Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-045


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-045

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

மஹாபெரியவாளுக்கு சொந்தமான

இரு வார்த்தைகள்

“நா இருக்கேன்”

இதை மெய்யாக்கும் ஒரு அற்புதம்

மஹாபெரியவாளின் அற்புதங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவம் கொண்டது. சில அற்புதங்களை எழுதும் பொழுது எனக்கு கண்களில் கண்ணீர் வரும். சிலஅற்புதங்கள் என்னை சிந்திக்க வைக்கும். . இன்னும் சில அற்புதங்கள் என்னை வியக்க வைக்கும்.

சில அற்புதங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதங்களை உள்ளடக்கியதாக இருக்கும்..

ஆனால் ஒரு சில அற்புதங்கள் இதில் எதிலும் அடங்காமல் என் உள்ளத்தில் என்னை அசை போட வைத்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் இந்த பதிவில்நாம் படித்து பரவசப்பட போகிறோம்.

ஆல் இந்தியா வானொலியில் பணிபுரியும் அலுவலர் ஒருவர். எல்லா சாமிகளையும் வணங்குவது போலத்தான் இவரும் மஹாபெரியவாளை தன்னுடைய குரு நாதராக நினைத்து வணங்கி வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் இவருக்கு காஞ்சி மடத்து பரம்பரியமோ அல்லது இவரது தாத்தா மஹாபெரியவாளுக்கு பரிச்சயம் ஆனவரோ இல்லை. உங்களையும் என்னையும் போல ஒரு சாதாரண பக்தர்.

இவருக்கு ஒரு நாள் குடும்ப சூழல் நிமித்தமாக ஒரு வாரம் வெளியூர் செல்லவேண்டிய நிர்பந்தம்.. வீட்டு காவலுக்கு என்று யாரையும் வைத்து விட்டு போக முடியாது.அந்த நாட்களில் எங்கு பார்த்தாலும் ஒரே திருட்டு பயம்..காவல் நிலையத்தில் சொல்லிவிட்டு போகலாம் என்று பார்த்தால் இவருக்குள் ஒரு குழப்பம்.

இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தார்..

தான் குருநாதராக வழிபாடும் மஹாபெரியவாளை காவலுக்கு வைத்து விட்டு போகலாம் என்று முடிவு செய்து வீட்டில் உள்ள மஹாபெரியவா படத்தை வைத்து மஹாபெரியவாளிடம் பேசுகிறார். நான் மஹாபெரியவாளிடம் பேசுங்கள் என்று உங்களுக்கு சொல்வது போல இவரும் பின்வமாறு பேசினார்.:

“பெரியவா நான் ஒரு வாரம் வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் .இங்கு ஒரே திருட்டு பயம்.. வீட்டை பூட்டி விட்டு போக பயமாக இருக்கிறது.. கஷ்டப்பட்டு சம்பாதித்து சிலபொருள்களை வாங்கி போட்டிருக்கிறேன்.. என்ன செய்வதென்று தெரியவில்லை.

உங்களைத்தான் காவலுக்கு வைத்துவிட்டு போகலாம் என்று இருக்கிறேன்.நான் திரும்பி வரும்வரை வீட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் பெரியவா. உங்களை நம்பித்தான் நான் தைரியமாக செல்கிறேன். ஒரு வாரத்தில் வந்து விடுகிறேன் என்று பெரியவாளிடம் பேசிவிட்டு ஊருக்கு கிளம்பினார்.”.

வெளியூருக்கு சென்று ஒரு வார காலம் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்து கொண்டார். மனது கவலையால் அலைபாயாது நிச்சலனமாக இருந்தது. கவலையெல்லாம் மறந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். மஹாபெரியவா மேல் அப்படியொரு நம்பிக்கை. மஹாபெரியவாளிடம் பேசிவிட்டால் அது நடப்பது சத்தியம் என்ற ஒரு அனுபவம்.

ஒரு வாரத்திற்கு பிறகு சந்தோஷமாக தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறார்.ஆட்டோவில் இருந்து வீட்டு வாசலில் இறங்குகிறார்.. வீட்டின் வாசல் கதவு சற்றே திறந்திருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.. மேலும் கதவை திறந்து உள்ள போனார்..

இதயத்தில் இடி இறங்கியதை போலிருந்தது. வீடு சூறையாடப்பட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. பாத்திரங்கள் எல்லாம் தரையில் உருண்டு கிடக்கின்றன.ஒரு புறம் வெள்ளி பாத்திரங்களும் ஒரு புறம் துணிமணிகள் இரைந்து கிடக்கிறது.

வீட்டின் உரிமையாளர் மஹாபெரியவா முன் அமர்ந்து கதறுகிறார். பெரியவா உங்களை நம்பித்தானே வீட்டை உங்களிடம் கொடுத்து விட்டு நான் போனேன். கண்ணீர் விட்டு கதறும் எந்த பக்தனின் கோரிக்கையும் நீங்கள் நிறைவேற்றி வைப்பீர்கள் என்று சொல்கிறார்களே. நான் உங்கள் பக்தன் இல்லையா? அவ்வளவு சொன்னேனே.. ஒன்றும் உங்களின் காதுகளில் விழவில்லையா? நான் என்ன தப்பு செய்தேன். கஷ்டப்பட்டு தானே நேர்மையாக பொருளை எல்லாம் சம்பாதித்தேன். இப்பொழுது எனக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள் என்று அழுது புலம்புகிறார்.

பிறகு மனதை தேற்றிக்கொண்டு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனுவை அளிக்கிறார்.. சற்று நேரத்தில் காவலாளிகளும் வந்து விட்டனர்.. வீட்டில் எல்லாஇடங்களையும் சோதித்து பார்க்கின்றனர்..

நகைகள் வைத்து விட்டு போன பணம் வெள்ளி பாத்திரங்கள் எல்லாமே இருக்கின்றன. எதுவும் காணாமல் போகவில்லை. எல்லோருக்குமே இது ஒரு புது விதமான திருட்டாக பட்டது. ஆனால் எதுவும் புரியவில்லை.. வீட்டு உரிமையாளருக்கோ ஒரு சரியான முடிவுக்கு வரமுடியவில்லை.

காவலாளிகள் சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு பேரை அவர்கள் பணியில் விசாரித்த பொழுது உண்மையை அந்த திருடர்கள் சொன்னார்கள். இதோ அவர்கள் சொன்னது உங்களுக்காக.

“நேற்று இரவு வீட்டை திறந்து உள்ளே சென்று விட்டோம். எல்லாவற்றையும் எடுத்து ஒரு துணியில் மூட்டையாக கட்டி எடுத்து செல்ல தயாராக இருந்தோம்.அப்பொழுது எங்கள் முதுகில் கையால் ஒரு அடி விழுந்தது..

திரும்பி பார்த்தால் ஒரு வயதானவர் கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு இவர்களை திருடுவாயா திருடுவாயா என்று கேட்டுக்கொண்டே அடித்தாராம்.. அவர் வயதானவர்தான். ஆனால் அடித்த அடி ஒவ்வொன்றும் போலீஸ்காரர்கள் அடிப்பது போல இருந்தது.. ஆனால் அந்த அடி எங்களை திருத்தி விட்டது.”

போலீஸ்காரர்கள் அந்த திருடர்களிடம் பெரியவரின் அங்க அடையாளங்கள் பற்றி கேட்க இவர்கள் சொல்ல ஆரம்பிக்கும் முன்னர் அங்கு சுவற்றில் மாட்டி இருந்த மஹாபெரியவா படத்தை காண்பித்து இவரேதான். இவர்தான் எங்களை அடித்தது. பெரியவர் அடித்த அடி எங்ககுக்கு வலித்தாலும் இனிமேல் திருடவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.. இனிமேல் உழைத்துதான் சாப்பிடப்போகிறோம் என்று ஆந்த போலீஸ்காரர்களிடம் சொன்னார்களாம்.

வீட்டு உரிமையாளர் மஹாபெரியவா முன் மண்டியிட்டு பின் வருமாறு சொல்லி அழுதார் அழுதார்...

“கருணை சகாரா நான் ரத்தம் சிந்தி சம்பாதித்தை எல்லாம் நொடிப்பொழுதில் எனக்கு மீட்டுக்கொடுத்து விட்டிர்கள்.. நான் ஏதாவது ஒரு சில வார்த்தைகளை புரியாமல் சொல்லியிருந்தால் ஏன்னை மன்னித்து விடுங்கள் பெரியவா..

நான் மனிதன் நீயோ ஈரேழு லோகத்தின் சக்கரவர்த்தி. என்னை படைத்த பரமேஸ்வரன்.என்னை மன்னித்து என் பிழையை பொறுத்தருள வேண்டும். என்று கெஞ்சுகிறார்.

வீட்டு உரிமையாளரின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டார்

வீட்டை காவல் காத்து திருடனையும் பிடித்தார்

பிடித்த திருடனும் திருந்தினான்

தான் ஒரு ஜகத் குரு பரமதயாளன் கருணாசாகரன்

அழைத்தவர் குரலுக்கு செவி சாய்ப்பேன்

என்பதை உலகிற்கு புரியவும் வைத்தார்

இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளர் நன்றி சொல்ல முயன்றால் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. உனக்கு ஏதாவது பிரம்மையாக இருக்கும் என்று சொல்லிவிடுவார். அதுதான் மஹாபெரியவா.

இந்த மாதிரி தருணத்தில் நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம். ஊரை கூட்டி விழா எடுத்திருப்போம்.ஆனால் எல்லாவற்றையும் செய்து விட்டு தனது பக்தரையும் காப்பாற்றி விட்டு எதுவுமே தெரியாததுபோல் மௌனத்தில் அமர்ந்து விடுகிறார் நம் மஹாபெரியவா.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square