Featured Posts

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம். #ஸ்ரீகுருதுதி காஞ்சிச் சங்கரன் சன்னதி எண்ணிக் கணமும் குருவை நாடித் தொழுதால் மஞ்சுள மூர்த்தியின் திருவடி யருளால் கவலைகள் எல்லாம் தொலைந்திடுமே! வல்லான் அங்கை வரமாய் அருளும் வல்லமை உண்டாம் வாழ்வும் உயர்ந்திட வல்வினை யாவும் நீங்கிடும் நற்றுணை நாயகத் தருளால் நலம் பெருகிடுமே!

2018- ஆண்டின் பிரதி மாத அனுஷ தேதியினைத் தெரிவிக்கும் ஓர் அட்டவணையை இன்றையதினம் பகிரும் பாக்கியம் கிட்டியதும் அவர் அருளாலே தாம்! சில காலம் முன்பாக நடந்த ஒரு நிகழ்வினை நினைந்து பார்க்கின்றேன்...! "இப்போல்லாம் பார்த்தேளோ... நம் மஹாபெரியவா விஸ்வரூபம் எடுத்துண்டுருக்கா... " "எதை வச்சுண்டு அப்படி சொல்றே..டா?" "எங்கு பார்த்தாலும் அனுஷம் நடக்கறது... கோலாகலமா மஹா அனுஷ

மஹோத்ஸவம் நடக்கறது...மஹா விஸ்வரூபி நம் மஹாபெரியவா" "அப்படியாக்கும்... சரி... ஒம்பொறந்த வூர் கும்மோணமில்லையோ..." (கும்பகோணத்தை வழக்கிலேகும்மோணம்னு சொல்வா). "ஆமாம்... அங்கே தான் படிச்சு வளர்ந்தேன்... பிற்பாடு அங்க இங்க போயி

அலைஞ்சுட்டு, இப்போமெட்ராஸ்லே குப்பை கொட்டிண்டுருக்கேன்... அதுவும்

பெரியவாளோட க்ருபைலே." "கும்மோணத்துலே ஒங்காத்துலே வாசல், திண்ணே, ஆலவடி, மித்தம்,

ரெண்டாங்கட்டு,கொள்ளைப்பக்கம்னு தானிருக்குமோ..." "ஆமாமாம்... நன்னா நினைவிருக்கு... இப்போல்லாம் சென்னைலே வெறும்

ஃப்ளாட் மயம் தான்." "ஒண்ணு யோசிச்சு பார்த்துச் சொல்லேன்... கொள்ளைபக்கத்துல கிணத்தடிலேகுளிச்சுண்டுருக்கும்போது, வாசல்ல வர்ற ஸ்வாமி ஊர்வலத்தோட மேளதாளம்

கொஞ்சூண்டா காத்துவாக்குல காதுல விழுமே... ஞாபகமிருக்கோ..?" "ஆமாம்.. ஆமாம்... காத்து இந்தபக்கமா வீசும்போது ரொம்ப நன்னா கேக்கும்..

அப்பறம் காத்து தெசமாறும்போது, லேசா கேக்கும்.. நன்னா ஞாபகமிருக்கு". "குளிச்சுட்டு… கொள்ளை ரேழிலே வந்து நிண்ணுண்டு ஒடம்ப தொடச்சுக்கும்போது...?" "இன்னும் செத்த நன்னா கேக்கும்" "மித்தத்துக்கு வந்து வேஷ்டி கட்டிண்டப்புறமா தலை வாரிண்டு ட்ரெஸ்

பண்ணிப்பியே… அப்போ..?" "என்ன... இன்னமும் நன்னாவே கேக்கும். தோ... பக்கத்துலே ஸ்வாமி

வந்தாச்சுண்ணு புரியும். அம்மா,சீக்ரமா வாடா... ஸ்வாமி ஆத்தை தாண்டி போயிடப்போறதூ"ந்னு அம்மா கத்திண்டே அர்ச்சனைதட்டோட வாசலுக்கு வேக வேகமா போவா... நானும் ஓடுவேன்

பின்னாடியே... அதெல்லாம்அருமையான நினைவுகள் தான்." "இப்போ வாசலுக்குப் போயி ஸ்வாமிக்கு பக்கத்துல நெருங்கும்போது, மேளதாள சத்தம்எப்படியாக்கும் கேட்டுதுடா..?" "கணீர்-நு" "அப்போ காத்து வீசற தெசைக்கும் மேளதாள சப்தத்துக்கும் ஏதாச்சம்

சம்பந்தம் இருக்குமோ?" "ம்..ஹூம்... நன்னா கேக்குமாக்கும்" "கேக்குமோள்ளியோ... அப்போ... நீ கொள்ளைபக்கம் இருந்தப்போ கேட்டும் கேக்காமயும் இருந்தசப்தம், வாசலுக்கு வந்ததும் நன்னா கேட்டுதோல்லியோ..." "ஆமாம்... ஆமாம்... சரியாச் சொன்னேள்.." "இத்தன நாளா எங்கயோ கொள்ளைபக்கத்துலே இருந்துருக்கே நீ... இப்போ தான் வெளிவாசலுக்குவந்துருக்கே..." "புரியலையே..." "மஹாபெரியவா ஸ்மரணைன்றது எப்பவுமே இருக்கறது தாண்டா... வெளிலே வரும்போது தான்தெரியறது..." "புரியலையே..." "நீ எப்போத்துலேர்ந்து மஹாபெரியவாளை ஸ்மரிக்க ஆரம்பிச்சே..? பொறந்ததுலேர்ந்தா...அப்பலேர்ந்தே இப்படித்தானா நீ...?" "குட்டிக் கொழந்தையா இருக்கும்போது தாத்தான்னு தான் தெரியும்... அப்றமா வளர வளரசெகத்குருன்னு தெரிஞ்சுது.. அப்றமா தெய்வமாச்சு!" "இப்போ..?" "குலதெய்வம்.. இஷ்டதெய்வம்... ப்ரியதெய்வம்... சகலதெய்வமும் மஹாபெரியவான்னேஆயிடுத்தூ!" "அப்போ... உன்னச் சுத்தி இருக்கறவாளும் மஹாபெரியவா மஹாபெரியவான்னே இருக்கறது போலேஆயிடுத்து... அதனாலே நீயும் அப்படியே ஆயிட்டே, அதானே?" கொஞ்சமாக யோசித்து விட்டு, "ஆ...மாம்... உண்மை தான். அதைத் தவிர வேறு பேசறதுக்கு வழியேஇல்லேங்கறமாதிரி ஆயிடுத்து நெலமை. அதனால எப்பவுமே மஹாபெரியவா ஸ்மரணைஆயிடுத்தூ.." "இப்போ சொல்லு... அவர் இப்போத்தான் விஸ்வரூபம் எடுக்கறாரா? இல்லே நீ இப்போத் தான்விஸ்வரூப தரிசனம் பண்ணிண்டுருக்கியா-ந்னு". புன்சிரிப்போடு அமர்ந்திருந்த பெரியவரை கைகூப்பிய வண்ணமாக கண்களிலே நீர்ப்பணிக்க"பெரியவா சரணம்" என்ற கோஷத்தோடு நமஸ்காரம் செய்ததாம் இதனை எழுதிக்கொண்டிருக்கிறஜடம். இது மட்டுமா...? நம்மில் பல பேர்கள் இப்படியாக நினைத்துக் கொண்டுதானிருக்கிறோம். சிலவேளைபலர் பகிர்ந்துவரும் விஷயங்களைப் பார்த்தால், "நானொன்னும் பெரிசா அனுஷம் அது இதுன்னு அலட்டிக்கறதில்லே... எப்பவும் போலே அன்னிக்கும்பெரியவாளுக்கு புஷ்பம் சார்த்தி ஒரு நமஸ்காரம்... அவ்ளோ தான். அது அதையும் மனசார ஏத்துண்டுவாழ வச்சுண்டுருக்கு, சாணூண்ணா!" "நேக்கு ரொம்ப சாஸ்திரம் சம்பிரதாயம்லாம் தெரியாதுண்ணா.. ஏதோ மஹாபெரியவா படத்துக்குபுஷ்பம் போட்டு, நேக்குத் தெரிஞ்ச ஸ்லோகங்களை வாசிப்பேன். அவருக்கு ஒரு நமஸ்காரம்பண்ணிட்டா மனசு நிம்மதியாருக்கு". "எங்காத்துல எங்க தாத்தாக்கு மஹாபெரியவாளே பாதுகை அனுக்ரஹம் பண்ணிருக்கார். அந்தபாதுகைக்கு அனுஷத்துக்கு அனுஷம் பூஜை நடக்கும். ரொம்ப விமரிசையா நடக்கறது அண்ண... நீங்கஒரு அனுஷத்துக்கு வந்து கலந்துக்கோங்கோண்ணா". "சார். எங்கிட்ட மஹாபெரியவா பாதுகை போட்டோ இருக்கு. ரொம்ப கஷ்டத்துலே இருந்தேன். கடன்,பிணின்னு அல்லாடின சமயம் ஒரு பெரியவர் சொல்லி ஆரம்பிச்சேன். தினமும் அவர் கொடுத்தமஹாபெரியவா பாதுகை போட்டோவுக்கு புஷ்பம் சார்த்தி, நாலு நமஸ்காரம் பண்றேன்... கொஞ்சம்கொஞ்சமா என் நிலைமை நன்னாயி இன்னிக்கு வாழ்க்கை இல்லேங்காம ஓடிண்டுருக்கு". "அனுஷம் கொண்டாடனும்னு ஆசை தான்; ஆனா அதை எப்படிப் பண்றது? எவ்ளோ செலவாகும்னுபுரியலை.. பார்ப்போம்.. பார்ப்போம்னு நாள் ஓடிண்டுருக்கு ஸார். ஆனா, அனுஷ்த்தன்னிக்கு கொஞ்சம்புஷ்பம் ஜாஸ்தி வாங்குவோம். ஈவினிங் ஆபிஸ் விட்டு வந்தப்புறமா தெரிஞ்ச ஸ்லோகங்களைபாராயணம் பண்ணி நமஸ்காரம் பண்றோம்." பல பேர்கள்... பற்பல விதமாக தங்களுடைய எண்ணங்களை, நிலைமைகளை பகிர்கிறார்கள். நான் நினைப்பேன். அனுஷத்தன்னிக்கு நம்மாத்துல விக்ரஹம் இருந்த சொல்பமா ஒரு அபிஷேகம்,பூஜை; இல்லாட்டி மஹாபெரியவா படத்துக்கு மாலை சார்த்தி ஒரு குட்டி பூஜை; அதுவும்இல்லையா... அருகில் அனுஷம் நடைபெறும் ஸ்தலங்களுக்குச் சென்று கலந்து கொண்டுபிரார்த்தனை... லீவு நாள்லே அனுஷமா... ஜம்னு நன்னா பண்றது... ஆனா ஒண்ணூ - பெரியவாளேஅன்று சொன்னது போலே, கோவிலுக்குச் செல்லும்போது குருக்கள்கிட்டே அர்ச்சனை சீட்டோடுதட்டை கொடுத்துட்டு இனிமே அவருக்குத் தான் வேலைன்னு இல்லாம, அப்போ தான் நமக்கு வேலைஜாஸ்தின்னு உணர்ந்து, ஸ்வாமியோட நாமத்தை குருக்களோடு சேர்ந்து சொல்லணும்; இல்லாட்டிஅவர் சொல்ற நாமத்தை காது கொடுத்து நன்னா கேக்கணும்; ஸ்மரணை பண்ணனும். உண்மைதானே! நாமெல்லாம் கோயிலுக்குப் போவதே - எதைத் திண்ணா பித்தம் தெளியும்ங்கிற நிலமைலே தானே! ஆனாலும் எந்த கோயிலுக்குப் போனாலும் அங்கிருந்து புதுசா ஒரு நாமாவளி புஸ்தகத்தை, ஸ்லோகபுஸ்தகத்தை வாங்கிண்டு வந்துடறோம். ஒவ்வொரு ஆத்துலேயும் கொறஞ்சது ஒரு பத்துபுஸ்தகமாச்சும் இருக்கும். ஆனா எத்தனை பேர்கள் அந்த புஸ்தகங்களை பூஜை அறைக்கு போய் ஸ்வாமி முன்னாடி படிக்கறோம்..? ஒரு தடவை சங்கராந்தி பூஜைம்போது பூஜை பண்றதுக்கு தெரிஞ்சுக்க ஒரு புஸ்தகம் வாங்கினேன். சத்யம் சொல்றேன்… இன்னி வரைக்கும் அதை திறந்து பாக்கலை. சங்கராந்தி அன்னிக்கு காலைல அந்த புஸ்தகத்தைத் தேடும்போது சரஸ்வதி பூஜை, நவராத்திரி விளக்கு பூஜை, பிள்ளையார் சதுர்த்தி புஸ்தகமெல்லாம் கிடைக்கும் – அதைத் தவிர! சரி! பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு? இதே கதை செத்த வேற மாதிரியா நடக்குது. யோசிக்கணும். வாரா வாரம் ஞாயிறு விடுமுறை – ஆபிஸ் வேலைலேர்ந்து விடுதலை. அன்னிக்காச்சும் ஒரு ஸ்வாமியோட நாமாவளியைப் படிக்க முயற்சி பண்ணுவோமே! நூறு வருஷம் நமக்குன்னு வாழ்ந்துட்டு, நடை நடையா எல்லா இடத்துக்கும் போயி எல்லாரையும் ஆசிர்வதிச்சு நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து, நல்லதா நாமெல்லாம் வாழ வழி பண்ணிவர் நம் மஹாபெரியவா… அவர் நம்மை தினமும் ரெண்டு நிமிஷம் சிவ சிவ, ரெண்டு நிமிஷம் ராம ராம சொல்லச் சொல்லி கேட்டார். பண்றோமா? இனிமே பண்ணுவோம். இன்னிக்கு உறுதி எடுப்போமே! அதோட விட்டுடாம, அனுஷத்துல கலந்துக்கும்போது, அர்ச்சனை நடக்கும்போது, ஸ்ரீமஹாபெரியவா அஷ்டோத்தரத்தை நாமும் சொல்வோம். யாரோ பூஜை பண்ணுவா; யாரோ பாராயணம் பண்ணுவா; நாம நமஸ்காரம் பண்ணுவோம்னு இல்லாம, நாமும் சேர்ந்து நம் குருநாதரோட ஸ்லோகங்களையும், நாமாக்களையும் சொல்லி நம் ஸ்மரணையோட ஆழத்தைப் பெருக்கிப்போமே! ஆத்துலே தான் ஸ்லோகம் படிக்கறது இல்லே; இப்படி ஸ்வாமி சன்னிதானங்கள்ளேயாச்சும் பாராயணம் பண்ணுவோமே! அதுவும் பெரியவாளோட சன்னிதானத்துலே ஒரு தடவை படிச்சா ஆயிரம் தடவைக்கு சமானமாகுமே! சரி ஸ்வாமி… நேக்கு ஸ்லோகங்கள்ளாம் தெரியாதேம்பேள்.. கத்துக்க முயற்சி பண்ணுவோமே! லலிதா சஹஸ்ர நாம புஸ்தகத்தை முதல்ல கைல எடுங்கோ… மத்தவா சொல்லும்போது கண்களை வார்த்தைகளோட ஓட்டுங்கோ பாக்கலாம்… ஒரு நாலு தடவைல த்யான ஸ்லோகம் தானா மனப்பாடம் ஆகும். இதெல்லாம் நா ஒங்களுக்கெல்லாம் சொல்றது இல்லே.. நேக்கு பல பெரியவர்கள் சொன்னதாக்கும். படிக்கப் படிக்க ஆர்வம் ஜாஸ்தியாறது. படிக்க படிக்க மனசு நெகிழ்கிறது. முயற்சி பண்ணிண்டுருக்கேன். என்னச் சுத்தி இருக்கறவா மஹாபெரியவா ஸ்மரணைலே இருந்து என்னை எப்பவும் ஊக்குவிச்சுண்டுருக்கறவா… இப்படி ஸ்லோகங்களைப் படிக்கறவாளாவும், நாமாக்களை உச்சரிக்கறவாளாகவும் இருந்துட்டா நானும் அப்படியாயிட ஊக்கம் கிடைக்காதான்னு இருக்கு. அதிக பட்சம் வாரம் ஒரு முறையோ அல்லது மாசத்துல ஒருமுறையாச்சும் வேத சப்தத்தைக் கேப்போமே! அந்த சப்தம் நமக்குள்ள அப்படி என்ன மாற்றத்தைத் தரும் என்பதை யோசிக்கறத விட்டுட்டு, அதை ருசிச்சு பாத்தோமானா… தெரிஞ்சுடப் போறது. அப்படித்தான் என்னயும் செய்யவச்சார் ஒரு பெரியவர். இப்போ மாசாமாசம் ஒரு வேத பாடசாலைக்குப் போறேன். என்னாலே முடிஞ்சதை வேதபாடசாலைக்கு பண்றேன். கொழந்தேளோட வேத சப்தத்தை கொஞ்ச நாழி ரசிச்சுட்டு மனசு திருப்தியானதும் கிளம்பி வந்துடறேன். சில வேளைகளில் நங்கை நல்லூரில் உள்ள சிவன் கோயிலில் வேத கிளாஸ் நடந்துண்டுருக்கும். அங்கே அமர்ந்து சில நேரம் கேக்கறேன். சமஸ்கிருதம் என்னன்னு தெரியலை; ஆனா புடிச்சுருக்குன்னு மனசு சொல்றது. ருசிச்சு பாருங்கோளேன். உங்களுக்கே தெரியும்! ஆக, எல்லாரையும் இப்போ அனுஷத்திலே அடியேன் வேண்டுவதெல்லாம், அனுஷத்தன்னிக்கு மறக்காம மஹாஸ்வாமிக்கு முடிஞ்ச புஷ்பத்தை சமர்ப்பணம் பண்ணுவோம். தெரிஞ்ச ஸ்லோகங்களை வாசிப்போம். முடிஞ்சா அனுஷ மஹோத்ஸவத்திலே கலந்துப்போம்; காலைல முடியாட்டி எங்கெல்லாம் மாலையில் ஸ்ரீமஹாபெரியவா வீதிவுலா நடக்கறதோ அங்கே சென்று அவரோடு நடை பயில்வோம். ஆம்! பயில்வோம்… அவருடன் நடக்கும்போது மனம் பயிலும் – தர்மம் எது? நெறி எது? நாம என்ன பண்ணிண்டுருக்கோம்? என்ன பண்ணனும்? எல்லாம் புரியும். வலம் வந்து பார்த்துட்டுச் சொல்லுங்கோளேன். அனுஷ நாளிலே ஆத்துலே நீங்க பண்ற பூஜையோட தரிசனத்தை மறக்காம உங்க உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் பகிருங்கோ! உங்காத்து பூஜை தரிசனத்தைப் பார்த்த அந்த உள்ளம் என்றேனும் அதுவும் செய்யத் துவங்கும். அப்பறமென்ன…? எல்.ஐ.ஸி ஏஜண்ட்டு ஒரு தடவை நம்மை வளைச்சுட்டு மாசாமாசம் ஏஜன்ஸி கமிஷம் சம்பாதிக்கறாமாதிரி தான். அவா போடற புஷ்பத்துனால நமக்கும் பலன் உண்டாச்சே! அனுஷ மூர்த்தி தரிசனம் செய்வோம்; அனுஷத் திருவுருவை ஸ்மரணை செய்வோம்; அனுஷத்தில் அனுக்ரஹம் பெற்று ஆனந்தமாக வாழ்வோம். எதைச் சொல்ல வந்தேன்… என்ன சொன்னேன்னு தெரியலை. ஆனா இத்தன நாழி உம்மாச்சியை ஸ்மரணை பண்ணிண்டுருந்தேன்னு மட்டும் உணர்றது மனசு. இதை ஒரு தடவை படிச்சுட்டேள். இன்னிக்கி இல்லாட்டாலும் நீங்களும் அனுஷத்துலே ஐயனுக்கு நமஸ்கரித்து ஆனந்தத்தை அடையப்போவது மட்டும் உறுதி என்பது சத்யம். உங்களுக்குத் தெரிந்த அனுஷம் நடைபெறும் இடத்தினைப் பற்றி எனக்கு எழுதுங்கோ. எங்கே நடக்கறது? அவா போன் நெம்பர் என்ன? முகவரி என்ன? எல்லாரும் கலந்துக்கலாமா? ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, ஹாரத்தின்னு நடக்கறதா? மஹாபெரியவா வீதியுலா உண்டா? நேக்கும் அந்த விஷயம் தெரிஞ்சுதுன்னா, அவாகிட்டே பேசி, அந்த அனுஷ தலத்துக்கு என்னாலே முடிஞ்ச அளவு ஸ்ரீகுஞ்சிதசங்கரன், ஸ்லோக பதிப்புகளை அனுப்பி பிரசாதத்தோட எல்லா பக்தாளாத்துக்கும் ஸ்ரீசரணரை அனுப்பி அவாளையும் ஆனந்தமாக வாழ வழி செஞ்ச திருப்தியும், ப்ரார்த்தனை பலனையும் அடையலாமே!

குரு ஸ்மரணை குலங்காக்கும் – சத்தியம். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன் --