Featured Posts

பெரியவா பார்வையில்-013


பெரியவா பார்வையில்-013

வாழ்க்கையில் நம்மையும்

அறியாமல் செய்யும்

அறியா பிழைகள்

மகா பாரத போர் முடிந்தவுடன் தர்மராகிய யுதிஷ்டர் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைக்கிறார். இந்த விருந்தில் ஊர் மக்கள் சாமானியர்கள் பணம் படைத்தவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

எல்லோரும் அவர்களுக்குள்ளயே பேசிக்கொள்கிறார்கள். இது போல் ஒரு விருந்து இதுவரை நடந்ததே இல்லை என்றும் இனிமேல் இந்த மாதிரி விருந்து நடக்கபோவதும் இல்லை என்று தருமரை பற்றி பெருமையாகப்பேசிக்கொண்டார்கள்.

தருமரின் சகோதரர்களும் மக்களின் அபிப்ராயத்தை வரவேற்கும் முகமாக எல்லோருமே ஆமோதித்தனர். இந்த பேச்சுக்களை கவனித்து கொண்டிருந்த கிருஷ்ணர் இதை இப்படியே விட்டால் கர்வம் தலைக்கு ஏறி விடும் இவர்களை கொஞ்ச தட்டியே வைக்க வேண்டும் ஒரு காரியம் செய்தார் கண்ண பகவான்.

ஒரு நாடகம் அரங்கேறுகிறது

பந்தி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் ஒரு கீறி உள்ளே புகுந்தது. அந்த கீரியின் பாதி உடல் தங்கத்தாலும் மீதி உடல் கீரியின் உடல் போலவே இருந்தது. அங்கு இருந்தவர்கள் எல்லோருமே இப்படிப்பட்ட கீரையை பார்த்து அதிசயித்தனர். அந்த கீறி பேச வேறு செய்தது.

என்ன பேசிற்று தெரியுமா?

இதிலெல்லாம் என்ன விருந்து.. குரு ஷேக்ஷிரத்தில் ஒரு உஞ்ச விருத்தி பிராமணன் ஒரு விருந்து வைத்தான். அங்கு சாப்பிட்டவர்களின் இலைகளில் விழுந்து புரண்டேன். என்னுடைய பாதி உடல் தங்கமாகி விட்டது.. மீதி உடலும் தங்கமாக வேண்டும் என்று உன்னுடைய விருந்து சாப்பிட்டவர்களின் இலைகளில் விழுந்து புரண்டால் மீதி இருக்கும் உடலும் தங்கமாகி விடும் என்று நினைத்து இங்கே வந்தேன்..

ஆனால் நீ கொடுத்த இந்த விருந்து அந்த உஞ்ச விருத்தி பிராம்மணன் கொடுத்த விருந்துக்கு எந்த விதத்திலும் ஒப்பாகாது. என்று சொல்லி முடித்து பெருமூச்சுடன் நின்று கொண்டிருந்தது,

இங்கு உஞ்சவிருத்தி என்றால் என்ன என்று உங்களுக்கு சொல்ல வேண்டும்

அந்த காலத்தில் வயல் வெளிகளில் அறுவடை காலங்களில் அறுவடை முடிந்த பின் அறுவடை செய்த நெற்பயிர்களை எல்லாம் மொத்தமாக எடுத்து செல்லாமல் சிதறிய நெல் தானியங்களை அந்த வயல் வெளிகளிலேயே குவித்து வைத்து விடுவார்கள்.

இந்த குவியல் ஏதற்கு என்றால் அணில் மற்றும் பறவைகள் வேதம் படித்த பிராமணர்கள் இந்த நெல் குவியல்களை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று உணவாக சமைத்து அந்த குடும்பமே சாப்பிடும். இது உஞ்சவிருத்தி என்றுஅந்த நாளில் அழைக்கப்பட்டது. நாளைடைவில் இந்த பயிர்களை குவித்து வைக்கும் பழக்கம் காணாமல் போனது..

பிறகு பிராமணர்கள் வாழும் அக்ராஹாரம் பகுதியில் இந்த மாதிரி உஞ்சவிருத்தி பிராமணர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொஞ்சம் அரிசியை பெற்று வீட்டிற்கு வந்து சமைத்து குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கொடுத்து விட்டு மீதியை தான் உண்டு காலத்தை கழிப்பார்கள்.

இங்கு நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.சாப்பிடுவதற்கு வழியில்லாமல் வீட்டிற்கு வந்து பிச்சை எடுப்பது போல் இல்லை இந்த உஞ்சவிருத்தி என்பது.. வேதம் படித்த பிராமணர்கள் இப்படி உஞ்சவிருத்தி எடுத்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் வழக்கம்.

இப்பொழுது தங்ககீரிக்கு வருவோம்.

தருமரும் அவர் சகோதரர்களும் அந்த தங்க கீரியை அழைத்து அந்த உஞ்சவிருத்தி பிராம்மணன் விருந்தில் அப்படியென்ன அதிசயம், எங்களை அங்கே அழைத்து செல் என்றார்கள்.. கீரியும் அழைத்து சென்றது. அங்கு சென்ற பிறகுதான் விவரம் புரிந்தது.

உஞ்சவிருத்தி செய்த சிறு அளவிலான தானியத்தில் குடும்பத்திலுள்ள அனைவருமே தங்கள் அன்றைய உணவை தாங்கள் சாப்பிடாமல் தர்மம் செய்து சாப்பிட வந்த பிராமணர்களுக்கு வயிறார உணவு படைத்தனர்.

இந்த விருந்தில் உச்சம் என்னதெரியுமா? விருந்து முடிந்த பின் அந்த ப்ராமண குடும்பமே அவர்களை வழியனுப்பி வைக்கும் பொழுது "நீங்கள் நாளையும் வாருங்கள். இதைவிட நிறைய உஞ்சவிருத்தி பண்ணி உங்களுக்கு இதை விட சிறப்பான விருந்து படைக்கிறோம் என்று வழியனுப்பி வைத்தார்கள்.

விருந்து கொடுத்தாகி விட்டது. ஆனால் அவர்கள் வயிற்றுக்கு தெரியுமா விருந்து வைத்ததால் இவர்கள் சாப்பிட வில்லயென்று. வயிறு பசித்தது. தண்ணீரை குடித்து விட்டு வயிற்றை நிரப்பி கொண்டார்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு கூட நாம் விருந்து படைத்தோம் என்ற எண்ணமே இல்லை.

இப்பொழுது அந்த பாதி தங்ககிரி சொன்னது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எது நல்ல விருந்து என்று சொன்னவுடன் தங்களுடைய ஆணவத்தையும் கர்வத்தையும் விட்டொழித்து மனிதத்தன்மையுடன் வாழ்ந்தர்கள். கண்ணனும் மகிழ்ந்தான்.இப்பொழுது புரிகிறதா

வலது கை கொடுப்பது

இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்களே!

அதன் அர்த்தமும் பொருளும் இதுதானோ ?

கொடுத்தேன் என்னும் எண்ணத்தையே

கொடுத்து விடுவது எவ்வளவு பெரியதர்மம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square