Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-050


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-050

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

மஹாபெரியவாளின் அற்புதங்களை அனுபவித்து வந்த நமக்கு ஒரு மாறுதலுக்காக மஹாபெரியவாளின் சௌலப்யம் மற்றும் ஹாஸ்யம் போன்ற குணங்களையும் இந்தப்பதிவில் அனுபவிப்போம்.

கும்பகோணம் அருகில் ஒரு அக்ராஹாரத்தில் மஹாபெரியவா முகாமிட்டுருந்தார். அப்பொழுது மஹாபெரியவா ஒரு வாலிப சன்யாசி. அப்பொழுதில் இருந்தே மஹாபெரியவா அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து விடும் பழக்கம் இருந்தது.

தான் முகாம் இட்டிருக்கும் வீட்டிற்கு எதிர்புறம் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெரியம்மா காலை நான்கு மணியில் இருந்தே வெளியில் வருவதும் திரும்ப வீட்டிற்கு உள்ளேயும் சென்று கொண்டிருந்தாள். வழக்கமாக வரும் பால்காரன் நேரமாகியும் வரவில்லை.

பெரியம்மா ஒரு முடிவாக வாசலில் பால் வாங்கும் பாத்திரத்தை வைத்து விட்டு வீட்டிற்குள் செண்டு விட்டார். பெரியம்மாவின் காபி குடிக்கவேண்டும் என்ற தாகம் நன்றாகவே புரிந்தது மஹாபெரியவாளுக்கு.

ஒரு வழியாக பால்காரன் வந்தான். வைத்திருந்த பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு சென்று விட்டான். மஹாபெரியவாளுக்கு ஒரு பயம். அந்த பாலை பூனை குடித்து விட்டால் பெரியம்மா காபிக்கு திணறுவாளே என்றஎண்ணத்தில் தானே வெளியில் வந்து பெரியம்மா வீட்டிற்கு வந்து பாத்திரத்தில் இருந்த பாலை ஹாலில் இருந்த ஊஞ்சலில் வைத்து விட்டு வெளியில் வந்து விட்டார்.

சற்று நேரம் கழித்து தன்னுடைய வீட்டின் ஹாலில் ஊஞ்சலில் மேல் இருந்த பாலை பார்த்து விட்டு பின்வருமாறு அந்த பால்காரனை திட்ட ஆரம்பித்தாள் பெரியம்மா. .என்ன திட்டினாள் தெரியமா.

"கட்டலே போறவன் உள்ளேயே வந்து ஊஞ்சலில் பாலையும் வைத்து விட்டு போயிருக்கிறான்.வரட்டும் கட்டலே போறவன் என்று திட்டிக்கொண்டிருக்கும் பொழுதே மஹாபெரியவா அந்த பாட்டியின் வீட்டிற்கு சென்று வாசலில் நிற்கிறார். திகைத்துப்போன பெரியம்மா வாங்கோ பெரியவா எனக்கு கையும் ஓடலே காலும் ஓடலே என்றாள்.

எதைப்பற்றியும் கவலை படாமல் அந்த பெரியம்மாவிடம் பெரியவா கேட்கிறார். என்ன பாட்டி யாரையோ திட்டிண்டு இருந்தே யாரை என்று கேட்கிறார். அந்த பால் காரனை தான் திட்டிண்டு இருந்தேன் என்கிறாள் பெரியம்மா.

பெரியவா கேட்கிறார் என்ன திட்டிட்டு இருந்தேள் பாட்டி சொல்லுகோ என்கிறார். பாட்டியும் உங்கள் முன்னாடி அந்த வார்த்தை வேண்டாமே என்கிறாள் . பரவ இல்லை சொல்லுங்கோ என்கிறாள்

கட்டலே போறவன் என்று திட்டினேன். என்றவுடன் மஹாபெரியவா சொல்கிறார் அந்த கட்டலே போறவன் நான் தான். நான் தான் பாலை பூனை குடிச்சுட்டு போய்டுமே என்று உள்ள கொண்டு வந்து வைத்தேன் என்றார்.

பெரியம்மா அபச்சாரம் பண்ணிட்டேன் மன்னிச்சுடுங்கோ பெரியவா என்று சொன்னவுடன் மஹாபெரியவா சரியாதான் சொல்லியிருக்கிறேள் பாட்டி என்று தன்னுடைய காலில் இருக்கும் கட்டை பாத கொரடை ( சன்யாசிகள் செருப்பை இப்படித்தான் அழைக்க வேண்டும்) காண்பித்தாராம். நான் தினமும் இந்த கட்டை மேலே தானே போறேன் என்றாராம்.

ஒரு புறம் சன்யாசத்திற்கு ஒரு இலக்கணம் வகுத்து அந்த இலக்கணத்திற்கு தானே ஒரு வாழும் உதாரணமாக இருந்து வாழ்ந்து வந்தார். பக்தர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வையும் கொடுத்துக்கொண்டு வாழ்ந்து வரும் மஹாபெரியவாளுக்கு இப்படி ஹாஸ்யம் இல்லையென்றால் பைத்தியமே பிடித்து விடும். அந்த ஹாஸ்யத்தில் கூட மற்றவர்களின் நலனை மையமாக வைத்தே ஹாஸ்யத்தை அனுபவிப்பது என்பது அது இறைவனால் மட்டுமே முடியம்.

எந்த உயரத்தில் இருந்தாலும்

சகா மனிதனின் நிலைக்கு இறங்கினால்

இருக்கும் உயரம் இன்னும் கூட கூடும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square