top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -052


என் வாழ்வில் மஹாபெரியவா -052

பிரதி வியாழன் தோறும்

மஹாபெரியவாளின் குரு பூஜை சபையேறுகிறது

இத்தனை நாளும் சலங்கை கட்டி ஆடி

உங்கள் குறைகளை தீர்த்த குரு பூஜை

இன்று சபையேறுகிறது

அனுபவங்கள் காணொளி வழியாக

உங்களை வந்து அடையப்போகிறது.

எனக்கும் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்து பக்தர்களை நேர் காணல் கண்டு அவர்களது அனுபவங்களை அவர்களே உங்களுக்கு சொன்னால் அந்தச்செய்தி இன்னும் பலபேருக்கு சென்றையும். வாழ்க்கையில் பிரச்னைகளை சந்தித்து கொண்டிருக்கும் என் சக ஆத்மாக்களின் விடிவு காலத்திற்கு என்னால் என செய்ய முடியும் என்று யோசித்தேன். விளைவு இந்த நேர்காணல்.

கனவு கண்டு விட்டேன்.ஆனால் இடது புறம் செயல்மிழந்த நான் எங்கு நடந்து எவ்வளவு தூரம் போகமுடியும். இது சாத்தியமா? முதலில் மஹாபெரியவா உத்திரவு கொடுக்கவேண்டும். நேர்காணலுக்கு பக்தர்கள் சம்மதிக்க வேண்டும். எனக்காக பக்தர்களின் வீட்டிற்கே சென்று நேர்காணல் எடுக்க வேண்டும்.

 1. இவை எல்லாம் சத்தியபாமா? என்று நினைத்து கொண்டிருந்த அதே நேரத்தில் மஹாபெரியவா எனக்கு உத்திரவு கொடுத்தது.

 2. எனக்காக ஐவர் கொண்ட குழுவை அமைத்து கொடுத்தது.

 3. பக்தர்கள் மறு பேச்சு பேசாமல் சந்தோஷத்துடன் நேர் காணலுக்கு சம்மதித்தது.

 4. மஹாபெரியவாளுக்கு எங்கள் நன்றியை செலுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். என்று பக்தர்கள் சொன்னது.

வாருங்கள் நாம் இந்த வார அற்புதங்களுக்குள் செல்வோம்:

என் வாழ்க்கையில் நான் காணும் அழகான அடுத்தடுத்த மாற்றங்கள் என்னை ஆழமாக சிந்திக்க தூண்டியது மட்மல்லாமல் என்னுடைய உள் நோக்கிய பயணத்திற்கும் வித்திட்டுக்கொண்டிருக்கிறது.

என் வாழ்க்கையில் நான் இதுவரை கண்ட மாற்றங்களுக்கு இருவர் மிகவும் .இன்றியமையாதவர்கள். ஒன்று மஹாபெரியவா.. இரண்டு என்னுடைய சக ஆத்மாக்களாகிய நீங்கள் தான்.

மஹாபெரியவா எனக்கு அருளாசிகளையும் ஆசிர்வாதங்களையும் தாராளமாக வழங்கினார்.. நீங்கள் என் எழுத்துக்களுக்கு அங்கீகாரத்தை கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினீர்கள்.. இன்று நான் உங்கள் கண்களில் ஓரளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.. எல்லாமே சர்வமும் சகலமுமான மஹாபெரியவாளுக்கு அர்ப்பணம்.

என் வாழ்க்கையில் நடந்த அற்புத அனுபவங்கள் ஏராளம்.. ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல.. ஆனால் ஒன்றை நிச்சயம் சொல்லியாக வேண்டும்.. அதுதான் மஹாபெரியவா நமக்கெல்லாம் கொடுத்த ஒன்பது வார குரு பூஜை. எத்தனை பேர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்.

 1. தீர்வே இல்லையென்ற பிரச்சனைகளுக்கு யாரும் எதிர்பாராத கோணத்தில் இருந்து ஒரு தீர்வு கிடைத்தது..

 2. குடும்பத்தில் இருபது வருட ஏழ்மை ஒரே இரவில் கண்ணனுக்கு தெரியாமல் காணாமல் போன அற்புதங்கள்

 3. பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்த அற்புதம்

 4. பிரியப்போகும் கணவன் மனைவிக்கு ஒரு குழந்தையை பரிசாக கொடுத்து மீண்டும் அவர்களை தம்பதியாக இணைத்த அற்புதம்..

 5. மருத்துவர்களே கை விரித்த வேளையில் குரு பூஜை நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆத்மாக்களை மீட்டெடுத்தது..

இப்படி எத்தனையோ அனுபவங்களை நான் எழுதி நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த அற்புதங்கள் எல்லாம் அலங்கார வார்த்தைகளால் தொடுக்கப்பட்டது இல்லை. அற்புதங்களை அனுபவித்த ஆத்மாக்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானே ஒரு வாழும் உதாரணம்.

உங்களில் பெரும்பாலோர் சொன்னது “என் எழுத்துக்கள் உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக இருக்கிறது” என்பது தான் அது... வாழ்க்கையில் நம்பிக்கை பிறந்தது. வாழ்க்கையில் பயம் அகன்றது. இது போல் எவ்வளவோ உங்கள் அபிப்ராயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.

இந்த இடத்தில் தான் என்னுடைய ஆன்மீகப்பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கியது. ஆம். என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவா என்னிடம் கேட்டது,

பெரியவா: ஏண்டா உனக்கு உன்னோட சக ஆத்மாக்கள் மேலே இப்படி ஒரு பரிவும் பாசமும் எப்படிடா வந்தது.

G.R. இதென்ன பெரியவா கேள்வி?. நீங்கள் என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றி இறைவனுக்கு பிறந்த குழந்தையை போல மாற்றி விட்டிர்கள். இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?. ஆனால் ஒன்றை மட்டும் நான் சொல்கிறேன் பெரியவா. எனக்கு நீங்கள் கிடைத்தீர்கள் நான் கரையேறி விட்டேன்.

இன்னும் கரை காண முடியாத ஆத்மாக்கள் எவ்வளவு பேர். இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் சம்சாரம் என்னும் சாகரத்தில் கரை தெரியாமல் இன்னும் தத்தளித்து கொண்டிருக்கின்றார்கள்.

நான் அத்தனை பேருக்கும் கரையேற கை கொடுக்க முடியுமா? தெரியவில்லை!. இருந்தாலும் என்னால் எத்தனை பேரை உங்கள் பாதங்களில் கொண்டு சேர்க்க முடியுமோ அத்தனை பேரை நான் உங்கள் பக்தியை ஊட்டி உங்களிடம் கொண்டு சேர்க்கிறேன் பெரியவா. நீங்கள் அவாளுக்கும் அனுக்கிரஹம் பண்ணுங்கோ பெரியவா என்றேன்.

G.R.:பெரியவா இந்த குரு பூஜை அற்புதங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். ஆனால் எப்படி செய்வது ? என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை பெரியவா என்றேன்.

பெரியவா: ஏண்டா குரு பூஜை அற்புதங்களை படித்தே இத்தனை பேர் வாழ்க்கையில் வெளிச்சம் வந்திருக்கேடா. இந்த அற்புதங்களை அனுபவிச்சவா எல்லார் கிட்டேயும் சொல்லு. அவாளை காணொளி மூலம் பேட்டி கொடுக்க சொல்லு.

அனுபவிச்சவாளே சொன்னனால் அதற்கு இன்னும் சக்தி அதிகம்.. நீ எல்லார் கிட்டேயும் பேசி அவாளையெல்லாம் வீடியோ எடு. விடியோவை பார்க்கும் அத்தனை ஆத்மாக்களும் அவாளை வாழ்த்தும். அவளோட வாழ்கை இன்னும் நன்னா இருக்கும்.. என்றார். இந்த காணொளியும் இன்னும் பலபேருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்கும்.என்றார்

இதே சமயத்தில் தான் எனக்கு ஒன்று தோன்றியது:

நான் பக்தர்களிடம் கேட்டு எழுதி நீங்கள் படித்தே உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்களும் நம்பிக்கையும் பிறந்துள்ளன. இங்கு தான் மஹாபெரியவா எனக்கு காணொளி எடுக்குமாறு உத்தரவும் வந்தது.. இன்று மஹாபெரியவா கொடுத்த உத்தரவிற்கு ஒரு வடிவம் கொடுக்கும் முயற்சியில் என்னுடன் சேர்ந்து நீங்களும் இறங்குங்கள்.

இங்கு முக்கியமான ஐந்து பேரை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.. இந்த முயற்சியில் எனக்கு உறுதுணையாய் இருந்து கனவு கனவாகவே இல்லாமல் உணமையாக்கும் முயற்சியில் ஈடு பட்ட ஆத்மாக்கள் ஐந்து பேர். அவர்கள் பெயரை கீழே கொடுத்துளேன்.

 1. பாலசுப்ரமணியன்

 2. திருமதி ரஞ்சனா

 3. திருமதி அனுஷா

 4. திருமதி சவீதா

 5. திரு சங்கரன்

பாலசுப்ரமணியமும் ரஞ்சனா அவர்களும் என்னுடைய புத்தக வடிவத்திற்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர நம்முடைய புதிய முயற்சியான கானொலிக்கும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அவர்களது அலுவலக வேலைகளுக்கும் வீட்டு கடமைகளுக்கும் இடையில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் என்னுடைய வேலைகளையும் இழுத்து போட்டுகொண்டு மஹாபெரியவா கைங்கர்யத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஐவரில் சவீதா மற்றும் சங்கரன் இருவரும் முதல் இரண்டு நேர்காணலை வெற்றி கரமாக நடத்தி முடித்தவர்கள்.. நேர்காணல் வேலைகளை திருமதி சவிதா அவர்களும் சங்கரன் அவர்களும் எடுத்து செய்கிறார்கள்.

சவிதா அவர்களது வீட்டு வேலைகளை பெங்களூருக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்முடைய நேர்காணல் வேலைகளையும் தலையாய கடமையாக செய்து கொண்டிருக்கிறாரார்கள். இவர்களும் மஹாபெரியவா கைங்கர்யத்திற்கு ஒரு தொய்வு வராமல் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

சங்கரன் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்தான். சங்கரன் வசந்த கல்யாணி இருவரும் மகன் சித்தி உறவுக்கு சொந்தக்கார்கள்.. சங்கரன் வாரம் முழுவதும் இருபத்திநான்கு மணிநேரமும் உழைத்து விட்டு வாரத்தில் தனக்கென்று இருக்கும் இரண்டு நாட்களில் அரை நாளில் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு பிறகு சென்னை வந்து நேர்காணலுக்கு தேவையான அனைத்தையும் மஹாபெரியவா மனசு சந்தோஷப்படும் விதத்தில் மஹாபெரியவா கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்து திருமதி அனுஷா ஒரு குழந்தைக்கு சொந்தக்காரி. வயதான தாய் தந்தை. வாரத்தில் ஆறு நாட்கள் அலுவலக வேலைகள். தனக்கென்று இருக்கும் ஒரு நாளில் சில மணி நேரங்கள் தனக்கென்று எடுத்துக்கொண்டு மீதி நேரத்தை மஹரியாவா கைங்கர்யத்திற்காக செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு கணினி பற்றி அவ்வளவாக தெரியாது. இவர் தான் காலை மாலை இரவு என்று நேரம் பார்க்காமல் என்னுடைய மஹாபெரியவா கைங்கர்யத்தில் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார்கள். இவர்வேறு யாருமல்ல. உங்களுக்கு நன்கு அறிமுகமான முதல் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களின் முதல் நாயகி விஷ்ணுமாயா.

நினைத்து பார்க்கிறேன். வருடம் 2014 அக்டோபர் மாதம் தேதி 25 சனிக்கிழமை நேரம் இரவு 10 .மணி.

அன்று தான் என்னுடைய கர்மாக்கள் எல்லாம் கழிந்து கண்ணுக்கு தெரியாத கர்மாக்களையும் கங்கையில் கழுவி எடுத்து மஹாபெரியவா என்னை காயப்போட்ட நாள்.

அன்று நான் எனக்குள் ஒரு புதிய மனிதனை உணர்ந்தேன். அறுபது வருட கால உணவு பழக்கங்களும் மற்றும் பிறவியிலேயே ஆழமாக பதிந்திருந்த பழக்கங்கள் எல்லாம் ஒரு ராத்திரியில் காற்றில் மறைந்தன.

மஹாபெரியவா எனக்குள் உருவாக்கிய புதிய குணங்களும் ஆத்ம சக்தியும் ஒன்றாக கைகோர்த்து செயல் படத்தொடங்கியது. அத்தனை நாளும் முட்டைக்குள் இருந்த குஞ்சு பறவை போல் இருந்தேன். முட்டை ஓட்டை உடைத்து வெளியில் வந்து உலகை ஒரு மிரள மிரள பார்க்கும் குஞ்சு பறவை போல அன்று நான் பார்த்தேன்.

நான் வீடு வாடகை வீட்டில் இருந்து என் சொந்த வீட்டிற்கு மாறும் பொழுது பூஜை அரை சாமான்கள் பெட்டியோடு காணாமல் போய் விட்டது என்னிடம் இருந்தது ஒரு கை அகல மஹாபெரியவா படம் மட்டுமே.

அன்று என்னிடம் இருந்த ஒரே சொத்து மஹாபெரியாளின் கை அகல படம் மட்டுமே. அந்த படத்தை மையமாக வைத்து தான் என்னுடைய ஆன்மீக பயணம் தொடங்கிற்று. பிறகு வேகம் எடுத்தது தான். இன்று நாம் காணும் நம்முடைய மஹாபெரியவா இறை உலகம்.

இந்த வளர்ச்சியில் நானும் நீங்களும் அனுபவித்த அற்புதங்கள் ஆயிரம் கதை பேசும். நடந்த அற்புதங்கள் அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்.

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் என்னவோ படித்தோம் எப்படியோ வேலை செய்கிறோம். நம்மில் யாருக்கும் முன் அறிமுகம் உண்டா? இல்லையே. பின் எப்படி நாம் அனைவரும் இணைந்தோம்?. நம்மை எல்லாம் இணைத்தது எது?.

ஒற்றை சொல்! ஒருங்கிணைந்த பக்தி! ஒரே ஒழுக்கம்! வானத்தில் ஒரே இறைவனை கண்டோம். அந்த இறை சக்தி நமையெல்லாம் இணைத்து. இன்னுமும் இயக்கிக்கொண்டிருக்கிறது .

பிரதி பலன் என்ன? ஒன்றுமே இல்லையே.. பின் எந்த சக்தி நம்மையெல்லாம் இயக்குகிறது. அதுதான் இறை சக்தி பிரபஞ்ச சக்தி நமையெல்லாம் நாரில் தொடுத்த பூக்கள் போல ஒரு மாலையாக கட்டி தன்னுடைய கழுத்தில் போட்டுகொண்டு இயக்குகிறது. நாம் இயங்குகிறோம் . நம்மை எல்லாம் இயக்கும் சக்தி.

பிரபஞ்சத்தின் அதிபதி

ஈரேழு லோகத்தின் சக்கரவர்த்தி

படைத்தல் காத்தல் அழித்தல்

மூன்றையும் தன்னகத்தே கொண்ட

ஈஸ்வரன் மஹாபெரியவா

நான் நினைத்த காணொளி நேர்காணல் பற்றி அதே நொடியில் மஹாபெரியவா நினைக்கிறார். எண்ணங்களில் தூய்மையும் செயல்களில் புனிதமும் இருந்தால் இறைவன் உங்கள் கைகளை பிடித்து உங்களுடன் சேர்ந்து நடப்பான்.

இந்த சமயத்தில் சென்ற வாரம் மஹாபெரியவா என்னை அழைத்து:

பெரியவா: ஏண்டா என்னோட குரு பூஜை பண்ணினவாளோட அனுபவங்களை எழுதறே.. எல்லாரும் படித்து விட்டு நன்னா இருக்குன்னு சொல்லறா. இதே அற்புதத்தை அனுபவித்தார்கள் சொன்னால் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்து பாருடா. என்றார்.

G.R. பெரியவா அந்த பக்தாள் எல்லாம் பெரிய பெரிய நிறுவனத்திலும் விமான கம்பெனியிலும் பெரிய பதவியில் இருக்கறவா. நான் நேர்காணலுக்கு நேரம் கேட்டால் கொடுப்பாளா பெரியவா என்றேன்.

பெரியவா: நீ என்னை நினச்சேண்டு அவா கிட்டே பேசு. நிச்சயம் உனக்கு நேரம் ஒதுக்கி தருவா என்றார்.. சரி பெரியவா நான் அவா கிட்டே எல்லாம் பேசறேன் என்று சொல்லிவிட்டு குரு பூஜை செய்து வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை அனுபவித்தவர்கள் எல்லோரையும் அழைத்து பேசுவது என்று முடிவு செய்தேன்.

G.R.: பெரியவா இந்த காணொளி எடுக்கும் பொழுது பெண்குழந்தைகளில் சிலர் இன்னும் கல்யாணம் ஆகாதவர்கள், சிலர் திருமண முறிவு ஏற்பட்டு விவாகரத்து ஆனவர்கள். இந்த மாதிரி பெண் குழந்தைகள் வீடியோ தரமுடியாதே பெரியவா. அவாளை எப்படி வீடியோ எடுக்கறது பெரியவா என்று கேட்டேன்.

பெரியவா: அந்த மாதிரி பெண் குழந்தைகளை பேச சொல்லி அந்த பேச்சை ஒளிபரப்பு. மத்தபடி உனக்கு ஒன்னும் பிரச்சனை வராது. நன்னா பண்ணு என்றார்.

முதலில் மூன்று பேரை தேர்ந்தெடுத்தேன். மஹாபெரியவாளை நினைத்துக்கொண்டு முதலில் இருவரை தேர்ந்தேடுத்து பேசினேன். அவர்கள் இருவருக்குமே சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாதவர்கள்.

என்ன ஆச்சரியம் ஒரு நேர்காணல் காலையில் ஒன்பது மணிக்கு உறுதி செய்யப்பட்டது. அன்று பார்த்து ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டதால் அந்த இரண்டு மணி நேரத்தில் அந்த அதிகாரியும் விரைந்து வீட்டிற்கு வந்து நேர் காணலை துவக்கினார். இதுவும் மஹாபெரியவா அற்புதங்களில் ஒன்று என்று உங்களுக்கு புரிகிறதா?

ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள் : நான் இருந்த இடத்தில இருந்து ஒரு எட்டு கூட வெளியில் செல்லவில்லை. மேலே சொன்ன ஐவரும் எல்லா வேலைகளையும்மிக அழகாக செய்து முடித்தார்கள்.

மிகவும் மனசுக்கு திருப்தியாக இருந்தது. இரண்டாவது பக்தரும் ஒரு விமான நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பவர். இந்த பக்தர் மதியம் மூன்று மணிக்கு நேர்காணலுக்கு நேரம் கொடுத்திருந்தார். இந்த நேர்காணலும் மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

இந்த குரு பூஜை நேர் காணல் மிக விரைவில் உங்களுக்காக இந்த இணைய தளத்தில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். விரைவில் வெளியாகும் தேதியும் கிழமையும் அறிவிக்கப்படும். .

உங்களை விட இந்த நேர்காணலை எடுத்த குழுவிற்கும் எனக்கும் மிகவும் அவசரம்... உங்கள் கண்களுக்கும் ஆத்மாவுக்கும் மனசுக்கும் இது மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது நிச்சயம்.

இத்தனை நாளும் நான் எழுதிய மற்றவர்கள் அனுபவங்களை படித்தீர்கள். இப்பொழுது அனுபவித்தவர்கள் அவர்களே சொல்லுவதை கேளுங்கள்.இதுவும் ஒரு புதிய அனுபவம்.

உங்கள் பிரார்த்தனைகள் அனைத்துக்கும் மஹாபெரியவா பதில் அளித்து உங்கள் வாழ்க்கையில் தீராத வளமும் மங்காத புகழும் பெருகட்டும்.உங்களுக்காக நானும் பிரார்த்தனைகள் செய்கிறேன். கவலையையும் பயத்தையும் தூக்கி எறியுங்கள். மஹாபெரியவா பாதங்களை பற்றுங்கள்.

மஹாபெரியவா மனதில்

ஒன்றை சங்கல்பித்து விட்டால்

அந்த சங்கல்பம் தொடும் உயரம்

வானமாகக்கூட இருக்கலாம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
 • Facebook Basic Square
 • Twitter Basic Square
 • Google+ Basic Square
bottom of page