Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-045


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-045

பிரதி புதன் கிழமை தோறும்

C.P.M.G ஜெயராமன் மாமா & மாமி

ஜெயராமன் மாமா கல்லூரி படிப்பு முடிந்து ஒரு வங்கியில் வேலையில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். பணியாற்றிக்கொண்டே I.R.S. என்னும் மத்திய அரசாங்கத்தின் தேர்வு எழுதி தபால் துறையில் சேர்ந்து தன்னுடைய கடின உழைப்பால் பெரிய பதவியான தபால் துறையின் தலைவராக பதவி உயர்வு உயர்வை அடைந்து ஒய்வு பெற்றார். மஹாபெரியவாளை கேட்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டார். மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர்.

ஜெயராமன் மாமா தன்னுடைய கல்லூரி நாட்களில் இருந்தே மஹாபெரியவாளின் பக்தி மழையில் நனைந்து கொண்டு இருக்கும் பெரிய பாக்கியத்தை பெற்றார். மாமாவின் பெற்றோர்கள் தாத்தா பாட்டிகள் எல்லோருமே மஹாபெரியவாளின் பக்தர்கள்..மாமாவிற்கு கிடைத்திருக்கும் மஹாபெரியவா அற்புத அனுபவங்கள் ஏராளம். அவற்றில் ஒரு சிலதை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்.

இந்த பதிவில் இரண்டு பாகங்கள் உள்ளன. இரண்டிலுமே உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அற்புத நிகழ்வுகள் ஏராளம். தவறாமல் இரண்டு பாகங்களையுமே பாருங்கள்.

மஹாபெரியவாளுக்கு குழந்தைகள் மேல் இருக்கும் வாஞ்சை ,தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு காட்டும் கருணை, வரும் பக்தர்களின் மனதில் உள்ளதை படித்து அவர்களுக்கு கேட்காமலேயே அருள் பாலிக்கும் தன்மை, பொன் பொருள்களை உதாசீனப்படுத்தும் குணம் இன்னும் எண்ணற்ற மஹாபெரியவா பரிமாணங்களை அனுபவித்து மகிழலாம்.

விநாயகரும் மஹாபெரியவாளும்:

மஹாபெரியவா சென்னையில் மைலாப்பூரில் முகாமிட்டிருக்கும் பொழுது மாடவீதி வழியாக நடந்து வருவாராம். அப்பொழுது அங்கு ஒவ்வொரு தெரு முனையிலும் சிறு விநாயகர் அமர்ந்திருப்பார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

அப்படி மஹாபெரியவா நடந்து வரும்பொழுது விநாயகருக்கும் தனக்கும் மூன்று அடி தூரம் இருக்கும் பொழுதே தன்னையும் அறியாமல் கால்களில் உள்ள பாதகொறடு (காலணி) தானே கழன்று விடும் அதிசயத்தை கேட்டு மகிழுங்கள் .

அற்புதம்

மாமாவின் முதல் குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. அப்பொழுது மிக அதிகமாக காய்ச்சல் இருந்தபடியால் மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்தார்கள். மருத்துவரும் மருந்து கொடுத்தார்.

காய்ச்சலும் இறங்கவில்லை. உடல் முழுவதும் தடித்து புண்ணாகி விட்டது. அதே நாளில் சென்னையில் மட்டும் அந்த மருந்தினால் ஏராளமான குழந்தைகள் இறந்து விட இந்தக்குழந்தையை எடுத்துக்கொண்டு மஹாபெரியவாளிடம் ஓடினார்கள்.

மஹாபெரியவா ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போகலாம் என்றவுடன் வீடு திரும்பி விட்டார்கள் வீடு திரும்புவதற்குள் குழந்தை காய்ச்சலும் இறங்கி விட்டது. உடல் முழுவதும் தடித்திருந்த புணங்களும் மறைந்து விட்டன.. இதை என்னவென்று சொல்வது. ஒரு பார்வை குழந்தையை காப்பாற்ற முடியும் என்றால் அதற்கு பெயர் சிகிச்சையா இல்லை இறை அற்புதமா.

சிவ ஸஹஸ்ரநாமம் மஹிமை:

இல்லத்தில் சிவ ஸஹஸ்ரநாமம் ஜெபித்தால் கணவன் மனைவிக்கு நடுவேயிருக்கும் பூசல்கள், இரண்டு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பூசல்கள், இரண்டு ஊர்களுக்கு இடையே இருக்கும் பூசல்கள் இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் பூசல்கள் எல்லாம் சரியாகி விடும். இது மஹாபெரியவா வாக்கு.

இன்று புரிதலின்மையும் பூசல்களும் இருக்கும் சூழ்நிலையில் சிவ சஹஸ்ர நாமத்தின் மஹிமையை தெரிந்துகொண்டு ஜெபித்து இனிமையாக உறவுகளுடன் வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் அர்த்தம் புரியம். இதை பற்றிய சிறு தொகுப்பையும் இந்தக்காணொளியில் காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=RpNU4bxIo-4 – Part-1

https://www.youtube.com/watch?v=dLPpOsnPPeQ part-2

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square