Featured Posts

அனுஷம்


என்னுரை

சாணு புத்திரன் அவர்கள் நமக்கு அவருடைய குரு புகழ் குரு ஸ்துதி குரு கானம் போன்ற பதிவுகள் மூலம் நன்கு அறிமுகமானவர்.இவரது மஹாபெரியவா கைங்கர்யம் இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

இவரது அடுத்த கைங்கர்யம் அனுஷம் ஆராதனை செய்யும் இடங்களை ஒன்றிணைப்பதுதான். இதன் துவக்கமாக இன்று முதல் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி மஹாபெரியவா என்னும் ஒற்றை சொல் பக்தர்களாகிய நம்மை எல்லாம் இணைக்கிறதோ அதே போல் அனுஷ ஆராதனை கைங்கர்யம் எல்லா தெய்வ சக்திகளையும் ஒன்றிணைத்து நமக்கு ஆசிகளையும் அனுகிரஹங்களையும் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமென்ன.

மஹாபெரியவா பக்தர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். நம்முடைய இணையதளத்தையும் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் பார்க்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை. எந்த பக்தர் எந்த ஊரிலும் எந்த நாட்டிலும் இருந்தாலும் அந்த ஊரில் நடைபெறும் அனுஷ ஆராதனை இடங்கள் உங்களிடம் இருந்தால் நீங்களும் அங்கு சென்று அந்த அனுஷ பூஜையில் பங்குபெறலாம் என்பதை இந்த முயற்சி நமக்கு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் என்பது நிச்சயம் சாணு புத்திரன் அவர்களின் இந்த முதல் முயற்சி நொடிப்பொழுதும் வளர்ந்து மஹாபெரியவா என்னும் அந்த ஒற்றை பிரபஞ்ச வார்த்தை விஸ்வரூபம் எடுத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய அனுஷ பூஜை இடங்களின் விவரங்கள் ஒவ்வொரு மாதமும் இதே பதிவில் சேர்க்கப்பட்டு உங்கள் பார்வைக்கு வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இணைய தளத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையில் என் சார்பிலும் அவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மஹாபெரியவா சரணம்

காயத்ரி ராஜகோபால்

பெரியவா சரணம்

அற்புதமாய் அவனியிலே பவனிவரும் ஆசார்யன் பொற்பதமும் தந்திடுமே பூவுலகில் மேன்மைதனை கற்பகமாய் வரமருளும் அருளாலன் ஆசியினால்

அற்பமான பிறவியிதும் அதிசயமாய் மாறிடுமே! #Anusham #அனுஷம்

2018 ஜனவரி மாத அனுஷத்தன்று சென்னை ஸ்ரீசங்கராலயத்திலே ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி நடைபெற்ற சமயத்திலே பாரதமெங்கிலும் உள்ள 27 அனுஷ் ஸ்தலங்களிலே ஸ்ரீசரணாளுக்கு சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஸ்ரீகுஞ்சிதபாத பிரசாதம் சார்த்தி 27 நக்ஷத்திரங்களிலும் பிறந்த பக்தகோடிகள் அனைவரும் வளமோடு வாழ பிரார்த்தித்தோமல்ல்வா! அதனைத் தொடர்ந்து, காஞ்சித் தெய்வம் கருணாமூர்த்தியான ஸ்ரீமஹா பெரியவாளின் பிறந்த நக்ஷத்திரமான அனுஷத்தன்று பிரதி மாதம் அனுஷ பூஜைகள் நடக்கும் இடங்கள் பற்றிய விவரங்களை சேகரித்து பகிர வேண்டும் என்பது அடியேனின் நீண்ட நாள் அவா ஆகிப் போனது. இன்று அந்த் பிரார்த்தனை / அவா பூர்த்தியாக ஆரம்பிக்கின்றது என்பதே அவர் அருளால் தாமே! ஆங்காங்கே வசிக்கின்ற பக்தர்கள் தாம் வசிக்கும் இடங்களுக்கு அருகே நடைபெறும் பிரதி மாத அனுஷ பூஜைகளிலே கலந்து கொள்ள இது ஓர் வாய்ப்பினை ஏற்படுத்தாதா என்ற ஏக்கம் மேலிட, இன்றைய பகிர்வு உதயமாகியது. தொடர்ந்து அடியேனுக்குக் கிட்டுகின்ற சென்னை மட்டுமல்லாது பல்வேறு இடங்கள் பற்றியும் விவரங்களைப் பகிரும் பாக்கியத்தையும் அவசியம் ஸ்ரீசரணாள் அனுக்ரஹிப்பார் எனும் நம்பிக்கை உள்ளது. ஒரு முறை அனுஷ பூஜையிலே கலந்து கொண்டு பாருங்கள்; அவருடைய அனுக்ரஹ வலிமைதனை நிச்சயமாக உணரமுடியும். இப்படியாக அனுஷ பூஜைகளிலே கலந்து கொண்டு உணர்ந்த அன்பர்கள் பல்லாயிரம் பேர்கள் இன்றைய பொழுதுகளிலே தத்தம் வீடுகளிலும் ஐயனை பூஜித்து ஸ்மரித்து ஆனந்தமாக வாழ்வதும் கண்கூடாயிற்றே!

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த அனுஷம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்களை அடியேனுக்கு அனுப்பி வைத்தால் இந்த லிஸ்ட்டிலே அதனையும் அப்டேட் செய்யவும் வசதியாக இருக்கும். இது குறித்து அடியேனின் பதிவுகள் முன்னம் வந்திருக்கின்றன. அப்படியாக அன்பர்கள் அடியேனுக்குப் பகிர்ந்தபடியாக இந்த ஸ்தலங்களுக்கெல்லாம் ஸ்ரீகுஞ்சிதசங்கரன் மற்றும் தில்லையம்பலத்தானாகிய சிதம்பரம் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்குச் சூட்டிய ஸ்ரீகுஞ்சிதபாத பிரசாதத்தையும் அனுஷ ஸ்தலங்களுக்கு அனுப்பி பிரசாதத்தை ஸ்ரீமஹாபெரியவாளுக்குச் சூட்டி, ஸ்ரீகுஞ்சிதசங்கரனாக காட்சியளித்து பக்தர்களுக்குண்டான பிணிகளை நீக்கியருள வேண்டும் மஹாபிரபோ என பிரார்த்திக்கவும் செய்கின்றோமே! ஸ்ரீகுஞ்சித சங்கரன் திருவுருவப் படத்தினை அன்பர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களிலே அனுஷபூஜையிலே கலந்து கொள்ளும் போது பெற்றுக் கொள்ளலாமே! சங்கரம் போற்றி!

LIST OF ANUSHAM STHALAMS

BANGALORE – Katriguppe Village Namma Sampradaya Veda Patashala, Jnana Jyothi Campus, Katriguppe Village, Neriga Post, Bangalore 560125. Sri. Rajaraman - +91 98676 37724 BANGALORE – Malleeswaram Shankara Mutt Sri Kanchi Kamakoti Peetam Shankara Mutt, 11th Cross, 5th Main, Malleeswaram, Bangalore 560003 BANGALORE – JP Nagar Flat No 215, Block No 21, Jeevan Saathi Colony, 10th Cross, 25th Main, JP Nagar 1st Phasse, (Near RV Dental College), Bangalore - 560078. Sri. Krishnan - +91 98808 88223 CHENNAI – Abhiramapuram Sri Shankara Gurukulam, 8/20, CP Ramaswamy Road, Off. St. Mary’s Road & Abhiramapuram 4th Street, Abhiramapuram, Chennai 600018 Sri. Chandrashekaran - +91 99400 49726 CHENNAI – Adambakkam S-2, Malar Blue Bell Apts., VOC Street, Nilamangai Nagar, Adambakkam Chennai – 600088. Sri. Ganesh Iyer - +91 93810 96060 CHENNAI – Ashok Nagar Smt. Saraswathi Krishnan, No. 1/1 77th Street, , Near 16th Avenue, Behind Lakshmi Hall (Kalyanamandapam), Ashok Nagar, Chennai 600083 Sri. Sivakumar - +91 98410 59347 CHENNAI – Chromepet Kalavai Guruparampara Veda Vidya Trust , (Shankara Matam Samajam), 13/7, Shankarlal Jain Street, Nehru Nagar, Chromepet, Chennai - 600044 Sri. Sivakumar - +91 44 2223 3970 / +91 94441 39934 CHENNAI – Madambakkam Periyava Illam, Plot No 34 Bhagyalakshmi Nagar, Madambakkam, Chennai – 600126. Sri. Prakash - +91 92831 70890 CHENNAI – Mylapore Mylai Mahaperiyava Anusham Trust, Ground Floor Shree Ganesh Flats, New No 52/2, Old No 35/2, North Mada Street, Mylapore, Chennai 600004 Sri. Ramakrishnan - +91 98847 19221 / Mr Sethuraman - +91 94442 49484 CHENNAI – Nanganallur Shree Ramanee’s Hall, 11th Street, (Near Anjaneya Swamy Temple) Nanganallur, Chennai – 600061. Sri. Mahesh - +91 98410 24084 CHENNAI – Nanganallur Ranjani Hall, 15th Street, Nanganallur Co-op Housing Society Colony, Near Hyagreevar Temple, Nanganallur, Chennai – 600061 Sri. Vaidhyanathan - +91 93848 45223 CHENNAI – Pammal No. 27, CPN Subham Avenue, 30 Feet Road, Balaji Nagar, Pozhichalur, Pammal Chennai - 600 075. Sri. L S Venkatesan - +91 96000 64140 CHENNAI – R A Puram Sri Mahaperiyava Paduka Mandapam, Old No 124, New No. 6, Kattukoil Garden P S Sivaswamy Salai, Chennai 600004 Sri. Narasimhan - +91 98410 33516 CHENNAI – Saligramam 36, Navalur High Road, Mathiyazagan Nagar, Saligramam, Chennai 600093 Sri. Durga Prasad - +91 94442 53053 CHENNAI – Santhoshapuram Plot No 10, H No 4/34, (Near Anbu Stores), Lenin Street, Santhoshapuram, Chennai – 600073. Sri. R Gopalakrishnan - +91 9443286058 CHENNAI – St Mary’s Road Simpson Vaitha Mama’s Residence, “Guru Kripa”, No. 70, St. Marys Road Chennai – 600018. Sri. Ravi Anna - +91 98406 37730 CHENNAI – Velacherry Sri Periyava Illam, No 1 4th Main Road, Sri Dhandeeswaram Nagar, Velacherry Chennai 600042. Sri. Janakiraman - +91 99404 05388 CHENNAI – Villivakkam (Every Anusham @ Devottees Residences) No. 44/77A Nehru Nagar, Villivakkam, Chennai – 600049. Sri. S S Nagarajan - +91 98840 88831 CHENNAI – Virugambakkam Sri Guru Paduka Samajam Charitable Trust, Sri Shiva Vishnu Temple, Natesan Nagar 2nd Cross Street, Virugambakkam, Chennai – 600 092 Sri. Krishnaswamy - +91 96770 82579 CHENNAI – West Mambalam Goshala Goh Samrakshana Sala, Kasi Viswanathar Koil Street, West Mambalam Chennai 600004. Smt. Shyamala Subramaniam - +91 98842 90540 CHENNAI – West Mambalam Panchami Seva Trust, B-5, 21/56 Postal Colony 1st Street, West Mambalam Chennai 600033. Sri. Panchami Nagarajan - +91 94447 57441 CHENNAI – West Mambalam Sri Chandrasekarendra Saraswathi Baktha Jana Trust, 4/4 K V Colony 3rd Street, West Mambalam, Chennai 600033 Sri. M.C. Mouli Anna - +91 44 2371 1931 / +91 98844 02391 CHENNAI – West Mambalam Second Floor, Murugavadi Flats, 36 Thambaiah Road Extension, West Mambalam, Chennai 600033. Sri. Chandrashekara Barathi - +91 98416 38286 COIMBATORE – NGGO Colony Coimbatore Mahaperiyava Anusham Utsav Samaj, 4/279 I Main Road, NGGO Colony, Coimbatore 641022. Sri. J P Narayanan - +91 94427 09223 COIMBATORE – P N Pudur Sai Lakshmi & Sai Maa Catering base Kitchen,, No 1-C Thendral Nagar, Behind BI Metal Bearing, P N Pudur, Coimbatore – 641041. Sri. Ravi - +91 93631 00319 COIMBATORE – R SPuram Sri Kamakshi Amman Temple, 108-127, W TV Swamy Road, R S Puram, Coimbatore 641 002. Sri. Ramakrishna Ganapatigal - +91 99445 49621 COIMBATORE – Vadavalli No. 11/34 Guruswamy Nagar 5th Street, Navavoor Pirivu, Vadavalli Coimbatore 641046. Sri. Balaji Siva - +91 95851 77525 CUDDALORE – Tirupapuliyur Sri Kanchi Kamakoti Peetam – Shankara Matam, Babu Rao Street, Tirupapuliyur, Cuddalore – 607002. Sri. Raja – +91 DINDIVANAM – Veda Patashala Sri Chandramouleeswara Gurukula Veda Vidhyalaya Trust, 9 Malligai Street Vasanthapuram, Dindivanam – 604 001. Sri. Manikanta Shrowthigal - +91 93677 31112 / +91 4142 225111 EACHANGUDI – Sri Mahaperiyava Gruhum Kanchi Sri Mahaswamigal Shatabdi Mahalakshmi Ammal Trust, Eachangudi Thiruvaiyaru Post, Thanjavur District – 613 204, Kumbakonam Taluk – 612104 Sri. Ambi Venkatraman - +91 73738 67769 GOVINDAPURAM – Sri Kanchi Mahaswamigal Tapovanam Sri Kanchi Mahaswamigal Tapovanam, Thiruppanippettai, Thiruvidaimarudur Kumbakonam Taluk – 612104. Sri. Parthasarathy - +91 98412 65785 HOSUR – Periyava Gruhum Sri Sri Sri Periyava Gruhum, C-24/23 2nd Floor, TNHB Colony, Bagalur Road Hosur 635109. Sri Ganesan Iyer - +91 99947 81596 KADIRAMANGALAM – Shankarapuram Sri Mahaperiyava Chaturveda Gramam, Sri Sankarapuram, Kadiramangalam Thanjavur District – 612106. Sri. Venkatasubramanian (Advocate) - +91 98410 32959 KANCHIPURAM – Mahaperiyava Adhishtanam Sri Kanchi Kamakoti Peetam, Sri Mutt Samasthanam, No. 1 Salai Street Kanchipuram – 631502. Manager - +91 44 27222115 KANCHIPURAM – Orikkai Mani Mandapam Sri Mahaperiyava Mani Mandapam (Orikkai), Arasu Nagar, Thandavaraya Nagar, Kanchipuram 631601. Manager - +91 44 KANCHIPURAM – Pradosham Mama Gruhum Sri Sri Sri Mahaperiyava Thirukkoil, Brahmasri Pradosham Mama Gruhum, 54 Sri Sri Sri Chandrashekarendra Saraswathi Street, Bangaru Amman THottam (Opp. to Collector’s Office), Kanchipuram – 631501. Sri. Sriram - +91 44 27237360 KANCHIPURAM - Thenambakkam Shivasthanam, Sri Brahma Pureeswarar Temple, Thenambakkam, Kanchipuram – 631601 KARUR - Nangavaram Sri Mahaperiyava Dhyana Mandapam, Sri Goh Shala, Agraharam, Nangavaram Village, Kulithalai Taluk, Karur – 639104. Mobile: +91 99440 06688, E-mail: shrifoundationtry@gmail.com KUMBAKONAM – Sri Mutt Samasthanam Sri Kanchi Kamakoti Peetam, Sri Shankara Mutt, No. 92, Mutt Road, Kalyanaraman Street, Valayapettai Agraharam, Kumbakonam – 612001. Sri. Prabhu Sarma - +91 978804 41880 KUMBAKONAM – Thippirajapuram Sri Mahaperiyava Anugraham, Keezha Agraharam, Thippirajapuram, Kumbakonam Taluk – 612 402 Sri. Ramarathinam - +91 73959 60076 MADURAI – Sri Mutt Samasthanam Sri Kanchi Kamakoti Peetam, Sri Shankara Mutt, 23, Besant Road, Chokkikulam Madurai – 625002. Sri. Nellai Balu - +91 94426 30815 MAHENDRA MANGALAM (Sri Paramacharya of Kanchi Mutt learnt Vedas for three years about a century ago till 1914) Mahendra Mangalam Village Tiruchi – Namakkal Highway Dharmapuri Distt. – 636805 Sri. Ramamurthy Sastri - +91 9976611657 / Sri Krishnamoorthy - +91 95977 42732 MUMBAI – Riddhi Park D-102, Riddhi Park, Near Gaondevi Mandir, Thakurli East, Mumbai – 421201 Sri. Lakshmanan S - +91 98208 09393 NAGPUR – Sri Sarveswara Devalayam Sri Sarveswara Devalayam, Ram Nagar, Nagpur 400 033 Sri. Jagadeesan - +91 90280 12943 NEW DELHI – Anusham Delhi (Every Anusham @ Devottees Residences) Ausham Delhi, 795 Sector 4, R K Puram, New Delhi 110 022. Sri. Lakshmi Narayanan - +91 98113 30942 NOCHIAM – Sri Lalitha Parameswari Temple 4/305, Aiyan Canal South Bank, Kollidam North Bank, Madhava Perumal Temple, Nochiam, Trichy – 621 216. Sri. Rajalakshmi Ammal - +91 94433 70605 PONDICHERRY – Karuvadikuppam Shri Venkata Nivas, 86, 6th Main Road, Mahaveer Nagar, Karuvadikuppam Pondicherry – 605008. Sri. Ashirwad Ramesh - +91 94433 37023 SALEM – Periyava Gruhum Sri Periyava Gruhum, No. 113, Raghuram Colony, Gandhi Road, Hasthampattu, Salem 636007. Sri. Raju Mama - +91 99524 20864 SALEM – Ravi Anna’s Residence 67/196, Krishnan Temple Street, Salem - 636001 Sri. Ravi Anna - +91 427 2250735 TRICHY – Thiruvanaikaval Sri Guru Paduka Gruhum, No. 204, 11th Cross, Ganapathy Nagar, Thiruvanaikaval, Trichy 620005. Sri. Viswanathan - +91 90940 06001 TRICHY – Thiruvanaikaval Sri Kanchi Kamakoti Peetam – Shankara Matam, Vadakku Vasal, hiruvanaikaval, Trichy 620005. THIRUVENGADU – Sri Mahaperiyava Temple Sri Vaishnavi Trust, Sannadhi Street, Thiruvengadu – 609114. Sri. Venkatasubramanian (Advocate) - +91 98410 32959 VELLORE – Katpadi Sri Muthumariamman Temple, Gandhi Nagar, Katpadi, Vellore – 632 006. Sri Mahaperiyava Anusha Nakshatra Bakthi Sabha - +91 70105 22265 VILLUPURAM – Sri Mahaperiyava Avathara Sthalam Sri Mahaperiyava Avathara Sthalam, Sri Kanchi Kamakoti Peetam Sri Shankara Mutt, East Hanumar Koil Street, Near Kamaraj Road, Villupuram – 605602 Sri. Venkataraman - +91 98404 25253 VIRUDACHALAM – Rettai Theru No. 4 Rettai Theru, Virudhachalam – 606001. Sri. Chandramouli G - +91 97917 14647