பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-043

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-043
பிரதி புதன் கிழமை தோறும்
T.R. சுந்தரமூர்த்தி மாமா
சுந்தரமூர்த்தி மாமாவை பற்றி ஒரு சில வரிகள்.. நமக்கெல்லாம் பக்தி என்னும் வார்த்தைக்கு பொதுவான அர்த்தம் தெரியும். ஆனால் உண்மையான பக்திக்கு வாழும் உதாரணமாக ஒரு சிலரை தான் நாம் பார்க்கமுடியும். அந்த ஒரு சிலரில் சுந்தரமூர்த்தி மாமாவையும் நிச்சயம் சொல்லலாம். நமஸ்கராமே செய்யலாம்.
தன்னுடைய சிறு வயதில் இருந்தே மூன்று பெரியவாளுக்குமே கைங்கர்யம் செய்துள்ள ஒரு புண்ணியாத்மா. மாமாவிற்கு மூன்று ஆண் பிள்ளைகள். தன்னுடைய மூன்று பிள்ளைகளையுமே மடத்து கைங்கர்யத்துக்கு பணித்தார் என்றால் மாமாவின் பக்தி எப்படிப்பட்டது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
மாமாவின் பக்திக்கு மேலும் வலு சேர்க்கும் மற்றுமொரு உதாரணம்.
மாமாவும் தன்னுடைய மகன் இந்து வாசனும் மடத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் மாமா தன்னுடைய வீட்டை மடத்திற்கு எழுதி வைத்து விட்டதாகவும் அதற்கு மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
மஹாபெரியவா என்ன கேட்டாராம் தெரியுமா.? அப்பாக்கும் பிள்ளைக்கும் தகராறு வரதுக்கா? என்று கேட்டாராம். அதற்கு மாமா சொன்னாராம். என் பிள்ளைகளுக்கு என்னசெய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விட்டேன். இந்த வீடு எனக்கானது. என் வீட்டைத்தான் எழுதி வைக்கிறேன் என்று சொன்னாராம். பிறகு மஹாபெரியவாளும் மாமா எழுதிய பத்திரத்தை ஆசீர்வாதம் செய்து கொடுத்தாராம்.
மாமாவின் அற்புத அனுபவங்கள் ஏராளமாக இருந்தாலும் ஒரு அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அப்பொழுது மஹாபெரியவா கலவையில் இருக்கிறார். ஒரு நாள் இரவு கிளம்பி கலவைக்கு பக்கத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலுக்கு செல்கிறார். கூடவே மாமாவும் இன்னும் ஒருவரும் செல்கின்றனர்.
கோவிலில் இருந்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய ஆற்றங்கரையில் மஹாபெரியவா அமர்ந்து தன்னுடைய அனுஷ்டானங்களை தொடங்கினார். .மாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை . இவ்வளவு சீக்கிரம் அதுவும் கலவையை விட்டு ஒதுக்கு புறமாக ஜன சந்தடி இல்லாத இடத்தில் அகால வேளையில் ஸ்னானம் செய்வதென்றால் யாரும் சற்று யோசிப்பார்கள் அல்லவா? மாமாவும் யோசித்தார். ஒன்றும் புரியவில்லை.
அதிகாலை இரண்டு மணிக்கு மேல் மஹாபெரியவா ஸ்னானம் செய்யும் இடத்தில் ஒரு படகு போன்ற கார் வந்து நிற்கிறது.
காரில் இருந்து இரண்டு முக்கிய புள்ளிகள் இறங்குகின்றனர்.ஒருவர் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் .M.G.R மற்றொரு முக்கிய புள்ளி இதயம் பேசுகிறது என்ற வார நாளிதழின் ஆசிரியர் மணியன் அவர்கள்.
அந்த அகால வேலையில் வயல் வெளி வரப்பின் மேல் இருவரும் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு மஹாபெரியவா முன் வந்து நிற்கின்றனர். அப்பொழுது நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதற்குள் விஷயம் வெளியில் கசிந்து ஊரே கூடி விட்டது. M.G.R அவர்கள் கேட்ட வரம் தமிழகத்தை ஆளுவதற்கு தனக்கு தைரியம் வேண்டும் என்றும் தமிழகம் எப்பொழுதும் சுபிக்ஷமாக இருக்க வேண்டும். இந்த ரெண்டு பிரார்த்தனைகளை மட்டும் முன் வைத்தார் .
நமக்கே தெரியும் அவரது ஆட்சி காலம் தமிழகம் எப்படி இருந்தது என்று. அவர் மறைவு வரை தமிழகம் எப்படி இருந்தது என்று.இது போல் இன்னும் பலஅற்புதங்களையும் நெஞ்சை நெகிழச்செய்யும் நிகழ்வுகளையும் இந்தக்காணொளி மூலம் கண்டு களியுங்கள்.
https://www.youtube.com/watch?v=RtwOIOEcOx8
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்