திவ்ய தேச திருத்தலம் நாகப்பட்டினம்
திவ்ய தேச திருத்தலம்
நாகப்பட்டினம்

சௌந்தர்ராபெருமாள் கோவில் முகப்பு தோற்றம்
நாகப்பட்டினம் சௌந்தரராஜப்பெருமாள் கோவில் நாகை பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

அலங்கார பூஷணர் சௌந்தரராஜப்பெருமாள்
மூலவர்: நீலமேகப்பெருமாள்
உற்சவர்: சௌந்தரராஜப்பெருமாள்
தாயார்: சௌந்தர்ய லட்சுமி கஜலக்ஷ்மி
மங்களா சாசனம் : திருமங்கயழவரால் பாடல் பெற்ற ஸ்தலம்
ஸ்தல வரலாறு: இந்த சேக்ஷத்திரத்தில் மனமுருகி வேண்டிக்கொண்டால் வேண்டியதை பெருமாள் தருவார் என்பது ஐதீகம். இந்த கூற்றுக்கு சான்றாக முன்னூறு காலத்தில் துருவன் என்ற சிறுவன் ஸ்ரீமன் நாராயணனை நினைத்து கடும் தவம் புரிந்தான்.தவத்தின் நோக்கம் இந்த உலகமே தனக்கு அடிமையாக வேண்டும் என்பது. . சிறுவனின் தவத்தை மெச்சி பெருமாள் அழகு சுந்தரனாக காட்சி கொடுத்தார்.சிறுவன் பெருமாளின் அழகில் மயங்கி தான் கேட்க வந்ததை மறந்து தனக்கு என்றும் பெருமாளின் அழகில் திளைக்க வேண்டும் என்ற வரத்தை கேட்டான்.பெருமாளும் வரத்தை aஅளித்துவிட்டு அளித்து விட்டு மறைந்தார்.

சௌந்தரராஜப்பெருமாள் அவதார உற்சவம்
திருமங்கை மன்னனே இந்த பெருமாள் மீது பத்து பாடல் படும்பொழுது ஒன்பது பாடலில் பெருமாளின் அழகை மட்டுமே பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் பெருமாளையும் இந்த ஸ்தலத்தை பற்றியும் பாடினார்.
இங்கு வேண்டிய வரங்களை பெருமாள் அள்ளி தருவார் என்பது புறநா உண்மை. உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் பலிக்கட்டும். உங்கள் வாழ்வும் சிறக்கட்டும். உங்கள் நாள்பட்ட நோய்கள் கடன் தொல்லைகள் தீராத பகைமை போன்றவைகள் எரிந்து சாம்பலாகட்டும்.
உங்கள் பயணம் இனிதே அமைய நானும் உங்களுக்காக மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்கிறேன்

சௌந்தரராஜப்பெருமாள் தாயாருடன்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்