பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-047

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-047
பிரதி புதன் கிழமை தோறும்
அத்யாயன பட்டர் ஸ்ரீ கண்ணன்
நான் பார்த்த பதிவுகளில்
மறக்கமுடியாத பதிவுகளில்
இந்த பதிவும் ஒன்று
மாமா மஹாபெரியவாளின் திருவடிகளை சென்ற (2018) மார்ச் மாதம் இருபதாம் தேதி சென்றடைந்தார் என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. வழக்கமாக வைஷ்ணவர்கள் அத்யாயனம் செய்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சேவை செய்பவர்களை தான் பட்டர்கள் என்று அழைப்பார்கள். ஆனால் இந்த கண்ணன் பட்டர் சிவன் கோவிலில் வேலை செய்கிறாரே.என்ற சந்தேகம் எனக்கு மட்டுமில்லை உங்களுக்கும் வரும். .
இந்த சந்தேகத்தை போக்குவதற்கு மஹாபெரியவா ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார். வேத அத்யாயனம் செய்து சிவன் கோவில்களிலோ அல்லது பெருமாள் கோவில்களிலோ பணி புரிபவர்கள் அனைவருமே பட்டர்கள் தான் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தினார்கள்.
பொதுவாகவே வேதம் சொல்லும் பிராம்மணர்களின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இறைவன் குடி கொண்டு விடுவான். உடல் முழுவதும் வியாபித்துள்ள இறைவன் முகத்தில் வரும் தேஜஸ் மூலமாக வெளிப்பட்டு எல்லோருக்கும் தரிசனம் கொடுக்கிறான்.
நீங்களும் பார்த்திருக்கலாம். கோவில் பட்டர்கள் முகத்திலும் சிவன் கோவில் அர்ச்சகர்கள் முகத்திலும் விளக்கமுடியாத ஒரு ஒளி வீசுவதை பார்த்திருக்கலாம். இந்த பதிவில் வரும் கண்ணன் பட்டரின் முகத்திலும் ஒரு வித தேஜஸை நீங்கள் கவனித்து இருக்கலாம்.
கண்ணன் பட்டருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மாதம் ஆறு ரூபாய் பிறகு அன்றாடம் இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்யும் பிரசாதங்களை சாப்பிட கொடுப்பார்கள்.
கண்ணன் பட்டரிடம் மஹாபெரியவா ஒரு முறை பேசும்பொழுது "என்னடா கண்ணா சம்பளம் ஆறு ரூபாய் தானே என்று கவலை படறயா? கவலைப்படாதே. மகாலிங்க ஸ்வாமி உனக்கு பலமடங்கு தருவார் என்று பட்டர் சொல்லும்பொழுதே கண்களில் கண்ணீர் விட்டு அழுதார்.ஏன் தெரியுமா? மஹாபெரியவா வாக்கு உண்மையாகி விட்டது.
காஞ்சி மடத்தில் மஹாபெரியவாளுக்கு நாற்பத்தைந்து ஆண்டுகள் பிட்க்ஷை சமையல் செய்து மஹாபெரியவாளின் இதயத்தில் இடம் பிடித்து வைத்திருந்தார் படக்கடை வெங்கட் ராமன் மாமா.. இவருடைய பேரன் தான் கண்ணன் பட்டர்.
படக்கடை வெங்கட்ராமன் மாமாவின் பெண்கள் நான்கு பேருக்கும் நான்கு வேதம் படித்த மாப்பிளைகளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்தார். கண்ணன் பட்டரின் திருமணத்திற்கு ஜாதகம் பார்த்ததில் ஏழாம் பொறுத்தம் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லியும் மஹாபெரியவா அனுகிரஹத்தால் திருமணம் ஆனது.
தாலி கட்டும் சமயத்தில் மஹாபெரியவா சொன்னது. இவாளுக்கு முதலில் ஒரு பையன் பிறப்பான். அவனை வேதத்திற்கு கொடுத்து விடு. பிறகு அந்த பிள்ளைக்கு ஒரு பையன் பிறப்பான். அவனையும் வேதத்திற்கு கொடுத்து விடு. எல்லம் ஷேமமா இருப்பா என்று சொன்னாராம்.
மஹாபெரியவா சொன்ன படியே முதலில் பையன் பிறந்தான். அவனை வேதத்திற்கு கொடுத்து விட்டார்கள். அவர் தான் இந்த கண்ணன் பட்டர். மஹாபெரியவா சொன்னது போலவே கண்ணன் பட்டருக்கு ஓர் மகன் பிறந்தான்.. அந்த குழந்தையையும் வேதத்திற்கு கொடுத்து விட்டார்கள்
இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். மஹாபெரியவா தான் அந்த சாக்ஷத் பரமேஸ்வரன். அம்பாளும் அவரே. மஹாபெரியவா இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற வாக்கியம் எவ்வளவு சத்தியமானது.
சிவன் சொத்து குல நாசம் :
நமக்கு இந்த வாக்கியம் நம்முடைய தாத்தா பாட்டி காலத்திலிருந்து பழக்கப்பட்ட வாக்கியம்.. கண்ணன் பட்டருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது.சிவன் சொத்து குல நாசமென்றால் சிவன் கோவிலில் வேலை செய்து அதற்கு சம்பளம் வாங்கினால் அதுவும் சிவன் சொத்துதானே. தோஷமில்லையா? என்று கேட்டாராம். இதற்கு மஹாபெரியவா பதில் என்ன தெரியுமா ?
மஹாபெரியவா ஒரு பத்து நிமிடங்கள் யோசித்து விட்டு பின்வமாறு சொன்னாராம்
இப்பொழுது உதாரணத்திற்கு சிவன் கோவிலில் அன்ன அபிஷேகம் செய்கிறாய் என்று வைத்துக்கொள். சிவன் என்றாலே பரமசிவனும் அம்பாளும் சரி பாதி தானே. சிவன் மேல் இருக்கும் அன்னத்தை எடுத்து குளத்தில் இருக்கும் மீன்களுக்கும் நதியில் நீருடன் ஓடிக்கொண்டிருக்கும் மீன்களுக்கும் இன்னும் பூத கணங்களுக்கும் போடுவார்கள்.
அம்பாள் மேலிருக்கும் அன்னத்தை நீ சாப்பிடலாம் .வாங்கும் சம்பளத்திற்கு வேதம் சொல்லி விடு. தோஷம் வராது என்று சொன்னாராம். பிறகு வேதப்ரமாண புத்தகத்தில் பார்த்தால் மஹாபெரியவா சொல்லியிருப்பதை மிகவும் விஸ்தாரமாக போட்டிருந்ததாம்.
இன்னும் மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் ஏராளம். மாமா அழுதுகொண்டே சொல்லும் அனுபவங்கள் நம் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் என்பது நிச்சயம்.
மஹாபெரியவாளின் பாதுகைகளை வைத்துக்கொண்டு சிறு வயதில் கிரிக்கெட் விளையாடுவாராம். நாம் மஹாபெரியவா ஒரு பாதுகைக்கு எவ்வளவு ஆளாய் பறக்கிறோம்.
இது வெறும் காணொளி மட்டுமல்ல. நம் இதயத்தை கொள்ளை கொள்ளும் ஒரு அனுபவ பெட்டகம் காணுங்கள். கண்டு மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்
https://www.youtube.com/watch?v=74eQZU74n8Y
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்