Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26-ருத்திரன் பாகம் –II


மஹாபெரியவா சரணம்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26 ருத்திரன் பாகம் –II

பிரதி திங்கட்கிழமை தோறும்

வாழ்க்கையில் பயம்

மனதில் குழப்பம்

சொந்தங்களின் பகைமை

நட்புகளில் விரோதம்

எல்லோர் வாழ்க்கையிலும்

உள்ளது தானே இவையெல்லாம்

நொடிப்பொழுதில் விலக

மஹாபெரியவாளை சரணடையுங்கள்

நான் ஒரு வாழும் உதாரணம்

இந்த வாரத்தில் இருந்து ருத்திரன் அவர்களின் பிரார்த்தனைகளும் அதற்கு மஹாபெரியவா எப்படி அனுகிரஹித்தார் என்பதை பற்றியும் விலாவரியாக பார்க்கப்போகிறோம். முதல் பிரார்த்தனை : தனக்கு இரண்டு வருட வேலை நீடிப்பு வேண்டும் என்ற பிரார்த்தனை.

வாழ்க்கை என்னும் பந்தயத்தில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்த மறு வினாடியே இறைவன் நீ பந்தயத்தில் ஓட வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. ஓடப்பா ஓடு என்று விதி பிரச்சனைகளை கொடுத்து ருத்திரனை ஒடிக்கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்று வாழ்க்கை சொல்லாமல் சொல்லியது.

இந்த சமயத்தில்தான் இவருடைய நண்பர் ஒருவர் மஹாபெரியவா குரு பூஜையை பற்றி எடுத்துச்சொல்ல பிறகு என்னுடைய தொலை பேசி இலக்கத்தை பெற்று என்னை தொலை பேசியில் அழைத்து தன்னுடைய பிரச்சனைகளை சொல்லி மஹாபெரியவாளிடம் குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி தரச்சொன்னார். நானும் முன்பே சொல்லியபடி மஹாபெரியவாளிடம் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் உத்தரவு வாங்கி ருத்திரன் அவர்களிடம் சொன்னேன்.

ஒரு செவ்வாய் கிழமை காலை எனக்கு ருத்திரன் அவர்களிடம் இருந்து அழைப்பு. அவர் என்னிடம் சொன்னது." மாமா, எனக்கு இப்பொழுது புரிகிறது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

என்னுடைய அலுவலகத்தில் நான் பணியாற்ற வேண்டிய இறுதி நாள். என்னுடைய இருக்கையில் அமர்ந்து காபியை அருந்திக்கொண்டே நாளையில் இருந்து காலையில் மெதுவாக எழுந்திருந்தால் போதும். விமானம் ஏறுவதும் இறங்குவதுமான சப்தம் இனி இல்லை. என்று எனக்குள் சொல்லிக்கொண்டே என்னுடைய அறையை ஆசை தீர ஒரு பார்வை பார்த்து விட்டு என் இல்லத்திற்கு கிளம்பினேன்” என்றார். மேலும் அவர் சொன்னது.

ஆனால் நடந்தது என்ன?. இன்று பாருங்களேன் நான் திரும்ப வேலைக்கு செல்ல வேண்டிய நிலை. எல்லாம் இறைவன் சங்கல்பம். மாமா நான் என் கதையையே பேசிக்கொண்டிருக்கிறேன். மஹாபெரியவா ஏதாவது உத்தரவு கொடுத்தாளா என்று கேட்டார். நானும் ஆமாம் சார் மஹாபெரியவா உங்களுக்கு ஒன்பது வார குரு பூஜைக்கு உத்திரவு கொடுத்திருக்கிறார் என்றேன். ருத்திரனுக்கு ஒரே சந்தோஷம்.

பூஜையை எப்படி செய்வது என்பதை எனக்கு ஈமெயில் மூலம் அனுப்பிடுங்கோ. நான் பக்தியுடன் பூஜையை ஆரம்பித்து நீங்கள் அறிவுறித்தியபடி ஒவ்வொரு வாரம் பூஜை முடிந்ததும் உங்களை தொலை பேசியில் அழைத்து விவரம் சொல்லுகிறேன் என்றர். இனி ஒவ்வொரு வாரமும் ருத்திரன் அவர்கள் பூஜை எப்படி செய்தார். ஒவ்வொரு பூஜைக்கு பிறகு அவருடைய மன நிலை எப்படி இருந்தது.என்பதை இனி பார்ப்போம்.

முதல் வார பூஜை:

இது முதல் வார பூஜை என்பதால் புதன் கிழமை இரவே வேண்டிய சாமான்கள் எல்லாற்றையும் வாங்கி வைத்து கொண்டார்.. எல்லா சாமான்கள் என்றதும் பயந்து விடாதீர்கள்.. மொத்தம் சாமான்களுடைய விலையே நூறு ரூபாய்க்குள் தான் இருக்கும். கொண்டைக்கடலையை இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டார்.

எனக்கு ஒன்று புரிந்தது. அறுபது வயதை எட்டியவர்களுக்கு தான் இறை நம்பிக்கையும் பூஜையின் முக்கியத்துவமும் புரியும் என்பதை நானே கண்கூடாக பார்த்தேன். மிகவும் பயபக்தியுடன் பூஜையை செய்தார். அவருடைய மன நிலை எப்படி இருந்ததாம் தெரியுமா.

இத்தனை நாளும் மருந்தும் நோயுமாக இருந்த வீடு முதல் முறையாக கோவிலாக மாறிக்கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். உங்களுக்கும் மஹாபெரியவாளுக்கும் தான் நன்றி சொல்லணும் என்றார். நானும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். என்று தொலை பேசியை துண்டித்து விட்டு நான் விடை பெற்றேன்.

இரண்டாவது வார பூஜை:

ருத்திரன் அவர்களிடம் இருந்து எனக்கு வந்த தொலை பேசி அழைப்பு. விவரங்கள் இதோ உங்களுக்காக. இந்த வாரம் மஹாபெரியவா பூஜை நன்றாகவே சென்றது. காலையில் ஐந்து மணிக்கே வீட்டில் சுப்ரபாதமும் சோஸ்திரங்களும் ஒளிப்பதால் வீட்டிலுள்ளவர்கள் எல்லோர் மன நிலையிலும் மாற்றம் வந்திருக்கிறது.இதை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.

மாமா எனக்கு வேலை நீடிப்பு கிடைத்து விடும் அல்லவா? எனக்கு நாள் ஆகஆக ரொம்பவும் பயமா இருக்கு என்றார். நானும் அவரிடம் சொன்னேன் மஹாபெரியவா நினைத்தால் எதுவும் சாத்தியமே.

மஹாபெரியவா உங்களுக்கு நிச்சயம் இரண்டு வருட வேலை நீடிப்பு வாங்கி தருவார் என்றேன். அவரும் ஒரு இரண்டு வருடம் வேலை பார்த்தால் நான் சமாளித்து விடுவேன் என்றார். ருத்திரனின் மன வேதனை எனக்கு நன்றாகவே புரிந்தது.

மூன்றாவது வார பூஜை:

எனக்கு ருத்திரனின் மன வேதனை நன்றாகவே புரிந்தது. என்னால் உணரவும் முடிந்தது. நான் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் மஹாபெரியவளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா என்னுடைய பிரார்த்தனையில் சிலவற்றுக்கு உடனே பதில் கொடுத்து விடுவீர்கள். ஆனால் சிலவற்றிற்கு தாமதமாக பதிலும் கொடுத்து அனுகிரஹமும் செய்கிறீர்கள்.

ஆனால் ருத்திரனின் பிரார்த்தனை சற்றே வித்தியாசமானது பெரியவா. அறுபது வயதில் தன் மகனும் குடும்பமும் தன்னை தாங்கும் என்ற நிலை மாறி இன்று ஓய்வு பெற்ற பிறகும் தன்னுடைய குடும்பத்தையும் மகனையும் தான் தான் தாங்க வேண்டும் என்ற நிலையில் அது எவ்வளவு கொடுமை பெரியவா. உடலிலும் வலு இல்லை மனதிலும் தெம்பு இல்லை.

இந்த கொடுமையான நிலையை மாற்றி நீங்கள்தான் ருத்திரனுக்கு வேலை நீடிப்பு வாங்கித்தரவேண்டும். எனக்காக எதுவும் உங்களிடம் நான் வேண்டி கொள்வதில்லை. மற்றவர்கள் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன்.நீங்கள் நினைத்தால் எதுவும் நொடிப்பொழுது தானே. கொஞ்சம் தயை காட்டுங்கள் பெரியவா என்று என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

ஒரு வினாடி மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா சொன்னார். அவனுக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு. அவனுக்கு நீ கேட்ட மாதிரி இரண்டு வருஷம் வேலை நீட்டிப்பு கிடைக்கும் என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

நான்காவது வார பூஜை:

நான் மஹாபெரியவா வேலை கிடைத்துவிடும் என்று சொன்னதை ருத்திரனனிடம் சொல்லவில்லை. நம்பிக்கையுடன் பூஜையை செய்யுங்கள். மஹாபெரியவா கருணாசாகரன். உங்களை கை விடமாட்டார் என்று மட்டும் சொன்னேன்.அவரும் பூஜையை நன்றாகவே நம்பிக்கையுடன் செய்தார்.

ஐந்தாவது வார பூஜை:

இந்த வாரமும் பூஜை நன்றாகவே முடிந்தது.ஆனால் ருத்திரன் மனஅளவில் மிகவும் பயந்து போய் இருப்பதை என்னால் உணர முடிந்தது. ருத்திரன் மனதளவில் பாதிக்கப்பட்டு விட கூடாது என்று நினைத்தேன். மஹாபெரியவா சொன்னதை அவரிடம் சொல்லிவிட்டேன்.

"மஹாபெரியவா உங்களுக்கு அனுக்கிரஹம் பண்ணிட்டா. நிச்சயம் வேலை நீடிப்பு கிடைத்துவிடும் என்றேன். பிறகுதான் ருத்திரன் குரலில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் பிறந்தது. நீங்களே சொன்னதற்கு பிறகு எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. ரொம்ப நன்றி மாமா என்று சொல்லி விடை பெற்றார்.

ஆறாவது வார பூஜை:

ருத்திரன் அவர்கள் இந்த வாரம் பூஜையை ஒரு பூரண நம்பிக்கையுடன் முடித்தார். நானும் வேலை விஷயமாக எதாவது தெரிந்ததா என்று கேட்டேன். இதுவரை ஒன்னும் தெரியலை மாமா. காத்திருக்கிறேன் என்று சொன்னார். நானும் மனதை தளரவிட வேண்டாம் என்று சொன்னேன்.

ஏழாவது வார பூஜை:

இந்த வாரமும் நம்பிக்கை இல்லாமல் தான் பூஜையை முடித்தார். நான் அவருக்கு வேண்டிய நம்பிக்கையை கொடுத்தேன்.

எட்டாவது வார பூஜை:

இந்த வராம் பூஜையை செய்து முடித்தார். எனக்கும் தொலை பேசியில் அழைத்து தன்னுடைய கவலையை சொன்னார். நானும் கவலை வேண்டாம் மஹாபெரியவா எல்லாத்தையும் பார்த்துப்பார் என்று சொன்னேன்.அவரும் நம்பிக்கையுடன் சரி மாமா காத்திருக்கிறேன். என்றார்.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிராத்தனையில் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டேன்.

பெரியவா ருத்திரன் மனதளவில் மிகவும் சோர்ந்து போய்ட்டார். அவரால