ஸ்ரீகுருதுதி

பெரியவா சரணம். #ஸ்ரீகுருதுதி பிறவியெனும் கடல்கடக்கத் தோணியுந்தன் அருட்கருணை! பிறவிப்பயன் பெற்றனமே ஞானியுந்தன் தரிசனத்தால்! அரியமுத்தி வழியெனவே அருள்தருமே மானுடர்க்கும் அரியதவச் சீலனுந்தன் அணிமலர்தாள் திருநிழலும்! தனிவுஇலா வினைகளைந்தே எழில்வாழ்வும் எமக்கமைய கனிவுபொழி திருமகத்தோன் தரிசனமும் அருள்தரவே உற்றபெருந் தவத்தோனே நல்லறத்தின் நாயகமே குற்றமிலா பத்தியோடு சரண்புகுந்தோம் சங்கரனே! குருவருள் குறையின்றி வாழவைக்கும் சத்தியம் உணர்வோம்! சங்கரனைச் சரண்புகுந்தே சங்கடங்கள் நீங்கப்பெறுவோம்!! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.