Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-051


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-051

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

மஹாபெரியவாளை தெரிந்தவர்களுக்கு பிரதோஷ மாமாவை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் .மஹாபெரியவாளுடைய அனுஷ தினத்தன்றும் மஹாபெரியவா ஜெயந்தி அன்றும் கோலாகலமாக அந்த நாட்களை கொடண்டடுவது பிரதோஷ மாமாவின் வழக்கம்.

அன்று மட்டும் ஆயிரம் பக்தர்களாவது சாப்பிடுவார்கள். இந்த வைபவம் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவின் போது மஹாபெரியவா அனுகிரஹத்தால் ஒரு அற்புதம் நடந்து விடும். அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தை இன்று நாமும் அனுபவிப்போம்.

எல்லோருக்கும் உள்ளம் என்று ஒன்று உண்டு. மனிதர்களாகிய நமக்கு இருப்பது உள்ளம். ஆனால் மஹான்களுக்கும் அவதார புருஷர்களுக்கு இருக்கும் உள்ளதை திருவுள்ளம் என்பார்கள்.

இந்த திருவுள்ளத்திற்கு இந்த பிரபஞ்சம் முழுவதும் பயணிக்கும் ஆற்றல் உண்டு. இருந்த இடத்தில் இருந்துகொண்டே கண்களை மூடி தியானித்தால் மஹான்களின் மனத்திரையில் நடப்பது முழுவதும் ஒரு திரைப்படம் போல ஓடும்.

அதே போல் அனுக்கிரஹம் செய்தாலும் அந்த அனுகிரஹமும் ஆசிர்வாதமும் சென்றடைய தூரம் ஒரு பொருட்டு அல்ல. ஒரு இடத்தில் ஒரு பொருள் ஒருவருக்கு தேவைப்படுகிறது என்றால் அந்த தேவையை பூர்த்தி செய்யும் ஒருவரிடம் அந்த தேவைக்கான பொருளும் இருக்கும்.. பொருளை கொடுக்கும் மனமும் இருக்கும். இதற்கு தூரம் ஒரு பொருட்டே அல்ல. மஹாபெரியவா அற்புதங்கள் எங்கு வேண்டுமானாலும் பாயும்.

ஒருமுறை மஹாபெரியவா அனுஷ தினத்தன்று பிரதோஷ மாமா ஆயிரம் பேருக்கு உணவு பரிமாற திட்டமிட்டிருந்தார். எல்லாமே வழக்கப்படி நன்றாகவே நடந்து கொண்டிருந்தது.

ஆனால் அன்று மட்டும் நூறு லிட்டர் பால் வேண்டும். ஆனால் பால் வரவில்லை. பிரதோஷ மாமாவிற்கு தெரிந்த ஒரே தெய்வம் மஹாபெரியவா தான்.பால் வரவில்லை என்று தெரிந்த உடனே மாமா தன்னுடைய பூஜை அறைக்கு சென்று மஹாபெரியவாளை வேண்டினார்.

அதே நேரத்தில் தொலைபேசி அழைப்பு மணி அழைக்கிறது. அழைப்பின் விவரம் இதோ உங்களுக்காக "எங்களிடம் நூறு லிட்டர் பால் இருக்கிறது. நீங்கள் இன்று மஹாபெரியவாளின் அனுஷம் கொண்டுகிறீர்களே. நாங்கள் அந்த நூறு லிட்டர் பாலை உங்கள் வழிபாட்டிற்கு நாங்களும் கைங்கர்யம் செய்வதாக நினைத்து அனுப்பினால் ஏற்றுக்கொள்வீர்களா” என்று கேட்கிறார்கள்.

கரும்பு தின்ன கூலியா ? மாமாவும் அனுப்புங்கள் என்றார். பாலும் வந்தது பந்தியும் நடந்தது.

மேலும் ஒரு அற்புதம்:

அதே நாளன்று மாலை நேரம். பூஜைக்கு ஒன்பது வகையான புஷ்பங்கள் தேவை. ஏற்பாடு செய்தாகி விட்டது. ஆனால் பூஜை நேரத்தில் பூ வரவில்லை. வழக்கமாக பூ கொண்டு வருபவன் அன்று எதோ காரணத்தால் தான் சொன்னபடி பூக்களை கொண்டுவர இயலவில்லை. சரி இருக்கும் பூக்களை வைத்துக்கொண்டு பூஜையையை முடித்து விடலாம் என்று மாமா நினைத்தார்.

அடுத்த வினாடி ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு அன்பார் சொல்கிறார்."என்னிடம் நீங்கள் பூஜை செய்யும் ஒன்பது வகையான பூக்கள் இருக்கிறது. நான் உங்கள் பெரியவர் பூஜைக்கு கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா. என்ற கேள்வி

மாமா சொல்கிறார் மஹாபெரியவாளுக்கு பக்தர்கள் இடையில் பாகுபாடு கிடையாது. யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும். பூக்களை கொண்டு வாருங்கள் என்று பிரதோஷ மாமா சொல்ல பூக்களும் வர மஹாபெரியவா அனுஷ பூஜை இனிதே நிறைவேறியது.

இங்கு நான் ஒன்றை நினைவு கூறுகிறேன். என்னுடைய சரீரசுத்தி பயணத்தில் என்னுடைய அறுபது வருடகால உணவு பழக்கங்கங்களை ஒரே இரவில் தூக்கி ஏறிய செய்த அற்புதம் இன்று நினைத்தாலும் எனக்கு உடம்பு புல்லரிக்கிறது. அப்பொழுதெல்லாம் மஹாபெரியவா சொல்லுவார்.

நீ விட வேண்டும் என்று மட்டும் நினை. அதை விட வைப்பது என் வேலை என்று சொல்லுவார். அன்று நினைத்தேன் அன்றே என்னை விடவைத்தார். இன்று சரீர சுத்தி பெற்று உங்கள் முன்னால் G.R. ஆகிய நான். பிரதோஷமமாவும் நினைத்தார் நடந்தது.

மஹாபெரியவாளின் அற்புதங்களுக்கு எந்த கட்டுப்படும் கிடையாது.காலத்தை கடந்து நிற்கும் அற்புதங்கள்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்