Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-042


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-042

பிரதி புதன் கிழமை தோறும்

ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயா மாமா

சுவாமிநாத மாமாவின் தந்தை சிமிழி வெங்கட்ராமன் மாமா மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். தந்தை மடத்து அத்யந்த பக்தர் என்ற முறையில் சுவாமிநாத மாமாவை மஹாபெரியவா சிமிழி என்று அழைப்பது வழக்கம்.

இந்த நேர்காணல் நடந்த வருடம் 2012 அப்பொழுது மாமாவிற்கு வயது ..94 இப்பொழுது மாமாவிற்கு நூறு வயது இருக்கலாம். எனக்கு அந்த விவரம் தெரியவில்லை.

மாமாவினால் அதிக நேரம் பேசமுடியவில்லை. நிறுத்தி நிறுத்திதான் பேசுகிறார். மாமாவின் அனுபவங்களில் இருந்து ஒரு அனுபவத்தை இங்கு உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.

இந்த வயதான காலத்தில் மாமா தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வதே பெரிய விஷயம். எனக்கு சில வார்த்தைகள் சரியாக புரியவில்லை.

நீங்கள் இந்த காணொளியை கேட்கும் பொழுது புரிந்து கொள்ளுங்கள். வயதானவர் மஹாபெரியவாளே பாராட்டியவரின் குரலை கேட்பதே பெரிய பாக்கியம்.

மாமாவின் நெகிழ வைக்கும் ஒரு சம்பவம்

ஒரு முறை மஹாபெரியவா மாயவரத்திற்கு வந்திருந்தார் . அப்பொழுது காவேரி கரையில் முகாமிட்டிருந்தார். காவிரி நதியில் ஸ்துலா காவேரி ஸ்னானம் முடித்து விட்டு ஒரு வீட்டின் திண்ணையில் ஏறி நின்று கொண்டார்.

எல்லா பக்தர்களும் மஹாபெரியவாளை சுற்றி நின்று கொள்கிறார்கள். அப்பொழுது மஹாபெரியவா ராமேஸ்வரத்தில் சங்கரமடத்தையும் அதை ஒட்டி ஒரு கோவிலும் நிர்மாணித்துக்கொண்டிருந்தார்.

மஹாபெரியவாளுக்கு அந்த கோவிலில் ஒரு மனுநீதி சோழன் கட்டிய மணி போல கட்டவேண்டும் என்ற ஆசையை சொன்னார். அதுவும் அந்த மணியை திருவாரூரில் இருக்கும் முதலியார் ஸ்வாமிகள் தான் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

உடனே மஹாபெரியவா திருவாரூருக்கு யாரையாவது அனுப்பவேண்டும் என்று முடிவு செய்தார். கீழே சிமிழி மாமா நின்று கொண்டிருந்தார். மஹாபெரியவா மாமாவை அழைத்தார். மஹாபெரியவா மாமாவிடம் சொல்கிறார்.

"இங்கே காஞ்சிபுரத்தில் இருந்து கச்சபேஸ்வரர் சாஸ்திரிகள் வந்திருக்கிறாரார பார். இருந்தால் இங்கே அழைத்து வா என்கிறார்.

கச்சபேஸ்வர சாஸ்திரிகளும் வருகிறார். சாஸ்திரிகளுக்கு மஹாபெரியவா உத்தரவிடுகிறார்."உடனே கிளம்பி திருவாரூர் சென்று முதலியார் ஸ்வாமிகளை சந்தித்து நான் சொன்ன மணியை பற்றி சொல்லு என்று வழியனுப்பி வைக்கிறார்.

சாஸ்திரிகளும் திருவாரூர் சென்று முதலியார் ஸ்வாமிகளை சந்தித்து விஷயத்தை சொல்கிறார். ஆனால் முதலியார் ஸ்வாமிகள் சொல்கிறார் எனக்கு மிகவும் வயதாகி விட்டது. என்னால் உடல் ரீதியாக ஒன்றும் செய்ய இயலாது. மஹாபெரியவா சொன்ன கோவில் மணிக்கு எவ்வளவு செலவாகுமோ அந்த தொகையை கொடுத்து விடுகிறேன் என்கிறார்.

சாஸ்திரிகளுக்கு ஒரே ஏமாற்றமாக போய் விட்டது. வருத்தத்துடன் மாயவரம் வந்து மஹாபெரியவாளிடம் தன்னுடைய ஏமாற்றத்தையும் முதலியாரின் இயலாமையையும் சொல்லுகிறார்.

அப்பொழுது மஹாபெரியவா சாஸ்திரிகளிடம் கேட்கிறா.ர் ஆமாம் இங்கிருந்து திருவாரூர் போவதற்கு முன் இங்கே இருக்கும் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தாயா என்று கேட்கிறார்.

அதற்கு சாஸ்திரிகள் சொல்லுகிறார் பெரியவா ரெண்டு தேங்காய் உடைத்து விட்டுத்தான் போனேன், இருந்தாலும் விநாயகர் ஏமாற்றி விட்டார். என்கிறார். அதற்கு மஹாபெரியவா சாஸ்திரிகளை அறிவுரை சொல்லி திருத்துகிறார். விநாயகர் நமக்கு எந்த தடங்கலும் இல்லாமல் ஒரு காரியத்தை முடிக்க அருள் புரிகிறார்.

அவரை இப்படி சொல்வது அபச்சாரம். அப்படி சொல்லாதே. நீ இங்கிருந்து திருவாரூர் கிளம்பியவுடன் திருவாரூர் முதலியாரின் சகோதரர் இங்கு வந்திருந்தார். அவரிடம் இந்த கோவில் மணி விவரத்தை சொன்னவுடன் அவரே எல்லாவற்றையும் செய்து விடுகிறேன் என்றார். நீ தேங்காய் உடைத்து பிள்ளையார் உன்னை ஏமாற்றவில்லை. அவர் வேலையை அவர் சரியாக செய்து விட்டார் என்றார் மஹாபெரியவா.

இது போல் இன்னும் இரண்டு மறக்கமுடியாத சம்பவங்களை சிமிழி மாமா நினைவு கூறுகிறார். ஒரு ஆதமர்த்தமான காணொளியை பார்த்த அனுபவமும் மஹாபெரியவாளின் அணுகுமுறைகளையும் நன்கு அனுபவிக்கலாம். காலம் தாழ்த்தாமல் பாருங்கள். மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=nP8ktqFZCYY&t=213s

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square