Featured Posts

மஹாபெரியவா பார்வையில் மரணமும் முக்தியும்


மஹாபெரியவா பார்வையில்

மரணமும் முக்தியும்

இறந்த பிறகு இறைவனை சென்றடைய முடியுமா?.

வாழ்ந்த காலங்களில் எப்படி வாழ்ந்தோம் என்று கவலைப்படுவதை விடுத்து இறைவனை சென்றடைய வழி உண்டா? என்ற கேள்விக்கு மஹாபெரியவா சொன்ன பதில் இதோ உங்களுக்காக:

ஒரு ஐம்பது வயதை தாண்டியவரிடம் நீங்கள் மறுபடியும் இந்த பூலோகத்தில் பிறக்க விரும்புகிறீர்களா ? இல்லை இனி பிறவியே இல்லாது இறைவனை சென்றடைய விரும்புகிறீர்களா ? என்ற கேள்விக்கு நிச்சயம் என்ன பதிலாக இருக்கும் தெரியுமா. இனி எனக்கு பிறப்பே வேண்டாம். இறைவனை சென்றடைய விரும்புகிறேன் என்ற பதில் தான் நிச்சயம் வரும்.

உறக்கம் மரணத்தின் ஒத்திகை

நாம் தினமும் உறங்கிறோம். கனவுகள் இல்லாத அயர்ந்த தூக்கம் என்ன தெரியுமா? மரணத்தின் ஒத்திகை. இதற்கு பெயர் என்ன தெரியுமா? நித்ய பிரளயம் என்று பெயர்.

ஒருவரின் மரணத்தின் பொழுது அந்த மரண அவஸ்தயில் உடல் உபாதைகள் மீது தான் கவனம் இருக்கும். அல்லது சேர்த்தசொத்துக்களை அப்படியே விட்டு விட்டு போகிறோமே! என்றகவலை மேலோங்கி இருக்கும். குழந்தைகளை பற்றி கவலைகள் வரும்..இந்த மாதிரி சமயங்களில் இறை சிந்தனை என்பது நிச்சயம் வராது.

இதற்கு மஹாபெரியவா சொல்லும் யோசனைகள்.

தினமும் உறங்கப்போவதற்கு முன் இறை நாமத்தை சொல்லிவிட்டு உறங்கச்செல்லுங்கள். தினந்தோறும் உங்கள் வேலைகளுக்கு இடையிலும் பகவான் நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் இறை சிந்தனை நிச்சயம் வரும்.

கீதையில் கண்ணனும் இதையே வலியுறுத்துகிறான்.. இறக்கும் தருவாயில் என் நாமத்தை சொல்லி என்னை அழை நான் உன்னை வந்து ஆட்கொள்கிறேன் என்று சொல்கிறான். சமயத்தலைவர்கள் பலரும் இதையே சொல்கிறார்கள்.

இது என்னுடைய கருத்து:

பாவம் செய்தவன் தான் மனிதப்பிறவி எடுப்பான். மனிதப்பிறவி எடுத்தால் பாவங்கள் செய்வான். மனிதன் பிறந்து தன்னுடைய வாழ்நாளில் பாதியை வாழ்கை என்ற பெயரில் வாழ்ந்து பாவங்கள் செய்து விடுகிறான்.

மீதி இருக்கும் வாழ்நாளில் தான் பெற்ற அனுபவங்களையும் அவமானங்களையும் நினைத்து திருந்தி சரியானபதையில் வாழ்க்கையை அமைத்து கொண்டால் இறைவனும் நமக்கு துணை நிறப்பான்.. செய்த பாவங்களுக்கு மனப்பூர்வமாக உணர்ந்து இறைவனிடம் சரணடைந்தால் இறைவன் நிச்சயம் நமக்கு கை கொடுப்பான்.

சாகும் வரை ஏன் பாவங்கள் செய்து இறைவனை அழைக்க வேண்டும். வாழும் நாட்களிலேயே நல்ல முறையில் வாழ்ந்ததால் பிறவிப்பிணியில் இருந்து விடு பட்டு இறைவனின் பாதங்களை அடையலாம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square