பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-048

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-04
பிரதி புதன் கிழமை தோறும்
ஸ்ரீமான் துஷ்யந்த் ஸ்ரீதர்
நாம் எத்தனையோ பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்களை கண்டும் கேட்டும் பார்த்தும் அனுபவித்திருக்கிறோம்.
இந்த காணொலியை பொறுத்த வரை இதன் நாயகர் ஒரு வைஷ்ணவர். இவர் ஒரு பொறியாளர்.. பிட்ஸ் பிலானியில் பட்டம் முடித்தவர்... சொல்லவும் வேண்டுமோ? ஒரு அறிவியலே ஆன்மீகமாக உருவெடுத்து வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் இன்னும் ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும் இன்றைய தலை முறையினருக்கு ஏற்ப மிகவும் சிலாகித்து சொல்லி எல்லா தலைமுறையினரின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் இளைஞர் துஷ்யந்த் ஸ்ரீதர்.
இறைவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை!. பழகிய கும்கி யானைகளை வைத்து காட்டில் உள்ள பழகாத யானைகளை பிடிப்பது போலெ கலியின் தாக்கத்தில் இருக்கும் இளைஞர்களை தெளிய வைக்க ஒரு துஷ்யந்த் ஸ்ரீதர் என்னும் இளைஞரை வைத்தே தெளிய வைத்து விடலாம் என்று முடிவெடுத்திருப்பர் போல இறைவன்.
அதன் காரணமாக இவரை வேத மாதாவின் புதல்வனாகவே பிறக்க வைத்து அவருக்குள் ஓடும் ரத்தத்திலும் ஒவ்வொரு செல்களிலும் ஆன்மீகத்தையும் வேதத்தையும் இன்னும் எல்லா காவிய புராணங்களை பதித்து விட்டானோ ? என்ற சந்தேகம் எல்லோருக்குமே எழுவது நியாயம் தானே.
துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டவர்களுக்கு தெரியும் அப்படியொரு வார்த்தை பிரவாகம்.. ஒரு அணைக்கட்டின் நீரை திறந்து விட்டால் எப்படி பாய்ந்து ஓடுமோ அப்படி ஒரு சொல் பிரவாகம். என்ன ஒரு அசாத்திய ஞாபக சக்தி. ஒருமுறை இவரது உபன்யாசங்களை கேட்டவர்கள் நிச்சயம் திரும்ப திரும்ப கேட்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
இனி இவரது மஹாபெரியவா அனுபவங்களை கேட்போம்.. துஷ்யந்த் ஸ்ரீதர் ஒருமுறை கூட மஹாபெரியவா ஸ்தூலமாக இருக்கும் பொழுது தரிசனம் செய்ததில்லை.
இது உங்களுக்கு: மஹாபெரியவா வாழ்ந்தகாலத்திலேயே நாமும் வாழ்ந்து ஒரு முறை கூட தரிசனம் செய்யவில்லையே என்று ஏங்கும் உங்களுக்கு இவருடைய அனுபவம் நிச்சயம் உங்கள் ஏக்கத்தை தணிக்கும்.. .காலம் தாழ்த்தாமல் காணொளியை காணுங்கள்.
முதல் அனுபவம்
துஷ்யந்த் ஸ்ரீதர் பள்ளி இறுதி தேர்வு நெருங்கி கொண்டிருந்த சமயம். வழக்கத்திற்கு மாறாக படித்தது எல்லாம் மறந்து விடும்... என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்களது குடும்ப நண்பர் ஒருவர் இவர்களை காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவா அதிஷ்டானம் போய் சேவித்து விட்டு வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சொன்னார்கள்.
இவரும் இவரது தாயாரும் காஞ்சி சென்றார்கள்... அங்கு ஆரம்பித்த அற்புதம் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம் எல்லாம் கேட்பவர்களை வியக்க வைக்கும். நீங்களே கேளுங்கள் அவர் குரலில்.
மஹாபெரியவா ஹயக்ரீவர் அவதாரமோ?
துஷ்யந்த் ஸ்ரீதர் தன்னுடைய அனுபவங்களை சொல்லும் பொழுது மஹாபெரியவா ஒரு ஹயக்ரீவர் அவதாரமோ என்று நினைக்க தோன்றுகிறது.. இப்படி சொல்ல என்ன காரணம் என்பதை அவரே சொல்கிறார். கேளுங்கள்.
மஹாபெரியவா சைவ சித்தாந்தத்தை தாண்டிய மஹான்
சைவமோ வைணவமோ எது நியாயமோ அதன் பக்கம் நான் நிற்பேன் என்ற நடு நிலை மாறாத பிரபஞ்ச தெய்வம். இந்த நிகழ்வயும் கேளுங்கள்.
நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டது மஹாபெரியவா என்னும் சாகரத்தில் ஒரு துளி தான்.. சாகரத்தில் மூழ்க வேண்டுமானால் இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=hwdHr43QrwY&t=919s
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்