மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-28-ருத்திரன் பாகம் –IV

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-28
ருத்திரன் பாகம் –IV
பிரதி திங்கட்கிழமை தோறும்
இந்த வார குரு பூஜை அற்புதங்களில் ருத்திரன் அவர்களது இரண்டு பிரார்தனைகளான மனைவியின் உடல் நலம் மற்றும் அவருடைய இரண்டாவது மகன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.மஹாபெரியவா மற்ற பிரார்த்தனைகளுக்கு அற்புதமான முறையில் பதில் கொடுத்து விட்டார்.மேலே கொடுக்கப்பட்ள்ள இரண்டு பிரார்த்தனைகளை பற்றி ருத்திரன் அவர்கள் என்னிடம் சொன்னதாவது.
"மாமா என்னுடைய மனைவிக்கு மனச்சோர்வு நோய் வந்து விட்டது. ஆங்கிலத்தில் டிப்ரஷன் என்று சொல்லுவார்களே அந்த நோய் தாக்கி விட்டது. இவருடைய இரண்டாவது மகனுக்கும் இதே நோய். இதனால் தான் அவன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த இரண்டு பேருக்கும் ஒரு தீர்வு வேணும் மாமா மஹாபெரியவளிடம் சொல்லி கொஞ்சம் சரி பண்ணச்சொல்லுங்கள் மாமா என்றார்.
நானும் சரி சார் கவலை பட வேண்டாம். மஹாபெரியவா நிச்சயம் குணப்படுத்துவார் என்றேன்.மறு நாள் மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்.
மறு நாள் காலையில் நான் மஹாபெரியவா முன் நின்று கொண்டு ருத்திரனின் பிரார்த்தனைகளை சமர்பித்தேன். விவரம் இதோ உங்களுக்காக.
"பெரியவா ருத்திரனின் பிரார்த்தனைகளுக்கு இது வரை அதிசியத்தக்க வகையில் நீங்கள் அனுக்கிரஹம் செய்தீர்கள். இப்பொழுது அவரது மனைவிக்கு சொல்லமுடியாத மன உளைச்சல்.இரண்டாவது மகன் சரியாக படிப்பதில்லை. அவன் கவனம் முழுவதும் வேறு எங்கோ இருக்கு பெரியவா.
இந்த இரண்டு பிராத்தனைகளுக்கு நீங்கள் தீர்வு கொடுத்தால் அந்த குடும்பமே மன நிம்மதியுடன் வாழ ஆரம்பிக்கும். கணவன் மனைவி இருவருமே வயதானவர்கள்.இப்பொழுது நீங்கள் ஒருவர்தான் அவர்களுக்கு நம்பிக்கை. கொஞ்சம் தயவு செய்து அந்த குடும்பத்திற்கு ஓர் தீர்வு சொல்லுங்கள் பெரியவா.
உங்கள் குரு பூஜை ஆரம்பித்த பிறகு தான் வீடு ஒரு கோவிலைபோல இருக்கிறது என்று ருத்திரன் அவர்கள் செல்லுகிறார்கள். என்று என் பிரார்த்தனையை முடித்து விட்டு நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரம் மௌனம். எனக்கு சற்று பயமாக இருந்தது.
சிறிது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா சொன்னார். " இத்தனை நாளும் அவாளுடைய பிரச்சனைகளே அவாளுக்கு மன உளைச்சலை கொடுத்தது. எல்லாம் சரியாகி போயிடும்.அவாளை ஒன்பது வார குரு பூஜை பண்ண சொல்லு. எல்லாம் சரியாகி விடும் என்றார். நானும் நன்றி சொல்லிவிட்டு மற்றவர்கள் பிரார்த்தனையை சமர்பித்தேன்.
மறு நாள் ருத்திரன் அவர்களை அழைத்து விவரத்தை சொன்னேன். அவரும் சரி மாமா நான் பூஜையை செய்யஆரம்பித்து விடுகிறேன் என்று விடை பெற்றார்.
முதல் வார பூஜை:
இந்தனை நாளும் வீட்டில் ஒரு அமைதி இன்மை. வாழ்க்கையை பற்றியஒரு பயம். சிந்தனையில் ஒரு தெளிவு இல்லை.எப்படி இருக்கும். நம்மை சுற்றி பிரச்சனைகளே இருந்தால் தன்னம்பிக்கை கூட குறைந்து விடும்.
ஆனால் ருத்திரன் அவர்கள் பூஜை ஆரம்பித்த முதல் வாரத்திலேயே வீட்டில் ஒரு இறைத்தன்மை நிறைந்து விட்டதை உணர்ந்தார். இறை அதிர்வுகள் வீட்டில் ஏற்பட ஆரம்பித்த உடனே ருத்திரன் அவர்களின் மனைவியின் மனதில் மஹாபெரியவா கோவில் கொள்ள ஆரம்பித்து விட்டார். டிப்ரெஷன் நோய் வெளிச்சத்தை காண ஆரம்பித்தது.
ருத்திரன் அவர்களின் இரண்டாவது பையனும் படிப்பில் கவனம் கொள்ள ஆரம்பித்தான். ருத்திரன் குடும்பத்தாரின் இரண்டு பிரார்த்தனைகளும் விடை காண ஆரம்பித்தன.
இரண்டாவது வார பூஜை:
இந்த வாரத்தில் மேலும் பல முன்னேற்றங்கள். மனைவியின் மனநோய் ஒரு தெளிவான திசையில் முன்னேற்றம் காண ஆரம்பித்தது. இத்தனை நாளும் எதிலும் ஈடு படாத மனம் இப்பொழுது தன்னுடைய ஈடுபாட்டை காட்ட ஆரம்பித்தது.
இவருடைய இரண்டாவது மகனும் நன்றாகவே படிக்க ஆரம்பித்தான். வகுப்பு தேர்வுகளில் கூட நல்ல மதிப்பெண்கள் பெற ஆரம்பித்தான். ருத்திரன் அவர்களுக்கும் மனதில் முழு நம்பிக்கை பிறந்தது.வாழ்க்கையிலும் நம்பிக்கை பிறந்தது.
மூன்றாவது வார பூஜை :
இத்தனை நாளும் தன்னுடைய இரண்டாவது மகன் படிப்பா அல்லது அவனது அம்மா மன நோய்க்கு தீர்வா என்ற தவிப்பில் இருந்தார் ருத்திரன் அவர்கள். இத்தனை நாளும் வியாதியும் கவலைகளும் நிறைந்த வாழ்க்கையாக இருந்தது. இப்பொழுது முன்றாவது வார பூஜையில் வீடு ஒரு கோவிலை போல் மாறியது. மனைவியின் மன நோய் குணமாகிக்கொண்டு வருகிறது.
மொத்தத்தில் எல்லா வகையிலும் முன்னேற்றம் காணப்படுகிறது என்றார். எனக்கும் மஹாபெரியவா ருத்திரன் அவர்களின் வாழ்க்கையில் கண்ணை திறந்து ஆசீர்வாதம் செய்துகொண்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தது.
நான்காவது வார பூஜை முதல் ஆறாவது வார பூஜை வரை:
இந்த மூன்று வார பூஜை ருத்திரன் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அவர் என்னிடம் கேட்டார். மாமா கலியுகத்தில் இப்படியும் நடக்குமா. இத்தனை நாளும் கோவில் குளம் என்று அலைந்தது தான் மிச்சம்.ஒரு முன்னேற்றமும் என்னால் காண முடியவில்லை.
ஆனல் மஹாபெரியவா குரு பூஜை ஆரம்பித்த அடுத்த விநாடியிலிருந்து முன்னேற்றம் மட்டுமே காண முடிகிறது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் என்றார். நான் சொன்னேன் உங்கள் நன்றியை மஹாபெரியவாளிடம் சொல்லுங்கள்.
நான் உங்களுக்கும் மஹாபெரியவாளுக்கும் இடையே இருக்கும் தூதன் அவ்வளவுதான். உங்கள் கவலைகள் அகன்றால் நான் சந்தோஷப்பட மட்டுமே பட முடியும். நம் இருவருக்குமே மஹாபெரியவா தான் என்றும் சாஸ்வதம் என்றேன்.
ஏழாவது வார பூஜை:
ருத்திரன் என்னிடம் சொன்னார். கடந்த மூன்று வார காலம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழ்கிறோம். இந்த ஒரு நிம்மதி எங்களை பொறுத்தவரை இத்தனை நாளும் ஒரு பகல் கனவாகவே இருந்தது.
மஹாபெரியவா குரு பூஜைக்கு அப்புறம் தான் எங்களின் கனவுகள் ஒவ்வொன்றாக நினைவுகளாக மாறிக்கொண்டு வருகின்றன. மஹாபெரியவாளையும் உங்களையும் காலம் இருக்கும் வரை நாங்கள் மறக்கக் மாட்டோம் என்றார்கள்.
நான் சொன்னேன் நீங்கள் எந்த காலத்திலும் மஹாபெரியவாளை மறக்க கூடாது. என்னை விடுங்கள் நம் உங்களை போன்ற பக்தர்களில் ஒருவன். காற்றில்பறந்து கொண்டிருந்த குப்பை காகிதம். எனக்கென்று இருக்கும் ஒரே அடையாளம் தான் மஹாபெரியவா.
நீங்கள் எல்லோரும் குரு பூஜை செய்து பயமற்ற நிம்மதியான வாழ்கை வாழ்ந்தால் உங்களை விட எனக்கு சந்தோஷம். நீங்கள் நன்றாக இருக்கனும். வளமுடன் வாழுங்கள்.என்று ஆசிர்வதிதேன்.
எட்டாவது வார பூஜை:
ருத்திரன் அவர்களின் சந்தோஷம் குறைவதாகவே தெரியவில்லை.அவருடைய பேச்சில் ஒரு தெளிவும் செயல்களில் ஒரு தன்னம்பிக்கையும் இருப்பதை என்னால் உணர முடிந்தது, ஏனென்றால் ருத்திரன் அவர்களை முதலிலும் பார்த்தேன் இப்பொழுதும் பார்த்து கொண்டிருக்கிறேன்.
மொத்தத்தில் குடும்பமே எங்களுக்கு நிகரில்லை என்பது போல் சந்தோஷமாக இருந்தனர். முதல் மகனின் திருமணம். இரண்டாவது மகனின் படிப்பு. மனைவிக்கு மன நோயிலிருந்து விடுதலை. அதுவும் நம்பிக்கை இழந்து கடலில் திளைத்து கொண்டிருந்த பாய் மரக்கப்பல் போன்று இருந்த குடும்பம்.
இன்று புயல் காற்றிலும் மஹாபெரியவா என்னும் பக்தி நங்கூரத்தை பாய்ச்சிய கப்பல் போல் உறுதியாக நின்று கொண்டிருக்கிறது. மஹாபெரியவா சரணம்.
ஒன்பதாவது வார பூஜை:
இந்த வார பூஜையை முடித்து கொண்டு என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டார்கள். குடும்பமே என்னை நேரில் பார்க்க வேண்டும் ஆவலாய் இருப்பதாக சொன்னார்கள். உங்கள் வீட்டிற்கு இன்று மாலை வரலாம் என்று இருக்கிறோம் என்று சொல்லி என் அனுமதியை கேட்டார்கள்.
என் வீட்டிற்கு வருவதற்கு ஏதற்கு அனுமதி, நான் ஒரு மஹாபெரியவா பக்தர், நீங்களும் என்னை போல் ஒரு பக்தர். அவசியம் வாருங்கள். உங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியே. என்றேன்.இவர்கள் வருகையை ஒட்டி நான் என்னுடைய மாலை அனுஷ்டானங்களை சற்றே மாற்றி அமைத்து கொண்டு அவர்களுக்கு நேரம் ஒதுக்கினேன்.
அன்று மாலை ருத்திரன் அவர்களது குடும்பமே மாலை ஏழு மணி சுமாருக்கு என் வீட்டிற்கு வந்தார்கள். அந்த குடும்பத்தில் ஒட்டு மொத்த மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது. அந்த குடும்பத்தையே மஹாபெரியவா என்னும் பக்தி கயிறு கட்டிப்போட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
ருத்திரன் அவனது பேச்சிலும் உடல் மொழியிலும் அவர் ஒரு விமானபோக்குவரது அலுவலகத்தின் மேலாளர் என்பது தெளிவாக தெரிந்தது. ருத்திரன் அவர்களின் மனைவியை பார்த்தால் மஹாலக்ஷ்மியை போன்றஒரு தோற்றம்.
இந்த நேரத்தில் எனக்கு ஒன்று புரிந்தது
மனம் அமைதியாக இருந்தால்
வாழ்க்கையில் யுகப்பொழுது கூட நொடிபொழுதுதான்
நிம்மதியற்ற மன நிலையில்
இருந்தால் நொடிபொழுது கூட யுகப்பொழுதுதான
எல்லோர் வாழ்க்கையும் இதற்கு ஒரு சான்று
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்