Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-29 பாகம் -II - மைதிலி


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-29

பாகம் -II - மைதிலி

பிரதி திங்கட்கிழமை தோறும்

மஹாபெரியவாளை ஒரு முறை

தரிசனம் காணவில்லையே என்ற ஏக்கமா

மஹாபெரியவா நம்மிடம் பேசவில்லையே என்ற ஏக்கமா

இந்த பதிவை படியுங்கள்

உங்களுக்கான விடையும் கிடைக்கும்

உங்கள் ஏக்கமும் தணியும்

மைதிலியின் இரண்டாவது பிரார்த்தனை:

தன்னுடைய குழப்பமான மனது, இரவில் பேய் பயம். எதிலும் முடிவெடுக்க முடியாத மனக்குழப்பம் போன்றவைகள் அகன்று ஒரு தெளிவான மன நிலை வேண்டும்..

மைதிலி சென்னையில் வேலை கிடைத்து அவளது சொந்தக்காரர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.. வாழ்கை அவளுக்கும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. நன்றாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் எதிர்பாராமல் வந்த ஒரு தடை.என்ன தெரியுமா?

மைதிலி தங்கியிருந்த வீட்டில் மைதிலிக்கு இடம் கொடுத்து உதவியும் செய்த மைதிலியின் சொந்தம் திடீரென்று இறந்து விட்டார். அப்பொழுதான் மைதிலி தன்னுடைய பெற்றோர்களை விட்டு தனியே வெளி உலகத்தில் வந்து தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறாள்.

ஆலோசனை சொல்ல ஒருவரும் கிடையாது.. தன்னுடைய துக்கங்களையும் ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ள ஓர் தோழி இல்லை.. என்ன செய்வாள் மைதிலி.. தனிமையில் இருந்து கொண்டு பேச்சு துணையும் இல்லாமல் வாழும் பொழுது வீட்டின் உத்திரத்தில் பல்லி கத்தும் சப்தம் கூட தேவையற்ற ஒரு பயத்தை ஏற்படுத்தும்..

இரவில் அசையும் ஒவ்வொரு நிழலும் ஒரு பேயின் தோற்றத்தை கொடுக்கும்.. மைதிலியின் நிலைமை எப்படி தெரியுமா இருந்தது?. காட்டில் பிறந்து இரண்டே நாள் ஆன யானை குட்டி ஒன்று ஒரு யானையின் கூட்டத்தில் இருந்து பிரிந்து தன் தாயையும் இழந்து நடு இரவில் திசை தெரியாமல் அழுது கொண்டிருக்கும் யானை குட்டியை போல இருந்தாள் மைதிலி..

எப்படி யானை குட்டிக்கு திசை தெரியாது. தன்னை வேட்டையாடி சாப்பிடும் விலங்குகளை தெரியாது. எல்லா விலங்குகளையும் தன்னுடைய தாயக நினைத்து அந்த விலங்குகள் பின்னும் செல்லும் ஒரு யானை குட்டியின் நிலையில்தான் மைதிலி இருந்தாள்.

பல தினங்களில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புவாள். ஒவ்வொரு மின்னஞ்சலும் மிகப்பெரிய மின்னஞ்சலாக இருக்கும். தன்னுடைய பயம் ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பெரிய மின்னஞ்சலாக இருக்கும்..

நானும் என் பெண் என்னை விட்டு வெளியூரில் தள்ளி இருந்து அவளுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை இருந்ததால் எப்படி பதில் எழுத்துவேனோ அப்படி மனதில் நினைத்துக்கொண்டு மைதிலிக்கு பொருத்தமாக ஒரு தந்தை எழுதுவது போல ஊக்கம் கொடுத்து எழுதுவேன்.

மைதிலி என்றில்லை யார் என்னிடம் தங்களுடைய கஷ்டங்களை சொன்னலும் நான் ஓய்வு பற்றி கவலை படாமல் என்னுடைய விரல் வலியையும் பொருட்படுத்தாமல் என் மனதுக்கு என் பதில் கடிதம் திருப்தி அளிக்கும் வகையில் எழுதுவேன். நான் எழுதுவது என்னை துன்பத்தில் உள்ளவர்களின் மன நிலையில் இருந்து எழுதுவேன்.

நான் இந்தமாதிரி மன குழப்பத்தில் உள்ளவர்களுக்கு சொல்வதெல்லாம் காஞ்சி அதிஷ்டானம் சென்று மஹாபெரியவா முன் அமர்ந்து த்யானம் செய்து விட்டு பிறகு இரண்டு பெரியவாளையும் நமஸ்கரித்து ஆசிர்வாதம் வாங்கினால் எல்லாம் சரியாகி விடும் என்பதுதான். இதன்படி செய்தால் நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சன உண்மை.

இப்பொழுது மஹாபெரியவா அற்புதங்களுக்குள் வருவோம்.

மைதிலி வாரம் தவறாமல் மஹாபெரியவா குரு பூஜை செய்து விட்டு தான் செய்த சர்க்கரை பொங்கலை எனக்கு வாட்ஸப்பில் படமாக அனுப்புவாள். எனக்கே சாப்பிடணும் போலெ இருக்கும் . அவ்வளவு பக்தி சிரத்தையாக செய்வாள். மஹாபெரியவா பூஜை செய்யும் முறையும் அவ்வளவு அழகாக இருக்கும்.

எனக்கு எப்படியாவது மைதிலிக்கு இந்த குழப்பத்தில் இருந்தும் பயத்தில் இருந்தும் மஹாபெரியவாளிடம் இருந்து நிவாரணம் வாங்கித்தர வேண்டும் என்று நினைத்தேன். மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தேன்.

“பெரியவா மைதிலிக்கு அவளுடைய கம்ப்யூட்டரில் காணாமல் போன விவரங்களை அவள் மடியில் அடுத்த நாளே கொட்டி ஒரு தீர்வை கொடுத்து வேலையையும் காப்பாற்றி கொடுத்தீர்கள்..

இப்பொழுது அவளுடைய மனக்குழப்பத்திற்கும் பேய் பயத்திற்கும் ஒரு தீர்வு கொடுங்கள் பெரியவா. அவளுக்கு கல்யாணம் ஆகும் பொழுது மனதளவில் மைதிலி ஆரோக்கியமாக இருக்கவேண்டும். மறுபடியும் சொல்கிறேன் பெரியவா என் பெண்ணுக்கு கேட்பது போல் கேட்கிறேன்.. கருணை காட்டுங்கள் பெரியவா என்று சொல்லி என் பிரார்த்தனையை முடித்து கொண்டேன்.

ஒரு இரண்டு நிமிடங்கள் அமைதி. பின் மஹாபெரியவா பேச ஆரம்பிக்கிறார். இதோ உங்களுக்காக.

பெரியவா: ஒன்னும் கவலை பட வேண்டாம் என்று அவள் கிட்டே சொல்லு. இன்னும் ரெண்டு நாளில் அவள் என்னுடைய அதிஷ்டானத்திற்கு வருவாள். அங்கு அவளுக்கு நடக்க வேண்டியது எல்லாம் நடக்கும். என்று

G.R: என்ன பெரியவா நடக்கும். என்று கேட்டேன்.

பெரியவா: அதெல்லாம் உனக்கு எதுக்குடா .அவளுக்கு குழப்பமும் பயமும் போகணும் அதுதானே உனக்கும் வேணும். அவளுக்கும் வேணும். ஒன்னும் தாபப்படாதே. நல்லது நடக்கும்.

நீ இப்போ ஒன்னும் அவளுக்கு சொல்ல வேண்டாம். என் அதிஷ்டானத்திற்கு போயிட்டு வரேன் என்று சொன்னால் அதை மட்டும் கேட்டுக்கோ. பாக்கி அவள் திரும்பி வந்ததும் உன்னிடம் சொல்லுவாள். என்றார்.

G.R: சரி பெரியவா நானும் நீங்கள் சொன்னபடியே செய்யறேன். மைதிலி சரியானால் போறும் பெரியவா.

பெரியவா என்னடா பெத்த அப்பா மாதிரி இப்படி கவலை படறே.

G.R: எனக்கு பெண் குழந்தை இல்லை பெரியவா. அதுனாலே எந்த பெண்ணை பார்த்தாலும் என் பெண்ணாவே நினைத்து பேசுவேன் பழகுவேன். மைதிலியும் என் பெண் மாதிரி தான் பெரியவா..

எந்த பெண் பிரச்சனைகளோடு வந்தாலும் இப்படித்தான் இருப்பேன். நீங்கள் தானே என்னை ஒரு வித்யாசத்தோடு கூடிய மனுஷனாக மாற்றினீர்கள். நான் முதலில் இப்படி இல்லையே பெரியவா.

பெரியவா: உனக்கு உன்னை பத்தி தெரிஞ்சது அவ்வளவுதான். நீ ஒரு வித்யாசமான ஆத்மா. அதுனால தான் உன்னை காஞ்சிக்கு அழைத்து ஆசிர்வாதம் பன்னினேன்..

நீ பிறந்த காரணமே வேறே. உனக்கு போகப்போக தெரியும்.என்றார்.இரண்டு நாட்கள் கழிந்தன. மைதிலி மஹாபெரியவா சொன்ன மாதிரி அதிஷ்டானம் சென்றதாகவும் அங்கு நடந்ததை அவளே சொல்லுகிறாள் கேளுங்கள்.

மைதிலி: "மாமா நான் காஞ்சி அதிஷ்டானம் போய்ட்டு வந்தேன். அங்கு நினைத்து பார்க்க முடியாத அற்புதங்கள் நடந்தன என்றாள்.

G.R:: அவளிடம் எண்னென்று கேட்டேன்.அவள் மேலும் சொல்ல ஆரம்பித்தாள்.

மைதிலி: மாமா அங்கு பால பெரியவா சந்திர மௌலீஸ்வரர் பூஜை பண்ணிண்டு இருந்தா. அப்பொழுது பால பெரியவா என்னை பார்த்து சொன்னார்."நீ தயராகு சந்தர மௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தத்தில் ஸ்னானம் பண்ணனும் என்றார்,

மைதிலி பெரியவா நான் மாற்றுத்துணி எதுவும் எடுத்துண்டு வரலை.

பால பெரியவா: எதையும் காதில் போட்டு கொள்ளவில்லை.

அடுத்த சில வினாடிகளில் ஒரு மாமி வந்து ஒரு ரவிக்கையும் பாவாடையும் கொடுத்தாள். மாமி யாரென்று தெரியாது. ஆனால் மைதிலிக்கு அளவெடுத்து தைத்தாற்போல் அவ்வளவு கட்சிதமாக இருந்தது.

மைதிலி தலையில் அத்தனை அபிஷேக தீர்த்தத்தையும் கொட்டி ஸ்னானம் செய்ய வைத்தார்கள். பிறகு துடைத்துக்கொண்டு மைதிலி தன்னுடைய உடையை மாற்றிக்கொண்டாள்.

மைதிலி உடையை மட்டுமா மாற்றிக்கொண்டாள். அவளே மாறி இருந்தாள். அவளுடைய மன குழப்பம் எங்கே போனது. மைதிலியுடைய பேய் பயம் என்ன ஆனது. மைதிலி ஒரு புது மனுஷியாக மாறினாள்.

உங்களுக்கு ஒன்று தெரிகிறதா?

மஹாபெரியவா இன்னும் அங்கு அதிஷ்டானத்தில்தான் வாழ்கிறார். எல்லோருக்கும் இன்று ஆசிர்வாதமும் அனுகிரஹமும் செய்து கொண்டிருக்கிறார்.

பால பெரியவாளுக்கு மைதிலியை பற்றி ஒன்றும் தெரியாது. பிறகு இது எப்படி நடந்தது. மஹாபெரியவா இன்றும் பால பெரியவளிடமும் புது பெரியவளிடமும் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியவில்லையா.

இன்னும் பல நூறு ஆண்டுகள் அங்கே தான் இருக்கப்போகிறார்..கிளம்புங்கள் காஞ்சி அதிஷ்டானத்திற்க