Featured Posts

ஆன்மாவின் ஏக்கங்கள் – 3 நீங்கள் நல்லவரா? கெட்டவரா ?


ஆன்மாவின் ஏக்கங்கள் – 3

நீங்கள் நல்லவரா? கெட்டவரா ?

நம் சமுதாயத்தில் தெரிந்தோ, தெரியாமலோ நம்மில் பலர் ஒரு பாவத்தை செய்து கொண்டிருக்கிறோம்.ஒருவரை பற்றி அதுவும் அவர் எதிரே இல்லாத பொழுது அவரை கெட்டவர் என்று முத்திரை குத்தி விடுகிறோம். அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?

ஒருவர் எதிரே இல்லாதவரை பற்றி பேசும் பொழுது அவர் ஒரு நிராயுதபாணி. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று அவருக்கு தெரியாது. நீங்கள் என்ன பேசினீர்கள் என்று தெரியாவிட்டால் அவர் எப்படி தன்னுடைய எதிர்வாதத்தை சொல்ல முடியும்.

ஒரு நல்லவரை நீங்கள் கெட்டவர் என்று சொல்லிவிட்டால் அது இன்னும் எவ்வளவு பெரிய பாவம். அந்த நல்லவரின் ஆத்மா நீங்கள் சொன்னதை கேட்டு துடிக்கிறது என்றால் அந்த துடிப்பு இறைவனையும் சென்றடைந்து இறைவனையும் துடிக்க வைக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனின் ஒரு அங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். தயவு செய்து பாவங்களை செய்து இறுதியில் பாவ மூட்டைகளை சுமந்து செல்லாதீர்கள்.

மேலும் ஒருவரை கெட்டவர் என்று சொல்வதற்கு முன்னால் உங்களையே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். "மற்றவர்கைளை கெட்டவர் என்று சொல்வதற்கு முன் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் மனசாட்சியை சாட்சியாக வைத்து நீங்கள் உங்களுக்கு நீங்களே நான் நல்லவன் என்று முத்திரை குத்திக்கொள்ள முடியுமா? . நீங்கள் ஆண்டவனாக இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. சத்தியமாக எதுவும் தெரியாமல் போகிற போக்கில் இவன் நல்லவன் அவன் கெட்டவன் என்று சொல்லாதீர்கள்.

சென்ற நொடி வரை கெட்டவன் என்று பெயர் எடுத்தவன் அடுத்த நொடியில் இருந்து தனக்குள் ஒரு மாற்றம் கண்டு நல்லவனாக மாறி விடலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்லவனும் இருக்கிறான்! கெட்டவனும் இருக்கிறான்!. நாம் ஏதற்கு தீனி போட்டு வளர்கிறோமோ நாம் அதுவாக ஆகிறோம்.

வாழும் வரை எண்ணங்களில் ஒரு தெளிவும் ஆரோக்கியமும் சொற்களில் கடுமை இல்லாமலும் செயல்களில் புனிதத்தையும் கொண்டு வாழ்ந்து உடலில் இருந்து ஆத்மா பிரியும் பொழுது வாழ்ந்த சந்தோஷத்துடன் பிரியட்டும்.

மேலே குறிப்பிட்ட வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தால் உங்கள் மேலயே உங்களுக்கு ஒரு தனிப்பட்ட மரியாதை வந்து விடும்.வாழும் வாழ்க்கையை நல்ல முறையில் புனிதமாக வாழ்ந்து விட்டு இறைவன் திருவடிகளை அடைவோம்..

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square