களும் ஒரு நல்ல செய்தியை அவர்களுக்கு கொடுத்து சந்தோஷத்தில் மூழ்க வைத்தீர்கள். இந்த வாரம் ஒன்பதாவது வார்பூஜை பெரியவா. ராமானுஜத்தின் பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகட்டும் பெரியவா. கொஞ்சம் தயை பண்ணுங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டேன்.

வியாழக்கிழமை ஒன்பதாவது வார பூஜை முடிந்தது. நானும் மஹாபெரியவாளை வேண்டிக்கொண்டேன். அன்று இரவே எனக்கு குமுதவல்லி தொலை பேசியில் அழைத்தாள்.விவரம் இதோ உங்களுக்காக

"மாமா ஒரு நல்ல செய்தி. பையனுக்கு வேலை கிடைத்து விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் வேலைக்கு சேர வேண்டும். நல்லசம்பளம். இனிமேல் என் பெண்ணுக்கு விசா கிடைக்க எந்த தடையும் இல்லை. மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்லுங்கோ மாமா. உங்களுக்கு எங்கள் நன்றியை நேரில் வந்து சொல்கிறோம் என்று சொல்லி விடை பெற்றாள்.

சென்ற வாரம்தான் திருமணம் முடிந்தது. கணவனும் மனைவியும் விமானத்தில் ஏறி தங்கள் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கையை அசைத்தார்கள். மஹாபெரியவாளும் தன்னுடைய காருண்ய கண்களால் புது மன தம்பதியினரை வாழ்த்தினார் என்பதை சொல்லவும் வேண்டுமா.

பத்து வருடமாக வெளி உலகத்தை பார்க்காத நான் என் வீட்டில் இருந்தபடியே புது மணத்தம்பதிகளை மனதார வாழ்த்தினேன் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று.

சங்கமம்

தமிழில் ஒரு அழகான வார்த்தை

திருமணங்கள் இரு மனங்களின்

சங்கமம் மட்டுமல்ல

இரு குடும்பங்களின் சங்கமம்

சங்கமம் சங்கமத்தில் சங்கமமாகட்டும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square