திவ்ய தேச திருத்தலம் திருஇந்தளூர் -மாயவரம்
திவ்ய தேச திருத்தலம்
திருஇந்தளூர் -மாயவரம்

பரிமள ரங்க நாதர் பள்ளிகொண்ட பெருமாள்
திரு இந்தளூர் ஸ்தல வரலாறு
நூற்றி எட்டு வைணவ திருத்தலங்களில் ஸ்ரீமன் நாராயணனை மையமாக கொண்டு எழுப்பப்பட்ட கோவில் திருஇந்தளூர். .மயிலாடுதுறை அருகில் உள்ளது இந்த திருஇந்தளூர். இந்த கோவில் கட்டப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் புனரமைக்கப்பது சோழர்கள் காலத்திலும் விஜயநகர பேரரசு மன்னர்களும் பிறகு மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களும் சேர்ந்து திருப்பணிகள் செய்தனர்.

பெருமாள் தாயாருடன்
காலை ஐந்தரை மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை ஆறு கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள பரிமள ரங்கநாதர் இங்கு தான் சந்திரனுக்கு காட்சி கொடுத்தாராம். தமிழில் இந்து என்றால் சந்திரன் என்று பெயர். சந்திரனுக்கு காட்சி கொடுத்ததால் இந்த ஸ்தலம் திரு இந்தளூர் என்று அழைக்கப்படுகிறது.

ரங்கநாத பெருமாள்
ஒருமுறை திருமங்கை அழவார் வந்த பொழுது கோவில் கதவுகள் அடைக்க பட்டிருந்தன. திருமங்கை அழவார் எவ்வளவு பாடியும் கோவில் கதவுகள் திறக்கப்படவே இல்லை. ஒரு சமயத்தில் கோபமடைந்த அழவார் இந்த கோவிலை நீயே வைத்து கொள் என்று சொல்லி திரும்ப நடக்க ஆரம்பித்தவுடன் கோவில் கதவுகள் தானாக திறந்து கொண்டதாம்.
மூலவர்: இங்குள்ள பெருமாள் பரிமள ரசங்கநாதர் பன்னிரண்டு அடி நீளத்தில் பச்சை நிற கல்லால் ஆனவர்
தாயார்:இங்குள்ள தாயார் பெயர் பரிமள ரங்கநாயகி. இந்த தாயாருக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. சந்திர சாப விமோசன வள்ளி என்றும் ஒரு பெயருண்டு.

பரிமள ரங்கநாதர் கோவில் குளம்
உங்கள் பிரயாணம் இனிதே அமையவும் உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறி உங்கள் வாழ்க்கையில் குறையாத செல்வமும் இறை அருளும் பெருகட்டும் என்று மஹாபெரியவாளை நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்