Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-29 பாகம் -1 மைதிலி


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-29

பாகம் -1- மைதிலி

பிரதி திங்கட்கிழமை தோறும்

அறிவியலை கையாளும்

ஆன்மீகம்

மைதிலி ஒரு மென்பொருள் பொறியாளர்.. பிராம்மண குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோர்கள் ஒரு ஊரிலும் மைதிலி ஒரு ஊரிலும் வசிக்கிறார்கள்.. விலைவாசி இருக்கும் நிலையில் ஒரு குடும்பத்தில் இருவர் சம்பாதித்தால் தான் நல்ல முறையில் குடும்பத்தை காலம் தள்ள முடியும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடுதானே ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றனர்.திருமணத்திற்கு முன்பே வீடு வாங்க வேண்டும். கார் வாங்கவேண்டும் என்ற கனவுகள். திருமணத்தின் போது கணவருக்கு இணையான சம்பளம் என்று மனைவியும் மனைவிக்கு இணையான சம்பளம் என்று கணவரும் ஒரு கொள்கை முடிவில் இருக்கிறார்கள்.

கணவனும் மனைவியும் சேர்ந்தது தான் வாழ்கை என்று நமக்கு நம் முன்னோர்கள் சொல்லி வளர்ந்திருந்தாலும் இன்றைய நாளில் கணவன் மனைவி இருவருமே தங்களுடைய காலில் நிற்கவேண்டும். சார்ந்து வாழும் வாழ்க்கை என்றுமே அமைதியின்மைக்குத்தான் வழிவகுக்கும் என்பது இன்றைய நிலையில் ஓர் அனுபவ உண்மை.

நானும் எத்தனையோ பெண் பிள்ளைகளிடமும் ஆண் பிள்ளைகளிடமும் அவர்களது குடும்ப பிரச்சனைகளுக்கு அவர்களிடம் தனித்தனியே ஆலோசனை செய்திருக்கிறேன். மஹாபெரியவா அனுகிரஹத்தால் நான் சொல்லும் அறிவுரைகளுக்கும் என் சொல்லுக்கும் மரியாதை கொடுத்து இருவரும் மனம் ஒத்துபோய் இன்று குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு தங்களுக்கு ஈடு இணை இல்லை என்பது போல் வாழ்ந்து வருகிறார்கள். இதுவும் மஹாபெரியவா அனுகிரஹத்தால் மட்டுமே சாத்தியப்படுகிறது.

நான் சொல்லும் வார்த்தைகள் சபையேறும் பொழுது பெற்றோர்கள் சொல்லும் வார்த்தைகள் குழந்தைகளிடமும் குழைந்தைகள் சொல்லும் வார்த்தைகள் பெற்றோர்களிடத்திலும் ஏன் எடு படவில்லை.இதற்கு இரு தரப்பிலும் ஒரு புரிதல் இல்லாமைதான் காரணம். இந்த புரிதலின்மையை பற்றி வரும் வாரங்களில் காண்போம். இப்பொழுது மைதிலியை பற்றி சில வரிகள்..

நாயகி மைதிலியை பற்றி ஒரு சில வரிகள்:

மைதிலி இன்றைய நாகரீகத்தில் வளர்ந்த குழந்தை என்றாலும் எல்லா விதத்திலும் ஒரு மாறு பட்ட குழந்தை.என்ன தான் இன்றைய சூழலில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய தனித்தன்மையை இன்றைய நாகரீகம் பாதிக்காத வகையில் தன்னை பாதுகாத்து கொள்வதில் மிகவும் கவனமாக இருக்கிறாள்.

ஆம் மைதிலி ஒரு பயந்த சுபாவத்தை கொண்ட பெண்.தன்னுடைய பெற்றோர்களுக்கு எந்த விதத்திலும் தன்னால் ஒரு கஷ்டமோ மன வருத்தமோ வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். மைதிலி ஒரு மென் பொறியாளராய் இருந்தாலும் தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு இருக்கிறாள். அவைகள் என்னென்ன தெரியமா?

  • இந்து மதத்தின் பழமையையும் நாகரீகத்தையும் ஆங்கிலத்திலும் மற்றும் ஒரு அந்நிய மொழியிலும் மொழி பெயர்த்து வரும் தலை முறையினருக்கு தன்னுடைய சீதனமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்

  • இன்றைய குழந்தைகள் பெற்றொர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் கொடுக்க தன்னுடைய புத்தகம் மூலம் கொடுக்க முயன்று கொண்டிருக்கிறாள்.

மொழிகளை பற்றிய மைதிலியின் சிந்தனைகள்:

வேற்று மொழிகள் எல்லாம் உணவை மையமாக வைத்து தோன்றியவைகள். ஆனால் நம்முடைய தமிழ் மொழி மட்டும் தான் உணர்வை மையமாக வைத்து தோன்றியது என்று வாதிடுகிறாள்.

மைதிலியின் வாழ்க்கையை பற்றிய சிந்தனைகள்

வாழ்க்கை என்றாலே சோதனைகளும் வேதனைகளும் நிறைந்தது தானே. ஆனால் அவள் சொல்வது என்னவென்றால் "உண்மை தான். ஆனால் எந்த சோதனையிலும் வேதனையிலும் நியாயமும் நேர்மையும் தர்மமும் தோற்று விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் " என்கிறாள்.

என் பார்வையில் மைதிலி:

என்னை பொறுத்த வரை மைதிலி ஒரு பாரதி கண்ட புதுமை பெண் தான். ஆனால் அதே சமயத்தில் பெற்றோர்கள் காண விரும்பும் ஒரு செல்லக்குழந்தையாகவும் பாசமுள்ள ஒரு பெண்ணாகவும் இருக்கிறாள்.

மைதிலியயை பொறுத்த வரை அம்மா உணவை ஊட்டி வளர்த்திருக்கிறாள். அப்பா உலகை காட்டி வளர்த்திருக்கிறார்.ஆம் இரண்டின் கலவையாகத்தான் மைதிலி எனக்கு தெரிகிறாள். ஏன் தெரியுமா. மைதிலியின் பார்வையில் தாயும் தந்தையும் அனுபவங்களின் பொக்கிஷங்கள் என்பதுதான்.

இனி மைதிலியின் குரு பூஜை அற்புதங்களை பற்றி அனுபவிப்போம். மைதிலி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்க்கிறாள்.மைதிலியின் குரு பூஜை பிராத்தனைகள் என்னென்ன தெரியுமா?

முதல் பிரார்த்தனை:

தன்னுடைய அலுவலகத்தில் இரண்டு வருடங்களாக வேலை பார்த்து பாதுகாத்து வைத்திருந்த ரகசியங்களும் மற்ற தஸ்தாவேத்துக்களும் கணினியில் இருந்து காணாமல் போய் விட்டது. இது திருட்டு அல்ல. கணினியில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது.

இது கிடைக்கவில்லையென்றால் வேலையே போய் விடும், இது கிடைக்க வேண்டும்.இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. முதல் பிரார்த்தனை இந்த கணினி கோளாறையும் தாண்டி கிடைக்க வேண்டும்.

இரண்டாவது பிரார்த்தனை:

மனதில் எந்த நேரமும் ஒரு பயம் குழப்பம் தைரியமின்மை எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க இயலாத நிலை. இது மாறவேண்டும். பேய் பயம் முற்றும் அகல வேண்டும்

மூன்றாவது பிராத்தனை :

தன மனதுக்கு பிடித்த நல்ல கணவன் தன்னை மணக்க வேண்டும்.

முதல் பிரார்த்தனை:

கடந்த இரண்டு வருடங்களாக ஒரு நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் மைதிலி வேலை பார்க்கிறாள். பன்னாட்டு நிறுவனம் என்றாலே வேலைப்பளுவிற்கு பஞ்சமில்லை. ஆனால் அதற்கு தகுந்தாற்போல் சம்பளமும் தருவார்கள். நேரம் காலம் பார்க்க முடியாது. இப்படிப்பட்ட நிறுவனத்தில் நல்ல முறையில் வேலை பார்த்து வருகிறாள் நம்முடைய நாயகி.

நன்றாக சென்று கொண்டிருந்த வேலையில் ஒரு சிக்கல். தன்னுடைய கணினியில் சேமித்து வைத்திருந்த ரகசியத்தகவல்கள் எல்லாம் தீடீரென்று காணாமல் போய் விட்டது. யாரிடம் சொல்வது. யாரிடம் சொன்னாலும் வேலை போய் விடும்.

அந்த சமயத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் குரு பூஜை அற்புதங்களை பார்த்து விட்டு என்னை தொலைபேசியில் அழைத்தாள். மேற் கூறிய விவரங்கள் அனைத்தையும் என்னிடம் சொன்னாள். அவள் சொல்லிய விவரங்களின் அடிப்படையில் இன்னும் நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் அந்த விவரங்களை அலுவலக மீட்டிங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

நானும் அவளுடைய அவசரம் கருதி மஹாபெரியவாளிடம் எடுத்து சொல்லி குரு பூஜைக்கு உத்தரவு வேண்டினேன். மஹாபெரியவாளும் உத்தரவு கொடுத்து விட்டார்..

அடுத்த நாளே நான் மைதிலிக்கு குரு பூஜை உத்தரவு பற்றி எல்லாம் சொல்லிவிட்டு அந்த வாரத்தில் இருந்தே ஆரம்பிக்கச்சொன்னேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் இரண்டு வருட விவரங்களும் அலுவலகத்திற்கு கொடுத்தாக வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் கழித்துதான் குரு பூஜை ஆரம்பிக்க வேண்டும். அதற்குள் என்ன செய்வது. நான் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டினேன்:

“பெரியவா இந்த பக்தை பெயர் மைதிலி.. இவள் ஒரு மென் பொறியாளர். அப்பா அம்மா வேறு ஊருல இருக்கா. ரொம்பவும் பயந்த சுபாவம்..இவள் தன்னுடைய ஆபிஸில் இரண்டு வருட ரகசியங்க