திவ்ய தேச திருத்தலம் நாச்சியார்கோயில்
திவ்ய தேச திருத்தலம் - நாச்சியார்கோயில்
புராண பெயர் திரு நறையூர்

நாச்சியார் கோவில் கருட சேவை
செல்லும் வழி: கும்பகோணத்தில் இருந்து குட வாசல் செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நாச்சியார் கோவில். இதற்கு திருநறையூர் என்னும் பெயரும் உண்டு

நாச்சியார் கோவில் கல் கருடன்
ஸ்தல அமைப்பு: கோவில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் எழுபத்தி ஐந்து அடி உயரம் கொண்ட நிலை ராஜகோபுரத்தை கொண்டது..ஐந்து பிரகாரத்தை உள்ளடக்கியது.
இந்தக்கோவில் செங்கட்சோழனால் கட்டப்பட்டது.இது ஒரு மாடக்கோவில். (யானை ஏற முடியாத கோவில் என்பது இதன் பொருள்)
மூலவர் சன்னதியை இருபத்தியொரு படிகளை ஏறி தான் தரிசனம் செய்ய வேண்டும்.
பெயர் காரணம்: இந்த தலத்தில் விஞ்சுளவல்லி தாயாருக்கே முன்னுரிமை. அதனால் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்டது.

நாச்சியர் கோவில் நீராட்டு உற்சவம்
ஸ்தல வரலாறு: மேதாவி என்னும் ரிஷியின் தவப்பயனால் மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு விஞ்சுளவல்லி என்று பெயரிடப்பட்டு அழைக்க படுகிறாள். .விஞ்சுள வள்ளி பருவ காலம் எய்திய பிறகு பெருமாளின் ஐந்து அம்சங்களான சங்கர்ஷணனன் பிரதியுன்னன் அநிருத்தன் புருஷோத்தமன் இந்த ஐவரும் மஹரிஷியின் குடிலுக்கு சென்று உணவ அருந்தி விட்டு கை கழுவும் போது விஞ்சுளவள்ளி நீர் கொடுக்க அப்பொழுது விஞ்சுளவள்ளி கை பிடிக்க கோபம் கொண்ட மகரிஷி சாபம் கொடுக்க இருந்த நேரத்தில் ஐவர் ஒருவராகி மகரிஷியை இரந்து நிற்க இன்றும் அதே கோலத்தில் கருவறையில் பெருமாள் காட்சி தருகிறார்.

விஞ்சுளவல்லி தாயார்
கல் கருடன்: ராஜகோபுரத்தை கடந்து சென்றால் தூண் மண்டபம் உள்ளது. இதை கடந்து சென்றால் மேலே பெருமாள் கருவறை உள்ளது. மூலவர் கருவறைக்கு இடதுபுறம் மிகவும் பிரசித்தி பெற்ற கல் கருடன் சன்னதி உள்ளது. இந்த கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும் . இந்த விழாவின் பொழுது நாலு டன் எடையுள்ள கல் கருடனை ஊர்வலமாக எடுத்து வருவார்கள்..
கல் கருடன் சிறப்பு: நாலு டன் எடையுள்ள கல் கருடனை முதலில் நான்கு பேரும் பின்னர் 8,16,32,64 பேர் தூக்கிக்கொண்டு வருவார்கள்.. இறுதியில் 128 தூக்குவார்கள்..வெறும் நாலு பேரால் பேரால் தூக்க முடிந்த கல் கருடனை கோவிலை விட்டு வெளியில் வந்தவுடன் 128 பேர் தூக்குவார்கள். .இந்த எண்ணிக்கை இல்லாவிட்டால் கருடனை தூக்க முடியாது. அதேபோல் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுதும் இந்த எண்ணிகை இதே போல் இறங்கு வரிசையில் இருக்கும்.
இந்த கல் கருடனுக்கு வீதி உலவும் பொழுது மனிதர்களுக்கு வியர்ப்பது போல வியார்க்குமாம்.. இன்றும் இந்த அதிசியம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இங்கு தாயாருக்கு தான் முக்கியத்துவம் என்பதால் கணவன் மனைவி இருவரும் சென்று குடும்பத்திற்காக மனைவி வேண்டிக்கொண்டால் வேண்டியது எதுவாயினும் நடக்கும்.
உங்கள் பயணம் இனிதே அமைந்து உங்கள் பிரார்த்தனைகள் எல்லாமே பூர்த்தியாகி பயமற்ற கவலை இல்லாத வாழ்கை வாழுங்கள். நானும் உங்களுக்காக மஹாபெரியாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்