ஆன்மாவின் ஏக்கங்கள்

உங்கள் கவனத்திற்கு
ஆன்மாவின் ஏக்கங்கள் -புதிய தொடர் ஆரம்பம்
நம்முடைய அன்றாட வாழ்வில் எத்தனையோ விஷயங்களுக்கு ஏங்கும் நிலைமை தானே நம்மில் பலருக்கு. நாம் எல்லோருமே அன்றாடம் ஒரு விஷயத்திற்காவது ஏங்குவதுண்டு. அந்த ஏக்கங்களுக்கு ஒரு வடிகால்தான் ஆன்மாவின் ஏக்கங்கள் என்னும் புதியதொடர்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நமக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் பொழுது (Transformation) அந்த மாற்றத்தை சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் நம்மில் எல்லோருக்குமே இருக்கும்.
ஆனால் மற்றவர்களுக்கு அந்த மாற்றம் வரும்பொழுது நாம் அந்தமாற்றத்தை அங்கீகரிக்கிறோமா?. நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம். நாம் எல்லோருமே இரண்டு பக்கங்களிலுமே இருப்பதுண்டு.
ஆனால் உண்மை நிலையை யார் எடுத்து கூறுவது?. இந்த ஏக்கத்திற்கு தான் வடிகாலாக ஆன்மாவின் ஏக்கங்கள் பகுதி துவங்கப்பட்டுள்ளது . உங்கள் ஏக்கங்களையும் இந்தப்பகுதியில் பதிவு செய்யுங்கள்.உங்கள் ஏக்கங்களுக்கும் இது ஒரு வடிகாலாக இருக்கட்டுமே.
இந்த தொடர் இடம் பெறும் பகுதி நம்முடைய இணைய தளத்தின் நுழை வாயில் பகுதி. இணைய தளத்தின் கதவை திறந்து உள்ளே நுழையும் முன் ஆன்மாவின் ஏக்கங்களை படியுங்கள்.
நுழை வாயிலேயே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது. தவறாமல் படியுங்கள் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். முதல் பதிவு நேற்று இணைய தளத்தின் நுழை வாயிலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பதிவு ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வழக்கம் போல் உங்கள் ஆதரவையும் அன்பையும் இந்த இணைய தளம் நாடுகிறது.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்