Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம் செந்தூர் வேலவனிடத்திலே அருட்திரு அருணகிரியார் மணமாலை வேண்டிப் பாடிய திருப்புகழ் சந்தத்திலே அமைந்துள்ளதாம் ஸ்ரீமஹாஸ்வாமிகளின் மேல் போற்றிப் பாடுவதாக அமைந்துள்ள இந்த குருப்புகழ். அன்புச் சகோதரி ஒருவர் இன்றைய தினம் மணமாலை வேண்டி ஓர் குருப்புகழைப் பாடிடக் கேட்டார்கள். அதன்பொருட்டே இந்தப் பகிர்வு. வேலவனிடத்திலே வேண்டுதல் வேண்டியிருந்த்து; அவன் தெய்வக்குழந்தை அல்லவோ! ஆனால் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான நம் மஹாபிரபு மனிதவுரு கொண்டு பூவுலகுக்கு வந்ததே அருள்வதற்காகவன்றோ! எனவே மணமாலை வரத்தினைத் தருவதற்காகவே அவதரித்துள்ளாயே என்பதாகப் போற்றுவது தாமே சிறப்பும் கூட! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... #குருப்புகழ் #விவாகப்ராப்தம் #மணமாலைவேண்டல் அறம்போற்றி வாழு மனகோயில் நின்ற அதிஞானந் தவழு …………………. மதிபோல சிவனார்த மருளி லுதித்தோனின் ஞான வழிவாடை நின்ற ……………………… ஒளிபோல திகழ்ஞான பொருளை தரமேற்க வருளு மிகையான தவசி ………………………. குருவாகி திருக்காஞ்சி தனிலு முறையோ னெனவு மறையோ னுருவி ………………………. லுதித்தோனே புகழ் ஞானபீட சிவஞான முன்னை துதிபோற்றி தொழுது ………………….. அருளேற்க திரை யூருமிங்கு பதம்நாடு மெங்கள் இறை யோனுன்பாதம் …………………….. சரண்புகுந்தே வரும் துன்பம்யாவும் களைந்தேற்கு வழியு மிசைந்தே யுரைத்த …………………….. பெருமானே அணி மாலைதந்து குறைதீர்க்க வந்த திருப்பாதம் கொண்ட ……………………… குருநாதா! இந்தக் குருப்புகழ் மூலமாக நாம் வேண்டுவதாவது, தர்மம் பிசகாமல் வாழ்கின்ற மனமே இறைவன் உறையும் தலம் என்பர்; அப்படியாக உள்ள கோவிலினிலே ஞானஸ்வரூபமான குளிர் நிலவு போலே, அந்த பரமேஸ்வரனுடைய அருளினாலே உதித்த ஞான குருபீடத்தின் வழி வந்த ஒளியே! எம்மை வளமோங்கச் செய்கின்ற ஞானமெனும் அதியற்புதப் பொருளை வரமாகத் தரும் மா'தவனான நீரே குருவாகி, திருக் காஞ்சித் தலத்தினிலே உறைபவனாகிய வேதத் தெய்வமாக உருவெடுத்தவரே! திரைபுகழும் ஞானபீடமான ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலாம்னாய சர்வக்ஞ பீடத்திலே எம்முடைய ஆசார்யனாக அவதரித்த சிவஞானமாகிய உம்மைப் போற்றித் தொழுது அருள் பெற புவியிலே பிறந்த நாங்கள் ஒவ்வொருவரும் உமது பாதாரவிந்தத்தை சரண் அடைகிறோம். எங்களுக்கு வருகின்ற துன்பங்கள் யாவையும் களைந்தோட வழி அருளி சந்ததம் உரைத்த பெருமானே! எங்களுக்கு மிக அத்தியாவசியமான வரமான விவாகப் பிராப்தத்தைத் தந்து குறை தீர்க்க வந்த கமலபாதமுடிய குருநாதா! எனப் போற்றுகையில், என்ன வேண்டும் என்பதையும், அதைத் தா என்பதையும் சொல்லாமல் சொல்லி வேண்டிட முயற்சிப்போமே! குருவானவருக்கு நமக்கு என்ன எப்பொழுது எப்படியாகத் தரவேண்டும் என்பது சிறப்பாக அறிந்தவொன்று தானே! நம் தாத்தா; அவரிடம் நமக்கு வேண்டியதை செல்லமாக ( நிச்சயமாக வேண்டும்.. தாருங்கள் ) என்பதை அழுத்திச் சொல்வததில் குறையொன்றுமில்லை தானே! கதியே அவர் தான்; அவரிடத்திலே வேண்டுவதை விட வேறு வழியேது நமக்கும்? குருவடி பணிந்து மனதார பிரார்த்தித்தால் கிட்டாததுவும் ஏதுமுண்டோ இவ்வுலகில்..?!!! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts